ஏகத்துவம் – நவம்பர் 2010

தலையங்கம்

முஸ்லிம்களின் உரிமை காத்த அடிமை இந்தியா

முஸ்லிம்களுக்கு முழுவதும் சொந்தமான பள்ளிவாசலையும் அதற்குரிய இடத்தையும் அபகரிக்கும் வகையில் அநியாயத் தீர்ப்பை 30.09.2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியது.

முஸ்லிம்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களது உயிரையும், உடமையையும் இழந்து போராடினர். காரணம், தங்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக!

ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் சொத்துரிமை அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு கெட்ட எடுத்துக்காட்டாக உள்ளது.

பாபரி மஸ்ஜிதின் இதே விவகாரம், சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் 1885ல் நீதிமன்றத்திற்கு வந்தது.

வழக்கு எண் 61/280/1885ஆகப் பதியப்பட்ட இந்த வழக்கை மஹாந்த் ரகுபர் தாஸ் என்பவர் தாக்கல் செய்தார். ராம சபுத்ரா எனும் 21 அடி கிழ மேலாகவும், 17 அடி தென்வடலாகவும் அமைந்த ராமர் பாதம் பதிந்த மேடை தான் ராமர் பிறந்த இடமாகும். தாங்க முடியாத வெப்பம் மற்றும் குளிரால் அங்கு வணங்க முடியவில்லை. அதனால் அந்த மேடைக்கு மேலாக ஒரு கோயிலை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டிருந்தார்.

அப்போது பைசாபாத்தின் உதவி நீதிபதியாக இருந்த பண்டிட் ஹரி கிருஷ்ணன் பிப்ரவரி 24, 1885ல் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து, அதாவது கோயில் கட்ட அனுமதி மறுத்து தீர்ப்பளித்தார். அனுமதி மறுத்ததற்கான காரணத்தையும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

கோயில் கட்டுவதற்கு அனுமதியளிப்பது நாம் கொண்டிருக்கக் கூடிய பொதுவான கொள்கைக்கு எதிரானதாகும். அவ்வாறு கோயில் கட்ட நாம் அனுமதித்தால் இந்துக்கள் கோயிலில் மணியடிப்பார்கள்; சங்கு ஊதுவார்கள். இது இந்த வழியே தாண்டிச் செல்லும் முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். இதில் இரு சமுதாயமும் அடித்துக் கொண்டு கலவரம் ஏற்பட்டு, அதில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாக நேரிடும். அதனால் கோயில் கட்ட அனுமதி என்பது கலவரத்திற்குப் போடும் அஸ்திவாரம் ஆகும்.

இவ்வாறு அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் சபுத்ரா அமைந்திருக்கும் இடம் ரகுபர் தாஸிற்குச் சொந்தமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதல் மேல் முறையீடு

இதை எதிர்த்து ரகுபர் தாஸ், பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கு எண் 27/1886ஆகப் பதியப்பட்ட இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நீதிபதி எஃப்.இ.ஏ. சேமியர், பாபரி மஸ்ஜித் இடத்திற்கு நேரடி வருகையளித்துப் பார்வையிடுகின்றார்.

அவ்வாறு பார்வையிட்டு விட்டு மார்ச் 18, 1886ல் இந்த மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, பைசாபாத் உதவி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தார்.

மஹாந்த் ரகுபர் தாஸிற்கு சபுத்ரா அமைந்திருக்கும் இடம் சொந்தமானது என்ற உதவி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து விடுகின்றார்.

“இந்துக்கள் புனிதமாகக் கருதும் இடத்தில் பள்ளி கட்டப்பட்டிருப்பது மிகவும் துரதிஷ்டமானது. ஆனால் இது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு. இதற்கு இப்போது பரிகாரம் காண முடியாது. காரணம், இது மிகவும் காலம் கடந்தது” என்று அவர் தனது தீர்ப்பின் போது தெரிவித்தார். மேலும் தற்போதைய நிலையே தொடரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாம் மேல் முறையீடு

மகாந்த் ரகுபர் தாஸ் இதை எதிர்த்து ஆவுத் நீதி ஆணையரிடம் இரண்டாம் மேல் முறையீடு செய்கிறார். ஆவுத் நீதிபதி டபுள்யூ. யங்க்  (ர. வர்ன்ய்ஞ்) இந்த இரண்டாம் மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து நவம்பர் 1, 1886 அன்று தீர்ப்பளிக்கின்றார். அவர் அளித்த தீர்ப்பிலும் சேமியர் போன்றே சில கருத்துக்களைப் பதிவு செய்கின்றார்.

“சபுத்ரா நிலம் தனக்குச் சொந்தமானது என்று மனுதாரர் உரிமை கொண்டாடுகிறார். ஆனால் ஆவணங்களின்படி மனுதாரருக்கு இந்த நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை. அத்துடன் சிவில் அதிகாரிகள் (ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்) சரியான விதத்திலேயே மனுதாரரின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்” என தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

இது இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் பாபரி மஸ்ஜித் தொடர்பாக நடந்த வழக்கு விபரம். வெள்ளையர்கள் நீதித் துறையிலும் நிர்வாகத் துறையிலும் மதத்திற்கு அப்பாற்பட்டு நடந்திருக்கின்றனர். அவர்களுக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகளும் அதே கொள்கையின்படி நடந்திருக்கின்றனர்.

வெள்ளையர் காலத்தில் நீதிபதிகள் நீதித்துறையின் வேலையைச் செய்தனர். அதனால் இப்படி ஓர் அற்புதமான தீர்ப்பை அவர்கள் வழங்கி, நாட்டை சரியான முறையில் ஆட்சி செய்தனர்.

இந்த வழக்கை முதன்முதலில் விசாரித்த உதவி நீதிபதி பண்டிட் ஹரி கிருஷ்ணன் ஒரு பிராமணர். ஆனாலும் அவர் தனது நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பளிக்காமல் சட்டத்தின் அடிப்படையில் இப்படி ஒரு அருமையான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

நீறு பூத்த நெருப்பாக உள்ள ஒரு விஷயத்தை நீரூற்றி அணைக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள். ஆனால் இன்றுள்ள நீதிபதிகள் நீறு பூத்த நெருப்பை ஊதி பெரு நெருப்பாக ஆக்கியிருக்கின்றனர்.

இன்றைய நீதிபதிகள் கருப்பு உடை அணிவதற்குப் பதிலாக காவி உடை அணிந்து இந்துத்வாவின் திட்டங்களை அரங்கேற்றுகின்றனர்

இதன் மூலம் இந்த நாட்டுக்காக உயிர், உடமையை அர்ப்பணித்த முஸ்லிம்களின் உரிமையைப் பறித்துள்ளனர்.

அடிமை இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை காக்கப்பட்டது. ஆனால் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

இதற்காகவா நாம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து, தியாகம் செய்து சுதந்திரம் வாங்கினோம் என்று முஸ்லிம்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உறைந்து கிடக்கின்றனர்.

உரிமையியல் வழக்கில் ஓர் ஊமை தெய்வம்

அறுபது ஆண்டு காலமாக இழுத்தடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம், சட்டத்தின்படி இல்லாமல் – சாட்சியத்தின்படி நில்லாமல் ஓர் அநியாயத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதுவரை தாமதப்படுத்தப்பட்ட நீதி, இறுதியில் மறுக்கப்பட்டே விட்டது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசல் நிலம், ஏதோ மூன்று அண்ணன், தம்பிகளுக்குப் பாகப்பிரிவினை செய்யப்படுவது போல் பிரிக்கப்பட்டுள்ளது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் வேலையை அலகாபாத் உயர் நீதிமன்றம் செய்து முடித்திருக்கின்றது.

இதற்கு அடிப்படைக் காரணம், மூன்று நீதிபதிகளின் உள்ளங்களில் குடி கொண்டிருக்கும் மத நம்பிக்கை தான். சிப்கத்துல்லாஹ் கான் முஸ்லிம் ஆயிற்றே! அவரிடம் எப்படி இந்து மத நம்பிக்கை குடி கொள்ள முடியும்? என்ற கேள்வி எழலாம்.

பொதுவாக நீதித் துறைக்கு வரக் கூடிய முஸ்லிம்களிடம் இஸ்லாமிய சிந்தனையை விட மதச் சார்பற்ற சிந்தனை தான் மேலோங்கி நிற்கும். இவரது சக நீதிபதிகளிடம் பற்றி எரிகின்ற இந்து மத சிந்தனை போல், இவரிடம் இஸ்லாமிய சிந்தனை பற்றி எரியா விட்டாலும் பரவாயில்லை. இஸ்லாத்தைப் பற்றி ஒரு துளியளவு சிந்தனை கூட இவரிடம் இல்லை.

சராசரி மனிதனிடம் இருக்க வேண்டிய நியாய உணர்வு, நீதி நெறி கூட இல்லை. மாறாக இந்துத்துவா வாசனையே வீசுகின்றது. அவருடைய பகுத்தறிவும் மழுங்கிப் போயிருக்கின்றது.

இல்லாவிட்டால், கிருத யுகத்தில் (அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) அல்லது திரேதா யுகத்தில் (13 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு) பிறந்ததாகச் சொல்லப்படுகின்ற ராமர் என்பவர், பாபரி மஸ்ஜிதின் அரைக் கோள வடிவ கோபுரத்தின் கீழே தான் பிறந்தார் என்று தீர்ப்பளிக்க முடியுமா?

எனவே இவர் நிச்சயமாக முஸ்லிமாக இருக்க முடியாது. இந்துத்வா வெறியர்களில் இவரும் ஒருவர். நாளைக்கே இவருக்கும் சங் பரிவார்கள் பாராட்டு விழா நடத்தலாம்.

இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்து விட்டு, மதச் சார்பின்மையையும் மறந்து விட்டு, இந்து மதத்தின் நம்பிக்கை அடிப்படையில் இந்த மூன்று நீதிபதிகளும் தீர்ப்பளித்திருக்கின்றனர்.

ஒரு மத நம்பிக்கையைக் களத்திற்குக் கொண்டு வந்து விட்டதால் அந்த நம்பிக்கையைக் குறுக்கு விசாரணை செய்வது நமது கடமையாகும். அந்தக் குறுக்கு விசாரணையில் இறங்குவதற்கு முன் இந்த வழக்கின் மனுதாரர்களை சற்று பார்த்துக் கொள்வோம்.

ஜனவரி 16, 1950 அன்று கோபால் சிங் விஷாரத் என்பவர் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் “1949ல் பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக் கூடாது’ என்று ஓர் உத்தரவு கோருகின்றார்.

டிசம்பர் 5, 1950 அன்று மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் என்பவர், பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு, தொடர்ந்து பூஜை செய்ய பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ஓர் உத்தரவைக் கேட்கின்றார்.

டிசம்பர் 17, 1950 அன்று சர்ச்சைக்குரிய பகுதியை அரசாங்க ரிசீவரிடமிருந்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிர்மோஹி அகாரா என்ற அமைப்பு பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் கோரியது.

டிசம்பர் 18, 1961 அன்று உத்தர பிரதேச சுன்னத் ஜமாஅத் மத்திய வக்ஃபு வாரியம் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில், பள்ளிவாசல் தனக்குரியது என்பதற்கான விளம்புகைப் பரிகாரம் மற்றும் அனுபவ பாத்தியதை (உங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய் & டர்ள்ள்ங்ள்ள்ண்ர்ய்) கோரி வழக்கு தொடுத்தது.

மேலே கூறப்பட்ட நான்கு வழக்குகளும் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுப் பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

ஐந்தாவதாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது. இது தான் நாம் குறுக்கு விசாரணை செய்யப் போகும் வழக்காகும்.

இவ்வழக்கின் வாதி பகவான் ராம் லல்லா விராஜ்மான் (குழந்தை ராமர்)

இவ்வழக்கு மட்டும் 1989ல் நேரடியாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றது. (குழந்தை ராமர் கடவுள் என்பதால் அவருக்குக் கீழ் கோர்ட்டு பிடிக்காது போலும். அதனால் நேரடியாக உயர் நீதிமன்றத்திற்கு வந்து விட்டார்.)

இவ்வழக்கின் வாதிகள் மொத்தம் நான்கு பேர்.

முதல் வாதி: பகவான் ராம் லல்லா விராஜ்மான் (குழந்தை ராமர்)

இரண்டாம் வாதி: ஆஸ்தான் ஸ்ரீ ராம ஜன்ம பூமி (ராமர் பிறந்த இடம்)

மூன்றாம், நான்காம் வாதிகள்: கடவுளின் அடுத்த நண்பர் மற்றும் பாதுகாவலர் தியோகி நந்தன் அகர்வால்.

(1989ல் கடவுளே ஏன் நேரடியாகக் களத்தில் குதித்தார், வாதியாக ஆனார் என்பதன் ரகசியம் பின்னர் விளக்கப்படவுள்ளது.)

இங்கு தான் முஸ்லிம்களாகிய நாம் எங்களின் பகுத்தறிவுத் தந்தை, ஏகத்துவத்தின் தலைவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் பாணியில் சில கேள்விகளை எழுப்புகிறோம். குழந்தை ராமரை குறுக்கு விசாரணை செய்கிறோம்.

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்என்று அவர்கள் கூறினர்.

நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்என்று அவர் கூறினார்.

நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்என்று அவர் கூறினார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்)

அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்

அல்குர்ஆன் 21:52-58

சிலைகளை உடைத்தவர் யார்? என்று அந்த மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னை இப்ராஹீம் தான் உடைத்தார் என, ஒன்றும் பேசாத பொம்மைகள் – ஊமை தெய்வங்களாலும் காட்டிக் கொடுக்க முடியவில்லை.

நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்என்று அவர்கள் கூறினர்.

ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்எனக் கூறினர்.

அல்குர்ஆன் 21:59-60

இப்போது இப்ராஹீமிடம் விசாரணை நடைபெறுகின்றது.

இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.

பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!என்றனர்.

அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

அல்குர்ஆன் 21:62-67

இப்ராஹீம் (அலை) அவர்கள் அந்தச் சிலைகளை உடைப்பதற்கு முன்னால் அவற்றிடம் பேசுகின்றார்; சில கேள்விகளைக் கேட்கிறார். அதற்கு அந்தச் சிலைகளால் பதில் சொல்ல முடியவில்லை.

அவர்களின் கடவுள்களிடம் சென்று “சாப்பிட மாட்டீர்களா? ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்.

