பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்…? – OnlineTNTJ

முகப்பு / கேள்வி பதில் / பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்…?

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்…?

கேள்வி :

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என்று சொல்கிறோம். அதே போல் பிற காரியங்களைச் செய்யும் போது பிஸ்மில்லாஹ்வைக் கூற மறந்தால் விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என்று சொல்லலாமா?

ரஃபீக், நாகர்கோயில்.

பதில்:

1781 حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ الْعُقَيْلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَنْ أُمِّ كُلْثُومٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ وَبِهَذَا الْإِسْنَادِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ طَعَامًا فِي سِتَّةٍ مِنْ أَصْحَابِهِ فَجَاءَ أَعْرَابِيٌّ فَأَكَلَهُ بِلُقْمَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ لَوْ سَمَّى لَكَفَاكُمْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأُمُّ كُلْثُومٍ هِيَ بِنْتُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ رواه الترمذي

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உணவைச் சாப்பிட்டால் (ஆரம்பத்தில்) பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்திم பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று கூறட்டும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : திர்மிதி

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று கூறவேண்டும் என்று நபியவர்கள் மேற்கண்ட ஹதீஸில் கட்டளையிட்டுள்ளார்கள். மற்ற விஷயங்களுக்கு அவ்வாறு கற்றுத்தரவில்லை.

மற்ற காரியங்களைத் துவக்கும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும். மறந்து விட்டால் அதற்காக வேறு எதனையும் கூற வேண்டியதில்லை.

வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை பொதுவான ஆதாரம் இருந்தால் அது போன்ற அனைத்துக்கும் அதைப் பொருத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு காரியம் தொடர்பாகக் கூறப்பட்டதை மற்ற காரியங்களுக்குப் பொருத்திக் கொள்ளக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *