66:4978 குர்ஆனின் சிறப்புகள்

பாடம் : 1 வேத அறிவிப்பு (வஹீ) எவ்வாறு அருளப் பெற்றது? என்பது பற்றியும், முதன்முதலில் அருளப்பெற்றது எது? என்பது பற்றியும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முஹைமின்’ எனும் சொல்லுக்குப் பாதுகாக்கக்கூடியது’என்று பொருள்; தனக்கு முன்வந்த எல்லா வேதங்களையும் பாதுகாக் கும் (நம்பிக்கைக்குரிய) வேதம் குர்ஆன். 
4978. ஆயிஷா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறினார்கள் 
நபி(ஸல்) அவர்கள் தம் மீது குர்ஆன் அருளப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். 2 
Book : 66