அல்குர்ஆன் 37:91-92

உடைப்பதற்கு முன்பும் பதில் பேச முடியவில்லை. உடைத்த பின்னரும் பேசவில்லை.

இப்போது இதே பாணியில், ராமர் சிலையை நீதிமன்றத்தின் விசாரணை கூண்டிற்குக் கொண்டு வாருங்கள். “நீ இங்கு தான் பிறந்தாயா?’ என்று கேள்வி எழுப்புகிறோம்; குறுக்கு விசாரணை செய்கிறோம்; கோட்டம் எடுக்கிறோம்.

“நான் இங்கு தான் பிறந்தேன்’ என்று சொல்லி விட்டால், மறு வார்த்தை எதுவும் பேசாமல் அப்படியே, அங்கேயே பாபரி மஸ்ஜித் பிரச்சனையைப் போட்டு விட்டுப் போய் விடுவோம். எங்கள் கைகளாலேய அந்த இடத்தில் மஸ்ஜிதுக்குப் பதிலாக மந்திரைக் கட்டித் தருகிறோம்.

இதற்கு 60 ஆண்டு கால அவகாசம் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால் 1885லிருந்து பார்த்தால் 125 ஆண்டுகள் ஆகின்றன.

நிச்சயமாக ராமர் சிலை பேசாது என்று உங்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் கடவுளின் நண்பர் என மூன்றாவது வாதியாக அவதாரம் எடுத்துள்ளீர்கள். இப்படிப் பேசத் தெரியாத ஒரு சிலை, பேசத் தெரிந்த உங்களுக்குக் கடவுளாக இருக்க முடியுமா? என்று சிந்தியுங்கள்.

அது ஒரு சக்தியுள்ள கடவுளாக இருந்தால் அதற்கு எதற்குக் காவல்துறை, நீதித்துறை தேவைப்படுகின்றது என்று சிந்தியுங்கள்.

இப்படி சக்தியில்லாத ஒரு கடவுள் உங்களுக்குத் தேவை தானா? சங் பரிவார்களே சிந்தியுங்கள்.

ஆனால் அதே சமயம் முஸ்லிம்களைப் பார்த்து இப்படிக் கேள்வி எழுப்ப முடியாது. காரணம், முஸ்லிம்கள் இறைவனை நீதிமன்றத்தில் வாதியாக நிறுத்தவில்லை, நிறுத்த மாட்டார்கள்.

கடவுளின் ஆலயங்கள் கடவுளின் தேவைக்காகக் கட்டப்படுவதில்லை. மனிதர்கள் கடவுளை வழிபடுவதற்காகக் கட்டிக் கொள்பவை தான். அவற்றை மனிதர்கள் தங்கள் கைகளால் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் தான் முஸ்லிம்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

உங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக இப்படி ஒரு சதி செய்து முஸ்லிம்களிடமிருந்து பள்ளியை ஆக்கிரமித்து அபகரித்திருக்கின்றீர்கள். அதற்குப் பதிலாக முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கை அடிப்படையில் இந்தச் சிந்தனை ரீதியிலான கேள்விகளை இந்தியாவில் முன்வைக்கப் போகிறார்கள்.

இந்தக் கேள்விக்கு அவர்கள் அளிக்கப் போகும் ஒரே பதில் அவர்கள் முஸ்லிம்களாக ஆவது தான். அதற்குத் தான் அலகாபாத் உயர் நீதிமன்றம் அடிக்கல் நாட்டியுள்ளது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் இனி இந்தியா இஸ்லாமிய மயமாகும், இஸ்லாமிய வயமாகும். எதிர்கால இந்தியா இஸ்லாமிய இந்தியா. இந்த ஜோதியை நீங்கள் ஒரு போதும் ஊதி அணைக்க முடியாது.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8

கோர்ட்டுக்கு வந்த குழந்தை ராமர்

பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்கில், பகவான் ராமரே ஒரு வாதியாக வந்து நீதிமன்றத்தில் நின்றார். சிலைகள் வாதியாக வருவது, அதாவது சிலைகளை வாதியாக ஆக்குவது ரோமர்களின் சட்டத்தில் இருந்தது. அவர்களிடமிருந்து அதை அப்படியே இந்தியர்கள் இரவல் வாங்கிக் கொண்டார்கள்.

இவ்வழக்கில் ராமர் ஏன் வாதியானார்? எதற்காக வந்தார்? எப்போது வந்தார்? இந்த ஊமை தெய்வம் ஏன் உள்ளே வந்தது? இங்கு தான் ஒரு மர்மமே புதைந்து கிடக்கின்றது. ஓர் உண்மை ஒளிந்து கொண்டிருக்கின்றது. அந்த மர்மத்தை இப்போது தோண்டுவோம்.

டிசம்பர் 22-23, 1949 அன்று நள்ளிரவில் பாபரி மஸ்ஜிதின் வளாகத்திற்குள் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரது சிலைகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு வைக்கப்பட்டதிலிருந்து டிசம்பர் 6, 1992 அன்று பள்ளி உடைக்கப்பட்டது வரை “மத நம்பிக்கை’ என்ற போர்வையில் மலிவான அரசியல் ஆதாயமே ஒளிந்திருந்தது.

சிலைகளை அகற்றும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தும், அப்போதைய பைசாபாத் மாவட்ட அதிகாரி, துணை ஆணையர் கே.கே. நய்யார், “பெரும்பான்மை சமுதாயத்தின் நம்பிக்கை இதன் பின்னணியில் இருக்கின்றது. அதைக் குறைத்து மதிப்பிட முடியாது’ என்று மேலிட உத்தரவை உதாசீனப்படுத்தினார்; உதறித் தள்ளினார். இவர் தான் இந்த அக்கிரமங்கள், அநியாயங்கள் அனைத்திற்கும் அடித்தளமாக அமைந்தவர்.

இந்த நிகழ்விற்குப் பின்னர் இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அங்கமான பாரதிய ஜன சங்கில் இணைந்து கொண்டார். மத நம்பிக்கை என்று இவர் குறிப்பிட்டது போலித்தனமானது, பொய்யானது என்பதையும், முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டது என்பதையும் இவரது இந்த நடவடிக்கை தோலுரித்துக் காட்டியது.

கடிதம் எழுதிய நேரு

அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தச் சம்பவம் குறித்து தனது வேதனையையும் வருத்தத்தையும் தெரிவித்துப் பல தொடர் கடிதங்களை வரைந்தார். துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல், கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி, உ.பி. முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்த், தனது நண்பர் கே.ஜி. மஷ்ருவாலா ஆகியோருக்கு எழுதிய கடிதங்கள் அவற்றில் அடங்கும்.

டிசம்பர் 26, 1949 அன்று பிரதமர் நேரு, உ.பி. முதல்வர் கோவிந்த வல்லப பந்துக்கு ஒரு தந்தி அனுப்பினார்.

சிலைகளை பள்ளியில் கொண்டு வைத்தது பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்துகின்ற மிகக் கெட்ட முன் மாதிரியாகும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

மார்ச் 5, 1950ல் மஷ்ருவாலாவுக்கு எழுதிய கடிதத்தில், “பைசாபாத் மாவட்ட அதிகாரி முறை தவறி, கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டிருக்கின்றார். முதலமைச்சர் இச்செயலை பல்வேறு கட்டங்களில் கண்டித்தாலும் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அயல்நாடாக ஆன உ.பி.

உ.பி. எனக்கு ஒரு வெளிநாடாகத் தோன்றுகிறது. இதற்கு முன்பு காங்கிரஸின் தூண்களாகத் திகழ்ந்தவர்களின் சிந்தனைகளிலேயே மதவாதம் மிக ஆழமாக ஊடுருவி விட்டதை நான் காண்கிறேன். மதவாதம் என்பது உணர்வு பெற்று எழ முடியாத அளவுக்கு உடலை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருக்கின்ற பாரிச வாயு! வாத நோய்! இது ஒரு விதத்தில் அரசியல் ஆதாயம். இந்த நோய் விவகாரத்தில் நாம் மிகவும் மெத்தனமாக இருக்கின்றோம்.

இவ்வாறு ஏப்ரல் 17, 1950 அன்று நேரு, உ.பி. முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் பாபரி மஸ்ஜித் விவகாரத்தின் பின்னணியில் மத நம்பிக்கை உள்ளது என்ற கருத்தைப் பொய்ப்படுத்துகின்றன. பிரதமர் நேரு வெளிப்படையாகத் தெரிவிப்பது போன்று இது உண்மையில் அரசியல் ஆதாய நோக்கத்துடன் உள்ளூர் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜன சங்க் கட்சியினர் கூட்டாக நடத்திய ஒரு சதித் திட்டம். இந்த அரசியல் ஆதாயத்திற்குத் தான் மதச் சாயம் பூசப்பட்டது. இதை பிரதமர் நேருவே அம்பலப்படுத்தி விடுகின்றார்.

ஆனால் மதச் சாயம் பூசப்பட்ட இந்த அரசியல் ஆதாய சதித் திட்டம் அப்போது வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது.

இதன் காரணத்தால் நீதிமன்றங்களில் நிலுவையில் நின்ற இந்த வழக்குகள் நிறம் பெறாமல், அரசியல் என்ற சாயம் பரவாமல், அயோத்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையில் நடைபெறும் வழக்கு என்ற மட்டத்தில் மட்டும் நின்று கொண்டிருந்தது.

1949ல் தோல்வியுற்ற இந்த சதித் திட்டம் 1989ல் வெற்றி பெற்றது. இதற்குக் காரணம் 1980 வரை நீர்த்துப் போயிருந்த இந்த விவகாரத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் நெருப்பு மூட்ட ஆரம்பித்தது.

1982ல் வி.ஹெச்.பி. ராமர் கோயில் இயக்கத்தைத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் பி.ஜே.பி.க்கும் அரசியல் வாழ்வில் பிராண வாயு தேவைப்பட்டது.

அதனால் 1989ம் ஆண்டு ஜூன் மாதம் ஹிமாச்சல் பிரதேசம், பாலாம்பூரில் கூடிய தனது தேசிய செயற்குழுவில், இந்துத்வா தான் தனது அரசியல் லட்சியக் கொள்கை என்றும், ராம ஜென்ம பூமி இயக்கத்தில் பங்கு கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னர் அது கச்சை கட்டிக் கொண்டு மிகத் தீவிரமாகக் களத்தில் குதித்தது.

பாபரி மஸ்ஜித் இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்பதை சட்டம், சாட்சியத்தின் மூலம் நிறுவ முடியாது என்பதை அறிந்திருந்த வி.ஹெச்.பி., நீதிமன்றம் மத நம்பிக்கையில் தலையிட முடியாது என்றும், முஸ்லிம்கள் தாங்களாக பாபரி மஸ்ஜித் இடத்தை இந்துக்களுக்கு விட்டுத் தர வேண்டும் அல்லது ராமர் கோயில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியது.

இதற்கிடையில் எதற்கும் முன்னேற்பாடாக நீதிமன்றத்திலேயே கள்ளத்தனமாக ஏதேனும் வழிவகை செய்ய முடியுமா? என்பதையும் யோசிக்க ஆரம்பித்தது. தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்தது.

உயர்நீதி மன்ற வழக்கு எண்: 1

ஜனவரி 16, 1950

கோபால் சிங் விஷாரத் என்பவர் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் “1949ல் பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக் கூடாது’ என்று ஓர் உத்தரவு கோருகின்றார். இதற்கு நீதிமன்றம் தற்காலிக உறுத்துக் கட்டளை (ஒய்த்ன்ய்ஸ்ரீற்ண்ர்ய்) வழங்கியது. இவ்வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பின் வழக்கு எண் 1 ஆகி விடுகின்றது.

வழக்கு எண்: 2

டிசம்பர் 5, 1950

மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் (இப்போது இவர் உயிருடன் இல்லை) பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு, தொடர்ந்து பூஜை செய்ய பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ஓர் உத்தரவைக் கேட்கின்றார்.

இவர் தான் 1949ல் சிலைகளை பள்ளிவாசலில் கொண்டு வைத்தவர். டிசம்பர் 22, 1991ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அதை இவரே ஒப்புக் கொள்கிறார். ஆனால் ஏதோ ஒரு விரக்தியில் ஆகஸ்ட் 1990ல் இந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறார்.

வழக்கு எண்: 3

டிசம்பர் 17, 1950

நிர்மோஹி அகாரா என்ற அமைப்பு, சர்ச்சைக்குரிய பகுதியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் கோரியது. இது தனது மனுவில் தெரிவித்த வாதம் வித்தியாசமானது; விசித்திரமானது.

  1. பாபரி மஸ்ஜித் என்பது பள்ளிவாசலே இல்லை.
  2. பள்ளிவாசல் கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
  3. பள்ளிவாசல் கட்டுவதற்காக எந்த ஒரு கோயிலும் பாபராலோ அல்லது வேறு யாராலுமோ இடிக்கப்படவில்லை.
  4. நினைவில் கொள்ளும் காலம் தொட்டு கோயில் அங்கு தான் இருக்கின்றது.
  5. 1949ல் அங்கு சிலைகளும் கொண்டு வைக்கப்படவில்லை. சிலைகள் அங்கே நிரந்தரமாக இருக்கின்றன.

பாவம் அகாரா! பின்னால் வரும் கால கட்டத்தில் பி.ஜே.பி.யின் அரசியல் ஆதாயத்தைக் கற்பனை கூட செய்து பார்க்காமல் இப்படி ஒரு குதர்க்கமான நிலைப்பாட்டை தனது மனுவில் குறிப்பிடுகின்றது.

வழக்கு எண்: 4

டிசம்பர் 18, 1961

உத்தர பிரதேச சுன்னத் ஜமாஅத் மத்திய வக்ஃபு வாரியம் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில், பள்ளிவாசல் தனக்குரியது என்பதற்கான விளம்புகைப் பரிகாரம் மற்றும் அனுபவ பாத்தியதை (உங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய் & டர்ள்ள்ங்ள்ள்ண்ர்ய்) கோரி வழக்கு தொடுத்தது.

முஸ்லிம்கள் 1582ஆம் ஆண்டிலிருந்து பாபரி மஸ்ஜிதில் தொழுது கொண்டிருந்தனர். நிர்ப்பந்தமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் பள்ளிவாசலில் சிலைகளைக் கொண்டு வைத்து தொழுகை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக உறுத்துக் கட்டளை பெற்று சொத்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது செல்லாது. இந்தச் சொத்து முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று விளம்புகைப் பரிகாரம் கேட்டிருந்தனர்.

