34:2048 வியாபாரம்

2048. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். 
முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) ‘நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என்னுடைய இரண்டு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரின் இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!’ என்று கூறினார். அப்போது நான், ‘இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?’ எனக் கேட்டேன். அவர், ‘கைனுகா என்னும் கடை வீதி இருக்கிறது!’ எனக் கேட்டேன். அவர், ‘கைனுகா எனும் கடை வீதி இருக்கிறது!’ என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீ மண முடித்துவிட்டாயா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘யாரை?’ என்றார்கள். ‘ஓர் அன்ஸாரிப் பெண்ணை!’ என்றேன். ‘யாரை?’ என்றார்கள். ‘எவ்வளவு மஹ்ர் கொடுத்தாய்?’ என்று கேட்டார்கள். ‘ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பாயாக!’ என்றார்கள். 
Book :34