92:7048 குழப்பங்கள் (சோதனைகள்)

பாடம் : 1 நீங்கள் ஒரு வேதனை குறித்து எச்சரிக்கை யாக இருங்கள். அது (வரும் போது) உங்களில் அநீதியிழைத்தவர்களை மட்டும் தாக்குவ தில்லை எனும் (8:25ஆவது) இறைவசனம்2 தொடர்பாக வந்துள்ள செய்திகளும் நபி (ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை செய்து வந்த குழப்பங்களும். 
7048. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் சமுதாயத்தார்’ என்பேன். அதற்கு ‘உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகைவிட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்’ என்று கூறப்படும். 
இதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் ‘அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்களின் மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்’ என்று பிரார்த்திப்பார்கள்.3 
Book : 92