உயர்நீதிமன்றத்திற்கு மாறிய வழக்குகள்

1989 வரை இந்த வழக்குகள் அனைத்தும் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் இருந்தன. 1989 ஜூலையில் உத்தர பிரதேச அரசின் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இவை அனைத்தும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

அப்போது உ.பி.யில் ஆட்சியில் இருந்தது என்.டி. திவாரியை முதல்வராகக் கொண்ட காங்கிரஸ் அரசு! வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது.

1989 ஜூன் மாதம் பாரதீய ஜனதா தனது பாலம்பூர் செயற்குழுவில் தனது முழு அரசியல் வேட்டைப் பிராணியாக ராமர் கோயிலைக் கையில் எடுத்துக் கொண்டதால் அரசியல் அணு உலையில் அது கொதி நிலையைத் தாண்டிக் கொதித்தது. சங் பரிவாரங்கள் வழக்குகளின் தன்மைகளைப் பார்த்தன.

நிர்மோகி அகாராவின் மனுவில் காணப்பட்ட விஷயங்கள் தங்களது அரசியல் ஆதாய வேட்டைக்கு, கோட்டையை நோக்கிச் செல்லும் ராஜபாட்டைக்கு வேட்டு வைப்பதாகவும் தங்கள் வெறித்தனத்தை வீரியமிழக்கச் செய்யும் வெற்றுச் சித்தாந்தமாகவும் இருந்ததைக் கண்டது.

இந்தப் போக்கில் போனால் சட்டம், சாட்சியம் எல்லாம் தாங்கள் காணும் ஆட்சிக் கனவை கலைத்து விடும் என்று கருதியது.

நிர்மோகி அகாராவை தன் இஷ்டத்திற்கு ஆட விட்டால் அது தங்களது பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு விடும் என்று கருதிய சங் பரிவார் திட்டமிட்டு வழக்கின் தன்மையை, திசையைத் திருப்ப முனைகின்றது.

இந்த வழக்கின் அனைத்து அம்சங்களும் முஸ்லிம்களுக்கு சாதகமாகவே அமைகின்றன. எனவே அவற்றை உடைப்பதற்கு சங் பரிவார்கள் மனுதாரர்களாகச் சேர வேண்டிய நிர்ப்பந்தம்.

இவ்வளவு நாளும் தொடர்ந்து நடக்கும் ஒரு வழக்கில் திடுதிப்பென்று உள்ளே நுழைய முடியாது. அவர்கள் உள்ளே நுழைவதற்குக் கால வரம்பு குறுக்கே வந்து தடைக்கல்லாக நிற்கின்றது.

தடைக் கல்லாக வந்த கால வரம்பு

தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்தில் ஒருவர் 12 வருடங்களுக்குள்ளாக அதற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் ஆட்சேபணை செய்யவில்லை என்றால், எதிரிடை அனுபவம் (ஆக்ஸ்ங்ழ்ள்ங் டர்ள்ள்ங்ள்ள்ண்ர்ய்) என்ற அடிப்படையில் அந்தச் சொத்து அபகரித்தவரிடமே சென்று விடும்.

இதைப் பயந்து தான் வக்ஃப் வாரியம் 1961ஆம் ஆண்டு தன்னையும் ஒரு வாதியாக இவ்வழக்கில் சேர்த்துக் கொண்டது. இப்போது காலம் கடந்து விட்டதால் இதுபோன்ற ஒரு வாய்ப்பு தனக்கு இல்லையே என்று வி.ஹெச்.பி. அடித்துக் கொண்டது.

அப்போது தான் விஹெச்பி என்ற குள்ளநரியின் கள்ள மூளையில் ஒரு சூழ்ச்சி உதயமாகின்றது. குழந்தை ராமரை கோர்ட்டுக்கு இழுத்து விட்டால், அவர் பிறந்த இடத்தையும் கோர்ட்டுக்குக் கூட்டி வந்தால் படச் சுருளை முன்பக்கம் வெட்டி விட்டு ஓட்டுவது போல் காலச் சுருளை முன்பக்கம் கொண்டு சென்று விடலாம்.

இது தான் அதன் மூளையில் உதித்த சூழ்ச்சி! அதுபோல் காலச் சுருளை முன்னால் கொண்டு போய் நிறுத்துகின்றது. எப்படி?

வழக்கு எண்: 5 – முதலாம் மனுதாரர் குழந்தை ராமர்

1989 ஜூலையில் குழந்தை ராமரை வழக்காளியாக, வாதியாகச் சேர்க்கின்றது.

குழந்தை ராமர் என்று சொல்லக் கூடிய காரணம் என்ன? இந்திய அரசியல் சட்டத்தில் மைனர் எனப்படும் பருவ வயதை அடையாதவர்கள் எந்தச் சொத்தையும் வாங்க முடியாது; விற்க முடியாது. வழக்கு தொடர முடியாது; அவர் மேல் வழக்கும் தொடரப்படாது. அதனால் அவருக்குப் பதிலாக அவரது பாதுகாவலர் தான் இந்தக் காரியங்களைச் செய்வார்.

சிலைகள் இந்த நிலையில் தான் இருக்கின்றன. அதனால் வாதிட வருகின்ற இந்தச் சிலைகள் டங்ழ்ல்ங்ற்ன்ஹப் ஙண்ய்ர்ழ் (நிரந்தர குழந்தைகள்) என்ற நிலையிலேயே இருப்பர். அதாவது வயதுக்கு வருதல், பூப்புனித நீராட்டுதல் எல்லாம் அவற்றுக்குக் கிடையாது என்று அர்த்தம்.

பைத்தியக்காரர்களும் முட்டாள்களும் இந்த நிலையில் தான் இருக்கின்றனர் என்பதைக் கால வரம்புச் சட்டம் பிரிவு (6) குறிப்பிடுகின்றது.

இரண்டாம் மனுதாரர் – குழந்தை ராமர் பிறந்த இடம்

ராமர் எப்படி தெய்வமோ அது போன்று அவர் பிறந்த இடமும் ஒரு சிலையாகவோ அல்லது தெய்வமாகவோ ஆகி விடுகின்றது. எனவே அந்த தெய்வம் ஓன்க்ண்ஸ்ரீண்ஹப் டங்ழ்ள்ர்ய்ஹப்ண்ற்ஹ் அதாவது ஓர் ஆளுக்குரிய அனைத்து தகுதிகளையும் படைத்ததாகி விடுகின்றது.

எனவே இந்தத் தெய்வம் பள்ளிவாசல் கட்டுவதற்கு முன்பாக, அதற்கு முன் இருந்ததாக இவர்கள் வாதிடும் கோயில் கட்டுவதற்கு முன்பாக உள்ள கால நிலைக்குப் போய் விடுகின்றது.

படச் சுருளை வெட்டி விடுவது போல், காலச் சுருளிலும் இந்த தெய்வம் முந்தைய நிலைக்குச் சென்று விடுவதால் பாபரி பள்ளியில் சிலைகள் கொண்டு போய் வைக்கப்பட்டனவா? அல்லது வைக்கப்படவில்லையா? என்று வாதத்திற்கே இங்கு இடமில்லாமல் போய் விடுகின்றது. வழக்கு தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து விஹெச்பி இந்த வழக்கின் உள்ளே நுழைவதற்கு வழிவகை செய்யப்படுகின்றது.

மூன்றாம் மனுதாரர்

இவ்விரு தெய்வங்களுக்கும் பாதுகாவலராக (?) கடவுளுக்கு அடுத்த நண்பர் என்ற அடிப்படையில் தியோகி நந்தன் அகர்வால் என்பவர் மனுதாரராகின்றார். இவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். 1983ல் ஓய்வு பெற்ற பின் இவர் விஹெச்பி அமைப்பின் துணைத் தலைவர்.

பக்தியா? பச்சோந்தித் தனமா?

ஏற்கனவே நான்கு மனுதாரர்கள் இவ்வழக்கில் வழக்காடிக் கொண்டிருக்கும் போது இன்னொரு மனுதாரர் அதே வழக்கில் நுழைய வேண்டுமென்றால் எதிரிடை அனுபவம் என்ற அடிப்படையில் 12 ஆண்டு கால வரம்பிற்குள் வக்ஃப் வாரியம் நுழைந்தது போன்று நுழைய வேண்டும்.

அப்படி ஒரு வாய்ப்பு விஹெச்பிக்கு இல்லாததால், குழந்தை ராமர், அவர் பிறந்த இடம், கடவுளின் காப்பாளர் மற்றும் கடவுளின் நண்பர் என்ற போர்வையில் வழக்கினுள் நுழைகின்றது.

குயுக்தியை பக்தி என்று பகிரங்கமாகப் பகல் வேஷம் போடும் பக்கா அரசியல் அயோக்கியத்தனத்தை நீதிமன்றம் அனுமதிக்கின்றது.

விஹெச்பி இன்னொரு குயுக்தியையும் இந்த வழக்கில் கையாண்டது. அது என்ன?

பாபர் அயோத்திக்கு வந்து ஒரு வார காலம் தங்கி, கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கினார். பின்னர் அந்த இடத்தில் பாபர் பள்ளிவாசலை எழுப்பினார் என்று விக்கிரமாதித்தன் கதையை மிஞ்சும் விசித்திரக் கதையை இயற்றினர். இந்தக் கதையை மையமாக வைத்து பாபரி மஸ்ஜித் என்பது ஒரு பள்ளிவாசலே அல்ல என்ற ஒரு நிலையை எடுத்தனர்.

இவ்வாறு, குழந்தை ராமர் என்றும், பாபரி மஸ்ஜித் என்பது பள்ளிவாசல் அல்ல என்றும் இவ்விரு வாதங்களின் அடிப்படையில் மனுவைத் தாக்கல் செய்கின்றனர். இந்தக் கோமாளித்தனமான மனுவை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்கின்றது.

அகாராவின் ஆட்சேபணை

விஹெச்பி இவ்வாறு மனுதாரராக உள்ளே நுழைந்த மாத்திரத்தில் நிர்மோகி அகாரா, நீதிமன்றத்தில் இதற்குப் பதில் மனு தாக்கல் செய்கின்றது.

“இந்த மனு விஷமத்தனமானது. அகாராவைத் துன்புறுத்துவதற்காகவும், அதன் சொத்தை அபகரிப்பதற்காகவுமே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தியோகி நந்தன் அகர்வால் ஒரு வழிபாட்டாளர் அல்லர். வணங்கும் ஒரு பக்தர் அல்லர். (விஹெச்பியின் கைக்கூலி) அவர் விஹெச்பி மற்றும் ராம் ஜென்ம பூமிய நியாஸ் ஆகியவற்றின் உறுப்பினர்”

இவ்வாறு நிர்மோகி அகாரா தனது பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

தியோகி நந்தன் அகர்வால் “(பாபரி மஸ்ஜிதில் கைதிகளாக இருக்கும்) சிலைகள் எல்லாம் பொறுமை இழந்து விட்டன. சோம்நாத் கோயிலின் கட்டடக் கலை நிபுணர்கள் அயோத்தியா கோயிலை வடிவமைக்கும் பணியில் இறங்கி விட்டார்கள். அதற்குரிய நாளும் குறிக்கப்பட்டு விட்டது. ராமர் கோயில் இயக்கம் கண்டு வரும் வேகமான எழுச்சியின் காரணமாகவே இம்மனு தாக்கல் செய்யப்படுகின்றது” என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டே வாதிட்டார்.

விஹெச்பியின் அரசியல் சித்து வேலை

இது மத நம்பிக்கையோ, பக்தியின் வெளிப்பாடோ அல்ல! தங்களின் இந்துத்வா வெறியை வளர்ப்பதற்காக நாங்கள் கையில் எடுத்துள்ள அரசியல் சூலாயுதம் தான் இது என்பதை விஹெச்பி தெளிவாக வெளிப்படுத்தியும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளாதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

விஹெச்பி மற்றும் பிஜேபியின் அரசியல் சித்து விளையாட்டை, எத்து ஏமாற்று வேலையை சுத்தமான பக்தி என்று நீதிமன்றம் எடுத்துக் கொண்டது.

அந்த ஏமாற்றுக்காரர்கள் இட்ட கோட்டிலேயே தீர்ப்பு என்ற பெயரில் இந்தத் திருவாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை இந்தத் தீர்ப்பைப் படிக்கும் போது நம்மால் தெளிவாக அறிய முடிகின்றது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமானதும், அவர்களுடைய அனுபவத்தில் இருக்கின்றதுமான பாபரி மஸ்ஜிதில் சிலைகளைக் கொண்டு வைத்தது அப்பட்டமான அத்து மீறல், அநியாயச் செயல்! சட்டத்தின் பார்வையில் அது குற்றச்செயல் என்று பதிவாகியுள்ளது.

இந்தச் செயல், முஸ்லிம்கள் அந்தச் சொத்திற்கு (பள்ளிவாசலுக்கு) உள்ளே அனுபவத்தில் இருந்ததையும், சொத்தில் டட்ஹ்ள்ண்ஸ்ரீஹப், ஆஸ்ரீற்ன்ஹப், ப்ங்ஞ்ஹப் – டர்ள்ள்ங்ள்ள்ண்ர்ய் ஆகிய மூன்று நிலைகளிலும் அனுபவப் பாத்தியதையில் முஸ்லிம்கள் இருந்ததையும் தெளிவாக உணர்த்துகின்றது.

இதை ஓய்த்துக் கட்டுவதற்கு நீதிபதி சுதிர் அகர்வால் தன்னுடைய தீர்ப்பில், “ராமர் பிறந்த இடமே ஒரு வழிபடும் தெய்வம். இந்துக்களின் நம்பிக்கை அடிப்படையில் அது ஒரு தனி ஆள் என்ற தகுதி அதற்கு இருக்கின்றது. அந்தத் தெய்வம் இடைவிடாமலும் தொடர்ந்தும் வழிபடப்பட்டு வருவதால், அந்தச் சிலைகளை வெளியிலிருந்து பள்ளிக்குள் கொண்டு வைத்த செயல் (பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களின் சொத்து என்பதற்கு) பொருத்தமான ஆதாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவிக்கின்றார்.

