9:521 தொழுகை நேரங்கள்

பாடம் : 1 தொழுகையின் சிறப்பும் அவற்றின் நேரங்களும். அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது நம்பிக்கையாளர்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (4:103) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள மவ்கூத்’ எனும் சொற்றொடரும்) மவக்கத்’ எனும் சொல்லும் தவ்கீத்’எனும் வேர்ச் செல்-லிருந்து பிரிந்தவை யேயாகும். இதன் கருத்தாவது: நம்பிக்கையாளர்கள் மீது அவற்றிற்கான நேரத்தை வரையுறுத்துள்ளான். 
521. ஸுஹ்ரி அறிவித்தார். 
உமர் இப்னு அப்தில அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள். 
இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, ‘முகீராவே! இது என்ன? ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் இஷா தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் ‘இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது’ என்றும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா?’ என்று கேட்டார்கள். 
(இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) ‘உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்! நபி(ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா?’ என்று உமர் இப்னு அப்தில் அஸீஸ் கேட்டார்கள். 
Book : 9