42:2355 முஸாக்காத் – நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்

பாடம் : 4 தனக்குச் சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டியவர் (அதில் யாரேனும் மனிதனோ மற்ற பிராணிகளோ விழுந்து இறந்து போனால்) அதற்கு நஷ்ட ஈடு தர மாட்டார். 
2355. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள். 
இதையும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களே அறிவித்தார்கள். 
Book : 42