41:2322 வேளாண்மையும் நிலக் குத்தகையும்

பாடம் : 3 விவசாயப் பண்ணையைப் பாது காத்திட நாய் வைத்திருப்பது (அனுமதிக் கப்பட்டதாகும்.) 
2322. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இன்னோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். 
‘கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். 
‘கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அல்லது வேட்டையாடுவதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
Book : 41