தியோகி நந்தன் அகர்வாலின் வழியிலேயே மூளையை அடகு வைத்து விட்டு இந்தத் துரோகி சுதிர் அகர்வாலும் தீர்ப்பளிக்கின்றான்.

இடிப்பிற்குக் கண்டனமா?

1992ல் பள்ளியை இடித்த அக்கிரமத்தை இந்த மூன்று பேரும் கொஞ்சம் கூடக் கண்டு கொள்ளவே இல்லை. சுதிர் அகர்வால் மட்டும் போனால் போகிறது என்று போகிற போக்கில் கொஞ்சம் கண்டிக்கிறார். “ஒரு பெருங்கூட்டம் முற்றிலும் அருவருக்கத்தக்க வகையில் ஒரு பண்பட்ட நாகரிக சமுதாயத்தின் கொள்கைகள், நடைமுறைகளுக்கு மாற்றமாக சர்ச்சைக்குரிய கட்டடத்தை இடித்துத் தள்ளியது” என்று குறிப்பிடுகின்றார்.

இவ்வளவு அழகாகக் கண்டிக்கிறாரே என்று நாம் மகிழ்ச்சியடைவதற்குள் பின்வரும் கருத்தின் மூலம் அந்த மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போடுகிறார்.

“வழக்கு எண் 5ல் உள்ள நபர்களை (குழந்தை ராமர், ராமர் பிறந்த இடம், தியோகி நந்தன் அகர்வால் ஆகிய வாதிகள் தான்) இதற்குப் பொறுப்பு என்று முஸ்லிம் பிரதிவாதிகள் குற்றம் சாட்டவில்லை” என்று ஒரு பைத்தியக்காரத்தனமான விளக்கத்தைச் சொல்கிறார். அத்துடன் நின்றாரா?

பள்ளியை இடித்த பாவிகளுக்கு, பள்ளியின் மத்தியில் அமைந்த அரைக்கோள வடிவக் கோபுரத்திற்குக் (உர்ம்ங்) கீழ் உள்ள பகுதியை ஒதுக்குகின்றார்.

கலவரத்தைத் தூண்டி, அதன் பலனை அடைவதற்காகப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கி இரத்தம் குடித்த தனது செயல் நியாயமானது தான் என்று விஹெச்பி எண்ணி சந்தோஷப்பட வைத்திருக்கின்றார்.

இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியதன் மூலம் இவரும் தியோகி நந்தன் அகர்வாலைப் போல் இந்துத்வாவின் அரசியல் சிந்தனைக்குப் பலியாகி விட்டார் என்பதையே இது தெளிவாகக் காட்டுகின்றது.

நாட்டின் உச்ச நீதிமன்றம் இந்த அவமானத்தைச் சரிப்படுத்துமா?

கோட்டையில் பாபர் குறட்டையில் ராமர்

பாபரி மஸ்ஜித் வழக்கில் குழந்தை ராமர் 1989ல் ஒரு மனுதாரராகச் சேர்ந்ததைக் கண்டோம். எதற்கு? தான் ஜென்மம் எடுத்த இடத்தை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றுவதற்காக?

ராமர் உண்மையில் ஒரு கடவுளாக இருந்திருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? முகலாயர்கள் முதன் முதலில் இந்தியாவுக்கு ஆட்சி செய்ய வரும் போது அவர்களை வர விடாமல் தடுத்திருக்க வேண்டும். அதைச் செய்தாரா? அவரால் அதைச் செய்ய முடியாது என்பதே பதில்.

அதாவது பாபர் கோட்டை ஏறும் போது குழந்தை ராமர் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.

சரி! இந்தியாவிற்கு வந்து விட்டார். குறைந்தபட்சம் தன்னுடைய இடத்தில் 1528ல் தனது தளபதி மீர்பாகியை வைத்து பள்ளியைக் கட்டும் போதாவது அதைத் தடுத்திருக்க வேண்டும். அதையும் தடுக்கவில்லை.

1885ல் வெள்ளையர்களிடம் வழக்கு வந்தது. அப்போதாவது வெள்ளைக்கார நீதிபதிகளை தனக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்க வைத்திருக்கலாம். அதையும் செய்யத் தவறி விட்டார்.

அதற்குப் பின்னால் நாடு சுதந்திரம் அடைந்தது. 1949ல் தனது சிலைகளை பக்தர்கள் பள்ளியில் கொண்டு வந்து பள்ளியைப் பூட்டி விட்டனர்.

தன்னுடைய சிலைகளை உள்ளே வைத்த பின்னர் பக்தர்களை காவல் நிலையம், நீதிமன்றம் என்று இழுத்தடிக்கமால் அப்போதே பள்ளிவாசலை பூமியில் உள்வாங்கச் செய்திருக்கலாம்.

1949ல் பாபரி மஸ்ஜிதில் பக்தர்கள் கள்ளத்தனமாகத் தனது சிலையைக் கொண்டு வைத்து விட்டு, அவதாரம் எடுத்ததாகக் கதை விட்ட பிறகு நீதிமன்றத்தில் வழக்கு வந்ததும் அதை உடனே முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். அதையாவது செய்தாரா?

கடைசியாக 1989 வரைக்கும் நீதிமன்றத்தில் ஒரு வாதியாகச் சேர்வதற்கு அவகாசம் எடுத்திருக்கின்றார். அப்படிச் சேர்ந்த பிறகாவது அதை உடனே முடிவுக்குக் கொண்டு வந்தாரா?

21 வருடங்கள் வழக்கு நடத்தியிருக்கிறார். இப்போது தான் தீர்ப்பு கிடைத்திருக்கின்றது. இந்தத் தீர்ப்பாவது திருப்தியான தீர்ப்பா என்றால் அதுவும் கிடையாது.

காரணம், மூன்றில் ஒரு பங்கு தனது நேரடி எதிரியான முஸ்லிம்களுக்குப் போய் சேருகின்றது.

இதிலிருந்து நாம் அறிவது, ராமர் ஒரு சக்தியுள்ள ஒரு கடவுள் கிடையாது. எவ்வித சக்தியுமில்லாத வெறும் பாண்டம். தன்னையும் காக்காமல் தன்னை நம்பியவர்களையும் காக்க முடியாத வெறும் கற்பனைப் பாத்திரம். இவரையே இவரது பக்தர்கள் தான் காக்க வேண்டும்.

இரவோடு இரவாகப் பள்ளியில் நுழைந்து சிலைகளை வைப்பது முதல் கள்ளத்தனமாகக் குழந்தை ராமர் என்ற பெயரில் வழக்கு நடத்துவது உள்ளிட்ட அனைத்தையும் பக்தர்கள் தான் செய்ய வேண்டும். இவரால் தனது பக்தர்களுக்கு உதவ முடியாது.

இதோ அல்லாஹ் சொல்கிறான்:

தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அக்கடவுள்களுக்கு இவர்களே (இவ்வுலகில்) முதன்மைக் காவலர்களாக இருக்க அக்கடவுள்களோ இவர்களுக்கு உதவ இயலாது.

அல்குர்ஆன் 36:74, 75

இது தான் இந்தக் கடவுளர்களின் நிலை. இவற்றை வணங்கும் பக்தர்கள் சிந்திப்பார்களா?

————————————————————————————————————————————————————–

ராமர் கோயிலை பாபர் இடித்தாரா? –

ஒரு வரலாற்று ஆய்வு

பிரச்சனை உருவான விதம்

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமணர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைசாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.

“இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

“இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.

ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக்கப்பட்டதா? கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பது தான் பிரச்சனையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா? வரலாற்றுப் பாத்திரமா? என்பது அல்ல.

இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸ்லிமும் மறுக்க மாட்டார்.

அயோத்தியில் ராமர் பிறந்தாரா?

அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில் தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.

இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவாரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது சொந்த முடிவாகத் தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.

இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.

வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, “அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.

இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:

கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட்சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண்டுகள் கொண்டது.

கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2010 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5112 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை. கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்கவில்லை.

இந்த யுகத்துக்கும் முந்திய யுகம் தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,112 = 8,69,112 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.

இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, “இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந்தார்’ எனக் கூறுகிறது.

அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் “அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது 2710 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.

அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.

இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?

இந்த அயோத்தியின் வயது 2710 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரணமானது தான் என்ற முடிவுக்குத் தான் அவர்கள் வரவேண்டும். அப்போது தான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.

“இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்தி தான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.

அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.

ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.

அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால் தான் இராமாயணம் கூறுவது மெய்யாகும்.

“இந்த அயோத்தி தான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.

அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.

மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார். எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.

இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்தி தான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதே இந்து மதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்டதாகும்.

அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?

“பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்’ என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.

இந்த இராமர் கோவிலை விக்கிரமாதித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவாரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.

அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.

குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதிகளை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படுகின்றனர். கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்

பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வறிக்கை “தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் “சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300-1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்ததில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.

“மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?

இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகு தான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300-1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப்படவில்லை.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் “அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.

லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11ஆம் நூற்றாண்டு வரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம் வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.

குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?

அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், “இந்தியக் கோவில்கள், கட்டடக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட “ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா, பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகு தான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.

அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை. கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?

இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ்கிருத மொழியில் தான் இருந்தது. சமஸ்கிருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமணப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத் தான் இருந்தது. எனவே தான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.

மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர் தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது.

துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்னரே இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.

துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசிதாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500களில் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ் துளசி தாசரும் வாழ்கிறார்.

இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில் தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.

இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டப்பட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளருமாவார். இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் “கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவிலும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர் கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.

உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ராஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடரவில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற்றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறுவது முழுப் பொய் என்பது இதன் மூலமும் தெளிவாகிறது.

பாபர் கோவிலை இடிப்பவரா?

இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.

ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத்தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள்ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

மேலும் பாபர் ஆட்சி புரிந்த போது முஸ்லிம்களின் சதவிகிதம் இப்போதுள்ளதை விடப் பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால் தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.

பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?

பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,

“மகனே! இந்துக்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?

பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாகப் பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத் தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத் தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.

பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.

பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.

பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.

கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. “உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால் தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே!

அதுதான் போகட்டும்! முஸ்லிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.

வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்

”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒரு காலகட்டத்தில் இந்து முஸ்லிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சனை எதுவுமில்லை.

1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளிவாசலில் வைத்து பிரச்சனையை முதன் முதலாகத் துவங்கும் வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக்கவில்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.

1949ல் சங்பரிவாரம் புளுகு மூட்டையை அவிழ்த்து விடும் வரை இதுதான் நிலைமை.

எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.

இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.

பள்ளி இடிப்பு பயங்கரவாதத்தை அங்கீகரித்த நீதிமன்றம்

டிசம்பர் 6, 1992 – பட்டப்பகலில், வெட்ட வெளியில் ஓராயிரம் ஊடகங்களின் ஒளிப் பார்வையில் ஊர் உலகம் பார்க்க, மத்திய மாநில பாதுகாப்புப் படைகளின் பட்டாங்கமான துணையுடன் பாபரி மஸ்ஜித் ஒரு சில மணி நேரங்களில் இடித்துத் தகர்க்கப்பட்டது, தரைமட்டமாக்கப்பட்டது.

வன்முறைக் கூட்டம் கிளப்பி விட்ட பெரும் வெறியாட்டத்திற்கு, வான்முட்ட கிளம்பிய புழுதி மூட்டத்தின் ஊடே ஒரு வரலாற்றுச் சின்னம், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலம் பலியானது.

இந்த பயங்கரவாதச் செயலுக்கு, காவிக் கும்பலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கும் என்ற ஏக்கத்தில் எதிர்பார்த்திருந்த சட்ட வல்லுனர்கள் முதல் சாதாரண பாமரர்கள் வரை தற்போது வெளியாகியிருக்கும் பாபரி மஸ்ஜித் நில வழக்கின் தீர்ப்பைக் கண்டு பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாயினர்.

இந்த ஏக்கத்தை, தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை, மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் டி.ஆர். அந்தியாருஜினா தனது எழுதுகோலில் வடித்திருக்கின்றார். அதை இப்போது பார்ப்போம்.

டிசம்பர் 6, 1992 அன்று பாபரி மஸ்ஜிதை வேட்டையாடிய வெறிக் கூட்டத்திற்கு (தண்டனை வழங்குவது ஒருபுறமிருக்கட்டும்.) அவர்களின் வெறியாட்டத்திற்கு ஒரு சிறு கண்டனம் கூட இல்லாதது இந்தத் தீர்ப்பின் மிகப் பெரிய கூறும் கோளாறும் ஆகும்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக 1994ஆம் ஆண்டு, உச்சநீதி மன்றம் வெளியிட்ட தீர்ப்பில் பின்வருமாறு தெரிவிக்கின்றது.

சொற்ப நேரத்திற்குள்ளாக ஒட்டுமொத்த கட்டடமும் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் வெட்கக் கேடு!

இடிக்கப்பட்டது நாட்டின் பழம்பெரும் வரலாற்றுச் சின்னம் மட்டுமல்ல! பெரும்பான்மையினர் தங்கள் மீது அத்துமீறி அராஜகமாக நடக்க மாட்டார்கள் என்று சிறுபான்மையினர் கொண்டிருந்த உயர்ந்த நம்பிக்கை, நீதியின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்த்தெறியப்பட்டுள்ளது.

சட்டம் தன் கடமையைச் செய்யும்; அதன் நடவடிக்கை தொடரும் என்று அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இது ஆட்டம் காணச் செய்து விடடது.

எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் மாநில அரசாங்கத்தின் கைகளை மட்டும் நம்பியிருந்த ஐநூறு ஆண்டு காலக் கட்டடம் தகர்த்தெறியப்பட்டு விட்டது.

இது உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வேதனையின் வெளிப்பாடாகும்.

இது நீதிமன்றம் வெளியிட்ட வேதனை என்றால், அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் மத்திய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையைப் பார்ப்போம்.

அயோத்தியாவில் டிசம்பர் 6, 1992ல் நடைபெற்ற ராமஜென்ம பூமி பாபரி மஸ்ஜித் இடிப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயலாகும்.

இவர்கள் வெறும் ஒரு வழிபாட்டுத் தலத்தின் மீது தாக்குதல் தொடுக்கவில்லை. மாறாக, இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கை, மீது ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். அரசியல் சாசனம் போற்றுகின்ற சட்டத்தின் ஆட்சியை காலில் போட்டு மிதித்துள்ளனர்.

