23:1237 ஜனாஸாவின் சட்டங்கள்

பாடம் : 1 கடைசிக் கட்டத்தில் லா இலாஹ இல்லல்லாஹ்’ கூறுபவரின் நிலை. சொர்க்கத்தின் திறவுகோல் லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனக் கூறுவது)தானே! என வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) என்பாரிடம் வினவப்பட்டது. அதற்கவர், ஆம், ஆயினும் திறவு கோலுக்குப் பற்கள் இருக்க வேண்டுமல்லவா? எனவே உன்னிடம் பற்களுள்ள திறவுகோல் இருந்தால்தான் அதன் மூலம் உனக்காக அ(ந்தச் சொர்க்கமான)து திறக்கப்படும்; இல்லையேல் அது உனக்குத் திறக்கப்படாது எனக் கூறினார்கள். 
1237. ‘என்னுடைய இரட்கனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு செய்தியை ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது என்னுடைய சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கிறவர் சொர்க்கத்தில நுழைவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, நான் ‘அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?’ எனக் கேட்டேன். ‘அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான் என அவர்கள் கூறினார்கள்’ என அபூ தர்(ரலி) அறிவித்தார். 
Book : 23