ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா?

கேள்வி :

பிளாட்டினம் உலோகத்தால் செய்யப்பட்ட அணிகலன்களை ஆண்கள் அணியலாமா?

முஹம்மது பிலால்

பதில் :

தங்க ஆபரணங்களை அணிவதை மட்டுமே ஆண்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي رواه النسائي

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்டை தமது வலக்கரத்திலும், தங்கத்தை தமது இடக்கரத்திலும் பிடித்து இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு தடை செய்யப்பட்டதாகும் என்று கூறினார்கள்.

நூல் : நஸாயீ

எனவே தங்கம் அணிவது ஆண்களுக்கு மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கின்றது. பிளாட்டினம் தங்கத்தை விட விலை உயர்ந்ததாக இருந்தாலும் அதை அணிவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.