திடுமென ஒரு சில ஆயிரம் பேர்கள் அடங்கிய ஒரு கும்பல், கோடிக்கணக்கான இந்திய சமுதாயங்களின் உள்ளங்களை வரம்பு கடந்து புண்படுத்தியுள்ளனர் என்பது வெட்கக்கேடான செயலாகும்.

இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டு அவர்கள் பெரும் வேதனைக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகியிருக்கின்றனர்.

இது மத்திய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையாகும்.

பள்ளியை அதே இடத்தில் திரும்பக் கட்டித் தருவோம் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவும், மத்திய அரசும் 1992, டிசம்பர் 7 அன்றும், டிசம்பர் 27 அன்றும் அறிவித்தனர். பாபரி மஸ்ஜித் இடிப்பு எனும் அரக்கச் செயலின் தாக்கம் தான் மேற்கண்ட இந்த அறிவிப்புக்கள்.

தற்போது வெளியாகியுள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு, 1992, டிசம்பர் 6 அன்று நடந்த பள்ளிவாசல் இடிப்பு எனும் வெறிச் செயலை அறவே கண்டு கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல! சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலமானது ஏதோ காலி நிலம் என்பது போன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

பள்ளி இடிப்பு என்ற குற்றச் செயலை முடிந்து போன கதையாக்கியுள்ளனர்.

  1. ஏற்கனவே அங்கிருந்த பள்ளியின் மையக் குவிமாடத்திற்குக் கீழ் அமைந்த பகுதியில் தான் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கை அடிப்படையில் அந்தப் பகுதி இந்துக்களுக்கு என்றும்,
  2. ராமரின் சபுத்ரா, சீதா ரசோய் அமைந்த பகுதி நிர்மோகி அகாராவிற்கு என்றும்,
  3. இவ்விரு சாராருக்கும் ஒதுக்கப்பட்ட இந்தப் பகுதிகளைத் தவிர எஞ்சிய பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு இந்து மனுதாரர்களுக்கும், ஒரு பகுதி முஸ்லிம்களுக்கும் வகுக்கப்படும் எல்லை வரையறைக்குத் தக்க வழங்கப்பட வேண்டும்.

“இன்று சர்ச்சைக்குரிய பகுதியில் பள்ளியே இல்லை” என்ற அடிப்படையில் அமைந்த (தவறான) இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்தி, பங்கிடத் துவங்கினால் 6.12.1992 அன்று பள்ளிவாசலை இடித்த குற்றச் செயலை நீதிமன்றம் அங்கீகரித்து விடுகின்றது; அதைச் சட்டப்பூர்வமாக்கி விடுகின்றது.

ஒரு சொத்து தனக்குரியது என்று வழக்குத் தொடுத்த ஒரு சாரார், (பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நடந்தது போன்று) சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அந்தச் சொத்தின் அப்போதைய அமைப்பையோ, தோற்றத்தையோ, அதன் தன்மையையோ தனக்குச் சாதகமாக மாற்றினால் அந்த சாராருக்கு நீதிமன்றம் போட வேண்டிய முதல் உத்தரவு என்ன?

அந்தச் சொத்தை அது ஏற்கனவே இருந்த அதே தோற்றத்தில் ஆக்கித் தர வேண்டும் என்ற உத்தரவு தான்.

இந்தக் கடமையைத் தான் ஒரு நீதிமன்றம் செய்ய வேண்டும். இது தான் நீதி வழங்கும் சரியான சட்டத்தின் ஆரம்ப இலக்கணமாகும்.

தற்போதைய பாபரி மஸ்ஜித் வழக்கைப் போன்று சொத்தை அதே வடிவத்தில் திரும்பத் தர வாய்ப்பில்லை எனில், அப்போது நீதிமன்றத்தின் கடமை என்ன?

சட்டத்தைக் கையில் எடுத்து, அதற்குப் புறம்பாக நடந்த சாராருக்கு அந்தச் சொத்தின் பயனை அனுபவிப்பதற்கு அறவே அனுமதி தரக் கூடாது.

இது தான் நீதிமன்றத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். இது தான் நீதி வழங்கும் சட்டத்தின் ஆரம்ப இலக்கணமாகும்.

நீதி வழங்கும் சட்டத்தின் இந்த ஆரம்ப இலக்கணத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் புறக்கணித்திருக்கின்றது.

தீர்ப்பின் திறனாய்வு

இந்தத் தீர்ப்பின் தன்மையை இப்போது அலசுவோம்.

பள்ளியின் மையக் குவிமாடத்தின் கீழ் தான் ராமர் பிறந்த இடம் இருந்தது, அல்லது இடிக்கப்பட்ட ராமர் கோயில் இடிபாடுகளில் தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்றே ஒரு பேச்சுக்கு ஒத்துக் கொண்டு உயர் நீதிமன்றத்தை நோக்கி ஒரு கேள்வியை எழுப்புவோம். அந்தப் பள்ளி அதே இடத்தில் இடிக்கப்படாமல் இருந்திருந்தால் உயர் நீதிமன்றம் இப்போது வழங்கிய இதே தீர்ப்பை வழங்கியிருக்குமா? நிச்சயமாக வழங்காது.

அவ்வாறு வழங்கினால், 500 ஆண்டு கால பழமை வாய்ந்த அந்தப் பள்ளிவாசலை தகர்க்கச் சொல்லி முதலில் நீதிமன்றம் உத்தரவு போட வேண்டும். அப்போது தான் (மூன்று பங்கு என்ற பாகப் பிரிவினைக்குத் தக்க) காலி நிலம் கிடைக்கும்.

இப்படி ஒரு தீர்ப்பு, பள்ளி உடைக்கப்படாமல் இருக்கும் போது சாத்தியமா? என்றால் நிச்சயமாக சாத்தியமில்லை என்பது தான் சரியான பதில்.

இது காலி நிலம் சம்பந்தப்பட்ட வழக்கல்ல! கட்டப்பட்ட ஒரு பள்ளிவாசல், சட்டத்திற்குப் புறம்பாக இடிக்கப்பட்ட வழக்கு! சட்டத்திற்குப் புறம்பான இந்தச் செயலை சாதகமாக்கிக் கொண்டு நிலத்தை மூன்று கூறாகப் பங்கிட வேண்டும் என்று நீதிமன்றம் இப்படி ஓர் உத்தரவைப் போடலாமா? இது எப்படி நியாயமாகும்?

சமரசம், தேசிய அளவிலான சமாதானம் என்பதை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் புரிகின்றது.

இதை முஸ்லிம்கள் இதே உணர்வில் புரிந்து கொண்டு ஒத்துக் கொண்டால் எந்தவித மதப் பிரச்சனையும் இருக்காது. எதிர்பார்க்கப்படுவதும் இந்த அமைதி நிலை தான்.

இந்த நோக்கம் நிறைவேறாமல் தீர்ப்பு ஒத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றால் இது முஸ்லிம்களின் உள்ளங்களில் ஆறாத ரணத்தையும் மாறாத வேதனையையும் பதியச் செய்து விடும்.

காரணம், தங்கள் வழிபாட்டுத் தலம் அநியாயமாக இடிக்கப்பட்டதை நீதிமன்றம் மன்னித்ததுடன் மட்டுமல்ல! அதைச் சரி கண்டு, சட்டப்பூர்வமாக ஆக்கி விட்டது என்று முஸ்லிம்கள் உறுதியாக நம்புகின்றனர்.

————————————————————————————————————————————————————–

தொடர்: 9

ஸிஹ்ர் – ஒரு விளக்கம்

ஸிஹ்ர் மூலம் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டிருக்க முடியாது என்பதையும். அவ்வாறு நம்புவது ஏராளமான குர்ஆன் வசனங்களுக்கு எதிரானது என்பதையும் நாம் நிரூபித்தோம்.

நமது வாதங்களை மறுப்பதற்காக இஸ்மாயீல் ஸலபி எடுத்து வைத்த சில ஆதாரங்கள் அவருக்கே எதிராக அமைந்துள்ளதையும், சில ஆதாரங்கள் அவருடைய கருத்தை நிறுவ உதவவில்லை என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

அடுத்ததாக இஸ்மாயில் ஸலபி பின்வரும் வாதத்தை எடுத்து வைக்கிறார்.

பாதுகாக்கப்பட்ட நபி:

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்போர் பின்வருமாறு வாதம் செய்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் பல குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றது.

தூதரே! உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக! (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுத்துவத்தை நீர் எடுத்துரைத்தவராக மாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களிலிருந்து பாதுகாப்பான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)

இந்த வசனம் மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்று உத்தரவாதப் படுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றால் நபிக்கு அல்லாஹ் கொடுத்த பாதுகாப்பு எங்கே? அல்லாஹ் பாதுகாப்பான் எனும் போது நபிக்கு சூனியம் செய்ய முடியுமா? என்ற அடிப்படையில் வாதம் செய்கின்றனர்.

தர்ஜுமா முதலாம் பதிப்பில் 357 ஆம் குறிப்பில் இந்த வசனத்தை முக்கிய சான்றாக அவர் முன்வைக்கின்றார். ஆரம்பத்தில் இந்த வசனம் தான் சூனிய ஹதீஸை மறுப்பதற்கு வலுவான வாதமாக முன்வைக்கப்பட்டது. இந்த வசனத்திற்கு இந்த ஹதீஸ் எங்கே முரண்படுகின்றது?

இந்த வாதத்திற்கு ஒரு வரியில் விடை கூறலாம்! அல்லாஹ் கூறியது போன்று நபி (ஸல்) அவர்கள் சூனியத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள் என்று தானே இந்த ஹதீஸ் கூறுகின்றது? இந்த வசனமும், ஹதீஸும் முரண்படவில்லையே! என்று கூறி விடலாம்.

உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள் தாக்கப்படவில்லையா? அவரது முகத்தில் இரத்தம் தோயவில்லையா?

கைபரில் யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியை வழங்கினாள். நபி (ஸல்) அவர்கள் அதில் சிறிது சாப்பிட்டு விட்டார்கள். பின்னர், விஷம் கலக்கப்பட்ட செய்தி வஹீ மூலம் கிடைத்தது. அல்லாஹ் அவர்களைக் காத்தான்.

நபியவர்கள் தனது மரண வேளையில்,

நான் கைபரில் சாப்பிட்ட (விஷம் கலந்த) உணவின் வேதனையை இப்போது உணர்கிறேன். (புகாரி) என்றார்களே! அப்படியாயின் இந்த ஹதீஸ் 5:67 வசனத்திற்கு முரண்படுகின்றதா?

உண்மையில் 5:67 வசனத்தில் நபியைப் பாதுகாப்பதாக அல்லாஹ் உத்தரவாதம் அளிக்கின்றான். அந்த உத்தரவாதத்தின் அர்த்தம் என்னவென்றால் நபியை யாரும் கொல்ல முடியாது என்பதுதான். எனவே, கொல்ல முடியாது எனக் கூறும் குர்ஆன் வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டுப் பின்னர் பாதுகாக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் எந்த வகையில் முரண்படுகின்றது? என்று சிந்தித்துப் பாருங்கள்.

கொல்ல முடியாது என்பதுதான் 5:67 வசனத்தின் கருத்து என நாம் கூறவில்லை. அந்த வசனத்தின் அர்த்தமும் அதுதான். அந்த வசனம் குறித்த பின்வரும் விளக்கத்தைப் பொறுமையுடன் படித்துப் பாருங்கள்.

யாராலும் கொல்ல முடியாத தலைவர்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

போர்க் களங்களிலும் பங்கெடுத்து கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. உம்மை இறைவன் காப்பான என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது.

(திருக்குர்ஆன் 5:67)

இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.

இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான நிரூபணம்.

என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.

அன்றைய நிலையில் இவரைப் போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து தாம் கூறுவது இறை வாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.

இது  தர்ஜுமா விளக்கக் குறிப்பின் 145ஆவது இலக்கத்தில் இடம்பெறும் விளக்கமாகும். இந்த விளக்கத்தில் எத்தனை இடங்களில் கொல்ல முடியாது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது?

5:67 வசனம் நபி(ஸல்) அவர்களைக் கொல்ல முடியாது என்றுதான் கூறுகின்றது என்பதை மிக மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டே அந்த வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்று கூறியது நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.

5:67 வசனம் சூனியம் பற்றிய கருத்தைக் கூறவில்லை என்று தெரிந்துகொண்டே அந்த வசனத்தை மக்கள் முன்வைத்துத் தன் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கை, தனக்கிருக்கும் வாதத்திறமை, பேச்சு ஆற்றல் மூலம் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸிற்கு இது முரண்படுகின்றது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்?

இப்போது சூனியத்தை மறுப்பதற்கு இவர் வைக்கும் ஆயத்துக்களின் உண்மையான அர்த்தம், வாதங்களில் கூட இது ஐயத்தை ஏற்படுத்துகின்றதல்லவா?

சத்தியத்தைத் தேடும் எண்ணத்துடன் நடுநிலையோடு சிந்தித்தால் சூனியம் என்பது வெறும் தந்திர வித்தை என்ற தனது தவறான வாதத்தை வலுவூட்ட அவர் கையாளும் வசனங்களும் இதே அடிப்படையில்தான் தவறாகக் கையாளப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

இவ்வாறு வாதம் செய்யும் இஸ்மாயில் ஸலபி அதிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை.

குறிப்பாக கீழ்க்கண்ட வாசகங்களைப் பயன்படுத்தி விமர்சனம் செய்கிறார்.

5:67 வசனம் நபி(ஸல்) அவர்களைக் கொல்ல முடியாது என்று தான் கூறுகின்றது என்பதை மிக மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டே அந்த வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்று கூறியது நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.

5:67 வசனம் சூனியம் பற்றிய கருத்தைக் கூறவில்லை என்று தெரிந்துகொண்டே அந்த வசனத்தை மக்கள் முன்வைத்துத் தன் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கை, தனக்கிருக்கும் வாதத்திறமை, பேச்சு ஆற்றல் மூலம் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸிற்கு இது முரண்படுகின்றது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்?

நான் தெரிந்து கொண்டே இந்த வாதத்தை எடுத்து வைப்பதாகக் கூறி நோக்கம் கற்பிக்கிறார். ஆனால் இந்த வாதத்துக்கு முழுத் தகுதி பெற்றவர் இஸ்மாயீல் ஸலபி தான். தெரிந்து கொண்டே உண்மைக்கு மாறான கருத்தை அவர் தான் விதைக்கிறார். எப்படி என்று பார்ப்போம்.

