44:2413 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

2413. அனஸ்(ரலி) அறிவித்தார். 
யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், ‘உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?’ என்று கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி (‘ஆம், அவன்தான்’ என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது. 
Book :44