தூங்கும் முன் தபாரகல்லதீ அத்தியாயம் ஓதலாமா?

கேள்வி :

இரவில் தபாரகல்லதி அத்தியாயத்தை ஒதுவது சம்பந்தமாக வரும் ஹதீஸ் என்ன தரத்தில் உள்ளது?

தல்ஹா

பதில் :

السنن الكبرى للنسائي – كتاب عمل اليوم والليلة

أخبرنا أبو داود ، قال : حدثنا الحسن ، قال : حدثنا زهير ، قال : سألت أبا الزبير : أسمعت جابرا يذكر أن نبي الله صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ الم تنزيل وتبارك ؟ ” . قال : ليس جابر حدثنيه ، ولكن حدثني صفوان أو أبو صفوان

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும், தபாரகல்லதீ (என்று துவங்கும் 67 ஆவது) அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்க மாட்டார்கள்.

நூல்கள் : அஸ்ஸுனனுல் குப்ரா, ஹாகிம், ஷுஅபுல் ஈமான்.

இந்தச் செய்தியில் நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் உட்பட ஸஃப்வான், அபுஸ்ஸுபைர், ஸுஹைர் ஹசன், அபூதாவூத் ஆக ஆறு நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும்.

எனவே இரவில் உறங்கச் செல்லும் முன் இவ்விரு அத்தியாயங்களை ஓதுவது சுன்னத் ஆகும்.