பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?

கேள்வி :

பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?

முஹம்மத் இல்யாஸ்

பதில் :

பயன்படுத்த இயலாத பழைய குர்ஆன் பிரதிகளை சிலர் எரித்துவிட வேண்டும் என்றும், சிலர் மண்ணில் புதைக்க வேண்டும் என்றும், சிலர் கிணற்றில் போட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் இவ்விஷயத்தில் மார்க்கம் எந்த நிபந்தனைகளையும் இடவில்லை. குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாத காரணத்தால் இவ்விஷயத்தில் பலர் குழம்புகின்றனர்.

அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் காகிதத்தில் வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்து வடிவமாகவும் ஆக்கித் தந்தார்கள். எழுத்து வடிவமே குர்ஆன் அல்ல.

எனவே தேவைப்படாத பிரதிகளை அழிப்பதற்கு நாம் விரும்பிய எந்த வழியை வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.