இப்போது திருக்குர்ஆனின் எட்டாவது பதிப்பு உங்கள் கைகளில் தவழ்கிறது. முதல் பதிப்பில் இதையும் ஒரு வாதமாக நாம் எடுத்து வைத்திருந்தோம். அடுத்தடுத்த பதிப்புகளுக்காக நாம் மீண்டும் ஆய்வு செய்து வந்த போது இந்த வாதத்தில் சில கேள்விகள் எழுவதையும் அந்தக் கேள்விகளில் நியாயம் இருப்பதையும் அறிந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிர் பாதுகாப்பைத் தான் இவ்வசனம் சொல்கிறது என்பது தான் அதன் கருத்து என்பதால் நாமே கவனித்து அடுத்தடுத்த பதிப்புகளில் இந்த வாதத்தை நீக்கி விட்டோம். இவர் விமர்சனம் செய்வதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் நீக்கியதைத் தான் இப்போது பயங்கரமான வாதமாக எடுத்து வைக்கிறார்.

நாம் அடுத்தடுத்த பதிப்புகளில் இந்த வாதத்தை வைக்கவில்லை என்பதை இவரும் அறிந்திருக்கிறார். அதனால் தான் முதல் பதிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவரே குறிப்பிடுகிறார்.

எந்த மனிதரின் கருத்தை மறுப்பதாக இருந்தாலும் அந்த மனிதர் அந்தக் கருத்தில் இப்போது இருந்தால் மட்டுமே விமர்சிக்க வேண்டும். அல்லது அந்தக் கருத்தில் இப்போதும் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாவிட்டாலும் விமர்சிக்கலாம். அந்தக் கருத்தில் அவர் இப்போது இல்லை எனும் போது தெரிந்து கொண்டே அதை விமர்சனம் செய்வது கயமைத் தனமாகும். ஆனால் முதல் பதிப்பில் நான் எழுதியதை அடுத்தடுத்த பதிப்பில் நானே நீக்கிய பிறகு அதை இப்போதும் நான் சொல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தான் நேர்மையா? இவர் கேட்ட நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? இத்தனை கேள்விகளும் இவரை நோக்கியே திரும்புகிறது.

இவர் சுட்டிக் காட்டுவதை விட அதிகக் கேள்விகள் அதில் எழுவது நமக்குத் தெரிந்து தான் அந்த வாதத்தை அறவே நீக்கி விட்டோம். அந்த வாதத்தை நாமே மாற்றிக் கொண்டிருக்கும் போது அதற்குப் பதில் சொல்லி நான் அந்தக் கருத்தில் தான் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விதைப்பது தான் நேர்மையா? இது தான் பேணுதலா?

குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்ற அறிவு கிடைக்கும் முன்பு கடந்த காலங்களில் சில பித்அத்களையும் நான் செய்துள்ளேன். அதையெல்லாம் எடுத்துக் காட்டி அதற்கும் இவர் மறுப்பு எழுதினாலும் எழுதுவார் போலும். எனவே நாம் இதற்குப் பதில் சொல்லத் தேவை இல்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————————–

பொருளியல்       தொடர்: 8

போதுமென்ற மனம்

நம்மிடத்தில் செல்வங்கள் இருக்கும் போது அதை வைத்து நமது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துக் கொள்ளலாம். ஆனால் பிறரைப் பார்த்து அவனை விட நாம் செல்வந்தராக இருக்க வேண்டும் என்பதற்காக பிறரிடம் யாசகம் கேட்கிறோம். இப்படி யாசகம் கேட்பதன் தீமைகளைக் கடந்த இதழில் கண்டோம். எனவே யாரிடமும் கையேந்தாமல் இருக்கின்ற செல்வத்தை வைத்து நமது உள்ளம் திருப்தி கொள்ள வேண்டும். நம்மிடம் போதுமென்ற மனம் இருக்க வேண்டும்.

யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் யார் பொறுப்பு ஏற்கிறார்களோ அவருக்கு சுவனத்தை நான் பொறுப்பு ஏற்கிறேன்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஸவ்பான் (ரலி) அவர்கள், “நான் (அவ்வாறு இருப்பேன்)என்று கூறினார்கள். அவர் யாரிடமும் எதையும் கேட்காதவராக ஆகிவிட்டார்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

நூல்: அபூதாவூத் 1400

நாம் பிறரிடத்தில் யாசகம் கேட்காமல் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும்.

ஏழைக்கு தர்மம் செய்ய வேண்டும்

பிறருக்குத் தருவதாகயிருந்தால் ஏழைக்குக் தர வேண்டும். நமது அந்தஸ்திலுள்ள பணக்காரனுக்குக் தரக் கூடாது.

வாழ்க்கையில் போதிய செல்வம் இல்லாமலிருந்தாலும் யாரிடமும் கேட்காமல் இருப்பதை வைத்து போதுமாக்கிக் கொள்பவரே ஏழையாவார். அப்படிக் கேட்டாலும் பிறரிடத்தில் கெஞ்சிக் குழைந்து கேட்காமல் தனது சுய மரியாதையைப் பேணுபவன் தான் ஏழை. இப்படிப்பட்டவர்களுக்குத் தான் நமது செல்வங்களை தர்மம் செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக அலைபவன் ஏழையல்லன். மாறாக, தன் வாழ்க்கைக்குப் போதிய செல்வம் இல்லாமலிருந்தும் பிறரிடம் கேட்க வெட்கப்படுகின்றவனும் அல்லது (அப்படிக் கேட்டாலும்) கெஞ்சிக் குழைந்து கேட்காதவனுமே ஏழையாவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1476

கேட்கக் கூடாது; தந்தால் வாங்கலாம்

நாம் ஏழையாக இருந்தாலும் பிறரிடத்தில் கேட்கக் கூடாது. நமது சுயமரியாதையை நாம் பேண வேண்டும். அவர்களே நமது கஷ்டங்களைப் பார்த்து நமக்குத் தந்தால் அதை வாங்கலாம். அதை மறுக்கக் கூடாது.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)என்றார்கள்.

நூல்: புகாரி 1473

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வலிந்து) கேட்காமலும் உள்ளம் ஆசைப்படாமலும் தனது சகோதரனிடமிருந்து ஏதாவது பொருள் ஒருவருக்கு வந்தால் அதை அவர் ஏற்கட்டும். அதை மறுக்க வேண்டாம். அது அல்லாஹ்விடமிருந்து வந்த உணவாகும்.

அறிவிப்பவர்:  காலித் பின் அதீ அல்ஜுஹ்னி (ரலி)

நூல்: அஹ்மத் 17257

பிறருக்காகப் பரிந்துரைத்தல்

நமக்குப் போதுமான செல்வம் இருக்கும் போது நமக்கு யாராவது அன்பளிப்பு வழங்கினால், அது நமக்குத் தேவையில்லையென்றால் அதைப் பிறருக்குத் தருமாறு பரிந்துரைக்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரிடமும் கேட்காமலும் உள்ளம் ஆசை வைக்காமலும் இந்த உணவிலிருந்து ஏதாவது ஒன்று ஒருவருக்கு வந்தால் அவர் அதைத் தனது உணவில் சேர்த்து விசாலமாக்கிக் கொள்ளட்டும். அவர் தேவையில்லாதவராக இருந்தால் அவரை விடத் தேவை உடைய ஒருவருக்குக் கொடுக்கட்டும் 

அறிவிப்பவர்: ஆயித் பின் அம்ரு (ரலி)

நூல்: அஹ்மத் 19726

போதுமென்ற மனமுள்ளவன் பணக்காரன்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1898

போதுமென்ற மனமுள்ளவன் வெற்றியாளன்

அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்திலிருந்து போதுமாக்கிக் கொள்ள வேண்டும். யாரிடத்தில் போதுமென்ற மனம் இருக்கிறதோ அவர் தான் வெற்றியாளர் ஆவார்.

அவன் மாடி வீடு கட்டுகிறான்; நாமும் மாடி வீடு கட்ட வேண்டும். அவன் பைக் வாங்குகிறான்; நாமும் பைக் வாங்க வேண்டும். அவள் நகை வாங்குகிறாள்; நாமும் நகை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

வீடு கட்டுவதற்கும், பைக் வாங்குவதற்கும், நகை வாங்குவதற்கும் நாம் கடன் வாங்குகிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு வழங்கியது போதும் என்ற மனம் நம்மிடத்தில் இருந்தால் யாரிடத்திலும் கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்தலாம்.

நாம் கடன் வாங்கி விட்டு அதை திருப்பித் தருவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறோம். நாம் மரணித்து விட்டால் நம்முடைய குடும்பத்தாரிடம் அந்தக் கடனைக் கேட்கிறார்கள். அதைச் செலுத்துவதற்கு அவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அதனால் அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்தைப் போதுமென்ற மனதுடன் நாம் பொருத்திக் கொண்டால் நாம் தான் வெற்றியாளர்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1903

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நாம் ஏழையாக இருக்கும் போது நமக்குக் கீழ் உள்ளவரைப் பார்க்க வேண்டும். நாம் ஏழை என்றால் நமக்குக் கீழ் உள்ள பரம ஏழையைப் பார்க்க வேண்டும். நாம் நடுத்தர பணக்காரனாக இருந்தால் நமக்குக் கீழ் உள்ள ஏழையை பார்க்க வேண்டும். நாம் பெரும் பணக்காரனாக இருந்தால் நமக்குக் கீழ் உள்ள நடுத்தர பணக்காரனைப் பார்க்க வேண்டும். இப்படி இருந்தால் நமக்குப் போதுமென்ற மனம் வந்துவிடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5671

ஒரு மனிதர் நம்மை விட செல்வந்தராகவும், அழகானவராகவும் இருந்தால், அவரைப் பார்த்து நமது மனதை அலைய விடாமல், செல்வத்திலும் அழகிலும் நம்மை விடக் குறைந்தவரைப் பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால் நமது மனதைக் கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம். நமது உள்ளத்தில் போராசையும் வராது. இந்த வழிமுறைகளை நாம் அனைவருமே கடைபிடிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6490

உலகத்தில் அன்னியனைப் போல் வாழ வேண்டும்

இவ்வுலகில் நாம் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும்; நம்மிடத்தில் தோட்டம், துறவு, வீடு, பங்களா, கார் இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். இப்படி ஆசைப்படும் போது இவ்வுலகில் தடுக்கப்பட்ட அனைத்து செயல்களையும் செய்வதற்குத் தயங்க மாட்டோம். இவ்வுலகில் தவறு செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் இருக்கிற செல்வத்தை வைத்துப் போதுமாக்கிக் கொள்ள வேண்டும். அல்லது இவ்வுலகில் வழிப்போக்கனைப் போன்று வாழ வேண்டும். இப்படி இருந்தால் வெற்றி பெற்று விடலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இருஎன்று சொன்னார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “நீ மாலை நேரத்தை அடைந்துவிட்டால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்துவிட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உனது வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடுஎன்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

நூல்: புகாரி 6416

செல்வத்திற்கு அடிமையானவன் துர்பாக்கியசாலி

இந்த உலக ஆசாபாசங்களுக்காகவும் தனது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் நாம் இந்த உலகத்தில் செல்வங்களைச் சேமிப்பதற்கு ஆசைப்படுகிறோம். ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் செல்வத்தின் மீது உள்ள மோகத்தால் நாம் நஷ்டவாளியாக ஆகிவிடுகிறோம். அல்லாஹ் நமக்குத் தாராளமாக செல்வத்தை வழங்கும் போது மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வை போற்றிப் புகழ்கிறோம்; வணக்க வழிபாடுகளையும் சரியான முறையில் செய்கிறோம்.

ஆனால் அல்லாஹ் செல்வத்தைக் குறைவாகத் தந்து நம்மை சோதிக்கும் போது அல்லாஹ்வை நாம் திட்டுகிறோம். அல்லது வணக்க வழிபாடுகளில் குறை வைக்கிறோம். வணக்க வழிபாடுகளில் குறை வைக்கும் போது நாம் நஷ்டவாளியாக மாறி விடுகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான்.  அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தி யடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தி யடைவான்.  

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6435

செல்வத்திற்கு அடிமையானால் மார்க்கம் போய்விடும்

செல்வத்தின் மீதுள்ள மோகத்தால் மார்க்கத்திற்குக் கட்டுப்படாமல், மார்க்கம் அனுமதிக்காத செயல்களில் ஈடுபடுகிறோம். ஒருவர் செல்வம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி பதவியின் மீது ஆசை கொள்கிறான்.

தற்காலத்திலுள்ள அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக யாரும் அரசியலுக்கு வருவதில்லை. நாம் முன்னேற வேண்டும்; பணக்காரனாகவும் மதிப்புமிக்கவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறார்கள்.

இவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் இஸ்லாம் கூறிய அனைத்துக் கடமைகளையும் தன்னால் முடிந்த அளவு கடைபிடிப்பார்கள். ஆனால் இந்தச் சாக்கடையில் விழுந்த பிறகு இஸ்லாம் கூறிய அனைத்துக் கடமைகளையும் மறந்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் மார்க்கமும் இவர்களிடத்திலிருந்து அழிந்து விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு ஆட்டு மந்தையினுள் அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அதனை நாசமாக்குவதானது, ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப் பற்றை நாசாமாக்குவதை விட மோசமானது கிடையாது.

அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)

நூல்: திர்மிதி  2298

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————————–

விவாதமும் விதண்டாவாதமும்

சமரசம் எனும் மாதம் இருமுறை பத்திரிக்கையில் 16-31 ஆகஸ்டு 2010 இதழில் “விதண்டாவாதக் கலாச்சாரம்’ என்ற தலைப்பில் உமர் அலீ என்பவர் தமது ஆத்திரத்தைக் கொட்டியுள்ளார்.

“எங்களோடு விவாதம் செய்யத் தயாரா? சமீப காலமாகத் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க விளக்கக் கூட்டங்களில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கும் வாசகம்தான் இது!’ என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை.

“தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபடுவதால் நமது ஆற்றல்களும் செல்வங்களும் நேரங்களும் விரயமாக்கப்பட்டு வருகின்றன. நாம் முன்னேறாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்’ என்று கட்டுரை தொடர்வதைப் பார்த்தால், வீண் விவாதம், விதண்டா வாதம், குதர்க்கமான சர்ச்சைகள் போன்ற அர்த்தமற்ற விவகாரங்களைத் தான் கட்டுரையாளர் கடுமையாகச் சாடுகிறார் என்று நாம் கருதலாம். அவர் குறிப்பிட்டுள்ள குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களும் இக்கருத்தையே பிரதிபலிக்கின்றன. ஆனால்…

“கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழகத்தில் விவாதங்களின் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கையை விட ஃபத்வாக்களின் மூலம் முஷ்ரிக்குகளாகவும் காஃபிர்களாகவும் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்’ என்ற அவரது ஆவேச வசனங்கள் விஷமத்தைப் பிரதிபலிக்கின்றன.

விதண்டா வாதங்களைச் சாடிய கட்டுரையாளர் “விவாதங்களின் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கை குறைவு, முஷ்ரிக்குளாகவும் காஃபிர்களாகவும் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்’ என்று கூறுவதன் வாயிலாக  சத்தியப் பிரச்சாரத்தின் ஒரு மகத்தான யுக்தியைக் கொச்சைப்படுத்துகிறார்.

ஆம், விவாதம் என்பது ஒரு பிரச்சார யுக்தியல்லவா!

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 16:125

விவேகம், அழகிய அறிவுரைகள் மட்டுமன்றி விவாதமும் பிரச்சாரத்திற்கான  ஒரு வழி என்று அல்லாஹ் வலியுறுத்துகிறான். இது உமர் அலீ பாயின் கவனத்திற்கு ஏன் வரவில்லை?

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 2:258

எத்துணை அற்புதமான நிகழ்ச்சி இது!

திருக்குர்ஆனின் 25:63ஆம் வசனத்தைக் குறிப்பிட்ட ஆத்திரக்கார உமர் அலீக்கு 2:258 மற்றும் 16:125 ஆகிய வசனங்கள் கண்களில் தென்படாமல் போனது ஏனோ!

31 ஆண்டுகளில் சமரசத்தால் சாதிக்க இயலாமற் போனதையெல்லாம் 25 ஆண்டுகளில் ஏகத்துவப் புரட்சி சாதித்து விட்டதால் தான் விவாதத்தைப் பற்றிப் போதிக்கிறார். காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும் தான் இவரைக் கண்டபடி எழுதத் தூண்டியுள்ளது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற பெயரில் இவர்கள் முஷ்ரிக்குகளுடனும் காஃபிர்களுடனும் சமரசம் செய்து கொள்வார்கள். மாநாடு என்ற பெயரில் மக்களைக் கூட்டி மாற்று மதத்தினரைக் கொண்டு மார்க்கம் பேசச் சொல்வார்கள்.

சொல்வதைத் தெளிவாக – நேரடியாகச் சொல்லுங்கள் என்ற குர்ஆன் வசனத்தைப் பத்திரிக்கை தலையங்கத்தின் தலைப்பில் போட்டு விட்டு கவிதை – சிறுகதை என கற்பனைகளைக் காகிதங்களில் கொட்டி விற்பனை செய்வார்கள்.

மானுட வசந்தம் – தர்பியா என்ற பெயரில் வாய்க்கு வந்ததையெல்லாம் நபிமொழி என்று கூறி வசனம் பேசுவார்கள்.

சுதந்திரமாகச் சுற்றித் திரியும் புறாக்களைப் பிடித்து வைத்து, பின்னர் எந்த பயனுமின்றி சமாதான அடையாளமாக பறக்கவிட்டு சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் சாமரம் வீசுவார்கள்.

இவர்களுக்கென்று ஒருமித்த கருத்து எதுவுமில்லை. அதனால் தான் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழக அமைப்பு விவாதம் கூடாதென்று கூறும் நிலையில் கேரள அமைப்பு விவாதம் செய்கின்றது.

ஐயா, உமர் அலீயாரே! 25 ஆண்டுகள் என்று காலக் குறிப்பு கொடுத்துள்ளீரே! உமக்கு வரலாறு தெரியுமா?

எண்பதுகளின் மத்தியில் தவ்ஹீத் எழுச்சி ஏற்பட்டபோது தான் இஸ்லாத்தின் வடிவமே சிதைக்கப்பட்டிருந்த நிலை மக்களுக்குத் தெரிய வந்தது. அப்போது தான் அனாச்சாரங்களையே மக்களிடம் ஆச்சாரங்களாக அறிமுகப்படுத்திய உலமா சபையோரிடம் 48 பக்கங்களில் விளக்கம் கேட்டு கடிதம் எழுதப்பட்டது.

உலமாக்கள் குமுறினார்கள். பதில் எழுதத் திராணியில்லாததால் கேள்விகளை அலட்சியம் செய்தார்கள். சத்தியத்தை மக்களிடம் தெளிவாகப் பேசிய எங்களை மக்களிடம் தவறாகச் சித்தரித்தார்கள். வஹ்ஹாபிகள், யூதர்களின் கைக்கூலி, இஸ்லாத்தின் விரோதிகள், அரபு நாட்டுப் பணத்திற்கு அடிமைப்பட்டு முன்னோர்களைக் கேவலப்படுத்துகிறார்கள், அவ்லியாக்களை அவமதிக்கிறார்கள், இமாம்களை இழிவுபடுத்துகிறார்கள் என்றெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறி சதிவேலைகளில் ஈடுபட்டார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க விவேகத்துடனும் அழகிய அறிவுரைகள் மூலமாகவும் அல்லாஹ்வின் உண்மையான பாதைக்கு மக்களை அழைத்த போது தான், “அவர்களின் பேச்சைக் கேட்காதே! பத்திரிக்கைகளைப் படிக்காதே!’ எனக் கூறி சத்தியப் பிரச்சாரத்தையும் பிரசுரத்தையும் முடக்க முயன்றனர். இத்தனைத் தடைகளையும் மீறி பொதுமக்களே தவ்ஹீத் பிரசுரங்களில் உள்ள விவரங்களை – ஆதாரங்களைப் படித்துவிட்டு உலமாப் பெருமக்களிடம் கேள்விகளைக் கேட்டபோது – ஆதாரம் கேட்ட போது அந்த உலமாக்கள் மழுப்பினார்கள். மார்க்க ஆதாரங்கள் அரபியில் உள்ளன எனக் கூறி குர்ஆன் – ஹதீஸ் ஆதாரங்களைக் கொச்சைப்படுத்தி சத்தியத்தைப் பொய்ப்பித்த போது தான் விவாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடிப்படை ஆதாரங்களை அலட்சியப்படுத்தி விட்டு முன்னோர்கள் சென்டிமெண்டில் சமுதாயத்தை எங்கோ ஓட்டிச் செல்ல முயன்ற உலமாக்களை இனங்காட்டவே விவாதம் அரங்கேறியது. அதுவும் நாகரிகமாக!

கோட்டாறில் நடந்த விவாதம் ஷிர்க்குக்கு சமாதி கட்டியது. ஜெபமணியுடன் நடந்த விவாதம் கிறிஸ்தவர்களின் சவடாலுக்கு முடிவு கட்டியது. காதியானிகளுடன் நடந்த விவாதம் தடம்புரண்டவர்களை மீட்டெடுத்தது.

சுன்னத் ஜமாஅத்தினருடன் நடந்த விவாதம் சத்தியத்தைச் சாமானியர்களுக்கும் உணர்த்தியது. நாத்திகவாதிகளுடன் நடந்த விவாதம் முஸ்லிம்களைத் தலை நிமிரச் செய்தது.

இவை போக…

சத்தியப் பிரச்சாரம் சதிகளை முறியடித்து இளைஞர்களையும் சமூக சீர்திருத்தக் காரியங்களில் ஈடுபட வைத்தது. வரதட்சணைக் கொடுமையை ஏகத்துவப் எழுச்சி விரட்டியடித்ததால் புரட்சிகரமான திருமணங்கள் மலர்ந்தன.

கதாகாலட்சேபங்களை ஹதீஸ்களாகக் கேட்டுவந்த பாமர முஸ்லிம்களுக்கு ஹதீஸ் கலை பற்றிய பாடம் நடத்தப்பட்டது சாதனையில்லையா?

அரபி பூச்சாண்டி காட்டிய பண்டிதர்களின் சமாளிப்பை அடையாளம் காட்ட பாமரர்களும் புரியும் வகையில் ஆதார அடிப்படைகளைத் தமிழாக்கம் செய்தது சாதனை தானே!

அரபி இலக்கணம், தர்க்க சாஸ்த்திரம், ஃபிக்ஹு சட்டங்களைப் பாடத்திட்டங்களாக வைத்திருந்த அரபுக்கல்லூரிகள் தஃப்ஸீர் மற்றும் ஹதீஸ் நூல்களைத் தூசி தட்டியது எப்போது? எண்பதுகளின் இறுதியில் தானே!

கட்டுரைகளில் குர்ஆன் – ஹதீஸ் ஆதாரங்களைக் கூறுவதும் அவற்றிற்கான இலக்கங்களைக் குறிப்பிடுவதும் ஏகத்துவப் புரட்சி ஏற்படுத்திய மாற்றமல்லவா?

எனவே கண்ணாடிக் கூண்டில் இருந்து கொண்டு கல்கோட்டையை நோக்கிக் கல்லெறிய வேண்டாம்! உண்மையை உணர்ந்து செயல்படுங்கள் என்பதை மடடும் இப்போதைக்குச் சொல்லி வைக்கின்றோம்.

மற்றபடி அவர் எடுத்தாண்டிருக்கும் ஆதாரங்கள் யாவும் விதண்டாவாதங்களைக் கண்டிக்கும் வகையில் அமைந்தவை என்பதால் அதற்குப் பதில் சொல்லத் தேவையில்லை.

ஒரு வேளை, அவை விவாதத்தையே கண்டிக்கும் என்று அவர்கள் கருதினால் அதைப் பற்றி விவாதம் செய்யத் தயாரா என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

– லப்பைக்குடிக்காட்டிலிருந்து அம்சம்

————————————————————————————————————————————————————–

பெருநாள் தொழுகை தக்பீர்கள்

ஆதாரமற்ற ஹனபிச் சட்டம்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

முஸ்லிம்கள் பல்வேறு வணக்க வழிபாடுகளில் தங்களுக்குள் வேறுபட்டு இருப்பதைப் போன்று, இஸ்லாத்தின் அடிப்படைத் தூண் என வர்ணிக்கப்படும் தொழுகை முறையிலும் பிளவுபட்டே இருக்கின்றனர்.

வருடத்திற்கு இரு முறை தொழப்படும் பெருநாள் தொழுகையைக் கூட நபிகளார் கற்றுத் தந்த முறையில் நிறைவேற்றுவதில்லை. ஒவ்வொரு மத்ஹபினரும் வெவ்வேறான முறையில் பெருநாள் தொழுகையை தொழுகின்றனர்.

குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இவ்விரண்டு மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருந்திருந்தால் பெருநாள் தொழுகை முறை உட்பட எதிலும் ஆளுக்கொரு முறையைத் தேர்வு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. அனைவரும் ஒரே முறையில் அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றுபவர்களாக இருந்திருப்பார்கள்.

பெருநாள் தொழுகையில் எத்தனை தக்பீர்கள் கூறவேண்டும்? என்று மத்ஹபைப் பின்பற்றுவோரிடம் கேட்டால் ஷாஃபி மத்ஹபினர் ஒரு விதமாகவும், ஹனபி மத்ஹபினர் வேறு விதமாகவும் பதிலளிக்கின்றனர்.

எனவே தேவையற்ற இக்குழப்பத்தை போக்கும் விதமாக பெருநாள் தக்பீர் தொடர்பான தெளிவான நபிவழியை இங்கே காண்போம்.

நபிவழி தக்பீர்கள் 7+5

பெருநாள் தொழுகையை நபியவர்கள் எவ்வாறு தொழுதுள்ளார்கள் என்பதைப் பல்வேறு ஹதீஸ்கள் மிகத் தெளிவாக, குழப்பத்திற்கு இடமில்லாத வகையில் தெளிவுபடுத்துகின்றன. முதல் ரக்அத்தில் தக்பீர் தஹ்ரீமா தவிர கூடுதலாக ஏழு தக்பீர்களையும், இரண்டாவது ரக்அத்தில் கூடுலாக ஐந்து தக்பீர்களையும் கூறுவார்கள். இவைகளைக் கூறிய பிறகே அல்ஹம்து சூராவை ஓத ஆரம்பிப்பார்கள். இவ்வாறு தான் நபிகளாரின் பெருநாள் தொழுகை முறை அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),

நூல்கள்: அபூதாவூத் 971, பைஹகீ 6392

பெருநாள் தக்பீர் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களில் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாகும். இமாம் புகாரி அவர்கள் தக்பீர் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களில் இதை விட மிக ஆதாரப்பூர்வமான செய்தி வேறெதுவும் இல்லை என குறிப்பிடுகிறார்.

நூல்: தர்தீபுல் இலலில் கபீர்

இமாம் ஷாஃபி அவர்களும் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் கூற வேண்டும் என கூறியுள்ளார்கள்.

(பார்க்க: அல் உம்மு, பாகம்: 1, பக்கம்: 193)

ஹனபி மத்ஹபினரின் அறியாமை

7+5 என்ற எண்ணிக்கையில் தான் தக்பீர் கூற வேண்டும், இதுவே நபிவழி என்பதைக் கண்டோம். ஷாபி மத்ஹபினர் உட்பட பலரும் இந்த வழிமுறையைத் தேர்வு செய்து தான் பெருநாள் தொழுகை தொழுகின்றனர். ஆனால் ஹனபி மத்ஹபினர் இந்நபிவழிக்கு மாற்றமான முறையில் தொழுது வருகின்றனர்.

முதல் ரக்அத்தில் தக்பீர் தஹ்ரீமாவிற்குப் பிறகு கூடுதலாக மூன்று தக்பீர்கள் என மொத்தம் நான்கு தக்பீர்கள் கூறி, பிறகு ஓத ஆரம்பம் செய்கின்றனர். இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து, துணை சூரா ஆகியவற்றை ஓதிவிட்டு, பிறகு மூன்று தக்பீர் கூறுகின்றனர்.

இவர்கள் இவ்வாறு தொழுவதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக குறிப்பிடுகின்றனர்.

இரு பெருநாள் தொழுகைகளில் நபிகள் நாயகம் (ஸல்) எவ்வாறு தக்பீர் கூறுவார்கள்?” என அபூ மூஸா, ஹுதைஃபா இருவரிடமும் ஸயீத் பின் அல்ஆஸ் கேட்டார். அதற்கு, “ஜனாஸா தொழுகையில் கூறுவதைப் போன்றே (ஒரு ரக்அத்திற்கு) நபியவர்கள் நான்கு தக்பீர்கள் கூறுவார்கள்என அபூ மூஸா பதிலளித்தார்.

அறிவிப்பவர்: அபூ ஆயிஷா

நூல்; அபூதாவூத் 973

கூடுதலான தக்பீர்களை சேர்த்து மொத்தம் ஒரு ரக்அத்திற்கு நான்கு தக்பீர்கள் நபியவர்கள் கூறியதாக இந்தச் செய்தியில் அபூமூஸா அறிவிக்கின்றார். இதை ஆதாரமாகக் கொண்டு தான் தாங்கள் கூடுதலாக 3+3 தக்பீர்கள் கூறுவதாகத் தெரிவிக்கின்றனர். பல்வேறு காரணங்களால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

  1. இந்த செய்தியின் நான்காவது அறிவிப்பாளரான அப்துர் ரஹ்மான் பின் ஸவ்பான் என்பார் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.

இவரது ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியதாகும் என இமாம் அஹ்மத் விமர்சித்துள்ளார், அபூ ஜூர்ஆ, அஜலி, நஸயி போன்ற அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என குறை கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 21, பக்கம்: 150, 151

எனவே இவரது செய்தி ஏற்கத்தக்கதல்ல என்பது நிரூபணமாகிறது.

  1. இதே அறிவிப்பாளர் தொடரில் அபூ ஆயிஷா என்பார் ஏழாவது அறிவிப்பாளராக இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார்.

இப்னுல் கத்தான், இப்னுல் ஹஸ்ம் ஆகிய அறிஞர்கள் இவர் யாரென்று அறியப்படாதவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 38, பக்கம்: 147

இப்னு ஹஜர் மற்றும் தஹபீ ஆகியவர்களும் இவரை அறியப்படாதவர் என்றே குறை கூறுகின்றனர். ஹதீஸ் கலை விதிப்படி அறியப்படாதவர் ஹதிஸின் அறிவிப்பாளராக இடம் பெற்றால் அந்த ஹதீஸ் பலவீனமானதாகக் கருதப்படும். இது மேலும் இச்செய்தியின் பலவீனத்தை அதிகரிக்கின்றது.

  1. இது போக இந்தச் செய்தியில் குழப்பம் உள்ளதாக இமாம் பைஹகீ குறிப்பிடுகின்றார். அறிவிப்பாளர் இரு விஷயத்தைத் தவறுதலாக அறிவித்திருக்கிறார்.

நபிகள் நாயகம் கூறியதாக அபூமூஸா கூறினார் என்பது ஒரு தவறு. ஏனெனில் இதை நபிகள் நாயகம் கூறியதாக அபூமூஸா கூறவில்லை. மாறாக இப்னு மஸ்ஊத் கூறியதாகவே அவர்கள் அனைவர்களும் கூறுகின்றனர்.

ஸயீத் பின் அல்ஆஸ் என்பார் ஹுதைஃபா, அபூ மூஸா இருவரிடமும் பெருநாள் தொழுகையின் தக்பீரைப் பற்றி விளக்கம் கேட்டு ஆளனுப்பினார். அதற்கு அவ்விருவரும் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் இது பற்றி கேட்கச் சொல்ல, அதற்கு இப்னு மஸ்ஊத் தக்பீர் கூறும் முறையை தெரிவிக்கின்றார். இதுவே இச்சம்பவத்தின் உண்மை நிலை.

மற்றொரு தவறு:  அவ்வாறு இப்னு மஸ்ஊத் தக்பீர் கூறும் முறையை கூறும் போது முதல் ரக்அத்தில் 4 தக்பீர்களை ஓதுவதற்கு முன்பும், இரண்டாவது ரக்அத்தில் ஓத வேண்டியவற்றை ஓதிவிட்டு ருகூவில் இணையும் முன் நான்கு தக்பீர்கள் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேற்கண்ட சம்பவம் இப்னு மஸ்ஊத் கூறியதாக பைஹகீ பாகம்: 3, பக்கம்: 289ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இப்னு மஸ்ஊத் கூறியதை நபிகள் நாயகம் கூறியதாக அறிவிப்பாளர் தவறாக அறிவித்து விட்டார். மேலும் தக்பீரின் எண்ணிக்கை விஷயத்திலும் தவறாகவே கூறியுள்ளார். இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள் என்பதே பிரபலமானது  என்று இமாம் பைஹகீ குறிப்பிடுகின்றார்.

குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டு மட்டும் தான் மார்க்கக் கடமைகளை, வணக்க வழிபாடுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவையாகும். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒன்றைக் கூறினார் என்பதால் அது வணக்கம் என்ற தகுதியை அடையாது.

இவர்கள் ஆதாரமாக மேற்கோள் காட்டும் ஹதீஸினை இமாம் நவவீ அவர்கள் உட்பட பல அறிஞர்கள் பலவீனமானது என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வளவு பலவீனம் நிறைந்த ஒரு ஹதீஸை இவர்கள் தூக்கிப் பிடித்து நிறுத்தப் பார்ப்பது, அவர்கள் தங்கள் மத்ஹபின் மீது கொண்டுள்ள வெறியை, தீராத மோகத்தைப் பளிச்சிடுகின்றது.

ஹனபி மத்ஹபினர் ஆதாரமாகக் காட்டும் இந்த ஹதீஸ் ஆதாரத்திற்குத்  தகுந்ததல்ல. இது மிகவும் பலவீனமான செய்தி என்பதை அறியலாம்.

வளீன் பின் அதாஃ என்பாரின் அறிவிப்பு

எங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பெருநாள் தொழுகையை தொழுவித்தார்கள். முதல் ரக்அத்தில் நான்கு தக்பீர்கள் இரண்டாம் ரக்அத்தில் நான்கு (என மொத்தம் எட்டு) தக்பீர்கள் கூறினார்கள். தொழுகையை முடித்து எங்களிடையே முன்வந்து “ஜனாஸா தொழுகையின் தக்பீரைப் போன்று தான் மறந்து விடாதீர்கள்” என்று கூறினார்கள்

அறிவிப்பாளர்; சில நபித்தோழர்கள்

நூல்: ஷரஹ் மஆனில் ஆஸார், பாகம்: 4, பக்கம்: 345

ஹனபி மத்ஹபினர் கூறும் எட்டு தக்பீர்களுக்கு இந்தச் செய்தியும் ஒரு ஆதாரமாக இருப்பதைக் காணலாம். எனினும் இதுவும் ஏற்கத்தக்க செய்தியல்ல. இதன் அறிவிப்பாளர் வரிசையில் வளீன் பின் அதாஃ என்பவர் இடம் பெறுகின்றார். இவரை சில அறிஞர்கள் நம்பகமானவர் என்று குறிப்பிட்டாலும் இவர் பலவீனமானவர் ஆவார்.

இமாம் இப்னு ஸஃத், “இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். “ஹதீஸ் துறையில் மோசமானவர்’ என இமாம் ஜவ்ஸஜானி குறிப்பிடுகின்றார். இவரை பலவீனமானவர் என்று இப்னு கானிஃ என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

இவர் மனனக் கோளாறு உள்ளவர் என்று வலீத் பின் முஸ்லிமும், ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களும் குறை கூறியுள்ளனர்.

ஆக ஹனபி மத்ஹபினரின் தக்பீர் முறைக்கு எந்தவொரு ஆதாரப்பூர்வமான ஹதீசும் இல்லை. நபிவழி எதுவென்பதை அறிந்த பிறகும் அதைப் புறக்கணிப்பவர் நரகில் நுழையப் போதுமானதை பெற்றுக் கொண்டு விட்டார். அல்லாஹ் நம்மை காப்பானாக!

————————————————————————————————————————————————————–

தொழுகை இல்லையேல் தடாகம் இல்லை

மக்கள் விசாரணைக்காக ஒன்று திரட்டப்படும் அந்நாளின் கொடூரத்தைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம்.

கடும் தாகத்தால் மக்கள் துடிக்கக் கூடிய அந்நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் தாகம் தீர்ப்பதற்குத் தனி ஏற்பாட்டை அல்லாஹ் செய்வான்.

இதுபற்றி  திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது.

(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்

அல்குர்ஆன் 108:1

கவ்ஸர் என்றால் என்ன?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அது அல்லாஹ் எனக்கு வழங்கிய நதியாகும்என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: திர்மிதீ

அதன் சுவை பற்றியெல்லாம் நபி (ஸல்) அவர்கள் விளக்கமாகக் கூறியுள்ளார்கள்.

எனது தடாகம் ஒரு மாதப் பயணத் தொலைவு அகலமாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம்

அம்மான், ஐலா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அளவு அதன் நீளம் இருக்கும். அதன் அகலமும் அவ்வாறே என்பதும் நபிமொழி.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 4608, அபூதாவூத்

எமன் நாட்டின் ஸன்ஆ மற்றும் மதீனா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அளவு அந்தத் தடாகம் அமைந்திருக்கும் என்பது நபிமொழி

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 6592, முஸ்லிம்

இந்த நபிமொழிகளிலிருந்து அந்தக் தடாகம் மிகவும் பிரம்மாண்டமான அளவுடையதாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

அதன் தண்ணீர் பாலை விட வெண்மையாகவும் அதன் சுவை தேனை விட இனிமையாகவும் இருக்கும்.

நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம்

அதன் நறுமணம் கஸ்தூரியை விடச் சிறந்ததாக இருக்கும்.

நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம்

அதன் தண்ணீர் வெள்ளியை விட வெண்மையானதாகும்.

நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம் 4599

அந்தத் தடாகத்தில் உள்ள தண்ணீர் சொர்க்கத்தில் உள்ள தண்ணீராகும். சொர்க்கத்திலிருந்து இரண்டு குழாய்கள் மூலமாக அதற்குத் தண்ணீர் வரும்.

நூல்: முஸ்லிம் 4608

தங்கக் குழாய், வெள்ளிக் குழாய் ஆகிய இரு குழாய்களின் வழியாக அந்தத் தடாகத்திற்குத் தண்ணீர் வரும்.

நூல்: முஸ்லிம் 4609

மக்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்கு முன் சொர்க்கத்து நீரை தடாகத்தின் வழியாக அருந்துவார்கள் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.

பல கோடி மக்கள் திரண்டுள்ள அந்த மன்றத்தில் நெருக்கடியின்றி மக்கள் தண்ணீர் அருந்துவதற்காக ஏராளமான பாத்திரங்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாத்திரங்களும் சொர்கத்தில் பயன்படுத்தவுள்ள பாத்திரங்களாகும்.

எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணைமாக அதன் பாத்திரங்கள் வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அவை சொர்க்கத்தின் பாத்திரங்களாகும்.

நூல்கள்: முஸ்லிம் 416, திர்மிதீ 2369

அந்தத் தண்ணீரின் பயன் யாது? அதை அருந்தியவர்க்கு தாகமே ஏற்படாது என்பது இதன் பயனாகும். விசாரணை என்பது ஒருநாளில் நடந்து முடிந்து விடும் என்றாலும் அந்த ஒரு நாள் ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமான அந்நாளில் ஒரு தடவை அத்தடாகத்திலிருந்து அருந்தி விட்டால் அதன் பின்னர் தாகமே ஏற்படாது.

அதில் அருந்தியவர்களுக்கு தாகம் ஏற்படாது.

நூல்கள்: புகாரி 7051, முஸ்லிம், திர்மிதீ

கவ்ஸர் எனும் அத்தடாகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கும் தனிச்சிறப்பாகும். நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்குவார்கள்.

நான் ஹவ்லுக்கருகில் உங்களுக்காகக் காத்திருப்பேன்.

நூல்கள்: புகாரி 6589, முஸ்லிம்

“எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக ஒரு மனிதன் தனது தடாகத்தை விட்டும் தனக்குச் சொந்தமில்லாத ஒட்டகங்களை விரட்டுவானோ அதுபோல் மற்ற மனிதர்களை நான் தடாகத்தை விட்டும் விரட்டுவேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! எங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்களா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! உளூச் செய்ததன் காரணமாக கைகள், கால்கள், முகங்கள் வெண்மையானவர்களாக என்னிடம் நீங்கள் வருவீர்கள்” என்று விடையளித்தனர்.

நூல்கள்: முஸ்லிம் 417

ஹவ்ல் அல் கவ்ஸர் எனும் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தினருக்கு மட்டும் உரியது என்பதையும் இந்த உம்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தொழாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிட்டாது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

பித்அத் செய்தால் தடாகம் இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் புதிதாக வணக்க வழிபாடுகளை ஏற்படுத்தியவர்கள் அவர்கள் நபித் தோழர்களாக இருந்தாலும் அந்தத் தடாகத்திற்கு வராதவாறு தடுக்கப் படுவார்கள்.

நான் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்திருப்பேன். சில மக்கள் என்னிடம் வருவார்கள். அவர்களுக்கு தண்ணீர் ஊற்ற நான் குனியும் போது அவர்கள் தடுக்கப்படுவார்கள். “இறைவா இவர்கள் என் தோழர்களாயிற்றேஎன நான் கூறுவேன். “உமக்குப் பின்னால் இவர்கள் (மார்க்கத்தின் பெயரால்) எவற்றை உருவாக்கினார்கள் என்பதை நீர் அறிய மாட்டீர்என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 7049, முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்என்பேன். அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்என்று சொல்வான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6585, முஸ்லிம்

அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியம் ஏழு கோடிக்கும் அதிகமான மக்களுக்குக் கிடைக்கும்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இடத்தில் தங்கியிருந்தோம். “என்னிடம் லட்சத்தில் ஒரு பகுதியாகக் கூட நீங்கள் இருக்கவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் எவ்வளவு நபர்கள் அப்போது இருந்தீர்கள்?” என்று ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. “எழுநூறு அல்லது எண்ணூறு நபர்கள் இருந்தோம்” என விடையளித்தார்கள்.

நூல்: அபூதாவூத் 4121

அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் நமக்கும் வழங்குவானாக!