இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்கான வழிமுறை என்ன? – OnlineTNTJ

முகப்பு / கேள்வி பதில் / இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்கான வழிமுறை என்ன?

இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்கான வழிமுறை என்ன?

? இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்கான வழிமுறை என்ன?

தர்மா

வேறு கொள்கையில் உள்ளவர் இஸ்லாத்திற்கு வர விரும்பினால் இதற்காக அவர் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இதற்கு மற்ற மதங்களில் இருப்பதைப் போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் இஸ்லாத்தில் கிடையாது.

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு (வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உளமாறக் கூறுகிறேன்.  முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் உளமாறக் கூறுகிறேன்) என்று மனப்பூர்வமாக ஏற்று, கூறிவிட்டால் அவர் முஸ்லிமாகி விடுவார்.

அவர் இஸ்லாத்தில் இணைவதற்கு இதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் இல்லை.

ஒருவர் முஸ்லிமாகிவிட்டதைப் பகிரங்கமாக மக்களிடம் தெரிவித்தால் தான் உலக ரீதியில் சில பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். அவருடைய திருமணம், மரணம் ஆகிய காரியங்கள் இஸ்லாமிய முறைப்படி நடைபெறுவதற்கு இது உதவியாக இருக்கும்.

-ஏகத்துவம் மாத இதழ் செப்டம்பர் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *