بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
தூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
பாடம் : 1 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எவ்வாறு துவங்கிற்று? 1. ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார்....
2. ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்)...
பாடம் : 2 பிரார்த்தனை (துஆ) என்பது இறை நம்பிக்கையே (ஈமான்) ஆகும். 8. ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு...
9. ‘ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :2
10. ‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். Book :2
பாடம் : 5 இஸ்லாத்தில் சிறந்தது எது? 11. ‘இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ...
பாடம் : 6 உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓரம்சம். 12. ‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். Book : 2
பாடம் : 7 ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும். 13. ‘உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார் Book...
பாடம் : 8 இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். 14. ‘என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை...
15. ‘உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். Book :2
பாடம் : 43 அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அவர்களில் பொதுமக்களுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம் (தீன்) ஆகும் எனும் நபிமொழி. அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நலம் நாடுபவர்களாயிருந்தால் (இயலாதவர்கள், நோயாளிகள் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல்...
58. (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும்...
பாடம் : 1 கல்வியின் சிறப்பும் உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்விஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் எனும் (58:11ஆவது) இறை வசனமும். வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான்: என் இறைவா!...
பாடம் : 3 உரத்த குரலில் கல்விபோதிப்பது. 60. ‘நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள்....
61. ‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?’ என்று நபி(ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை...
பாடம் : 51 (கேள்வி கேட்க) வெட்கப்பட்டுப் பிறரைக் கேட்கச் செய்தல். 132. ‘மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி...
பாடம் : 52 பள்ளிவாசலில் கற்பதும் கற்பிப்பதும் தீர்ப்பு வழங்குவதும். 133. ஒருவர் பள்ளிவாசலில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கிருந்து இஹ்ராம் கட்டவேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டபோது ‘மதீனா வாசிகள் ‘துல்ஹுலைஃபா’ என்ற இடத்திலிருந்தும், ஷாம்...
பாடம் : 53 வினவப்பட்டதைவிட விரிவாகப் பதில் கூறுதல். 134. ‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, ‘சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச்...
பாடம் : 1 உளூச் செய்வது குறித்து வந்துள்ளவை. அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்கு தயாராகும்போது (முன்னதாக) உங்கள் முகங்களையும் கைகளை முழங்கை வரையும் கால்களை கணுக்கால்கள் வரையும் கழுவிக்கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக்கொள்ளுங்கள். (5:6)....
பாடம் : 3 உளூவின் சிறப்பும் உளூ செய்தோரின் முகம், கை, கால் ஆகியன (மறுமையில்) பிரகாசிப்பதும். 136. ‘பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) ‘நிச்சயமாக...
பாடம் : 4 உளூ முறிந்ததாக உறுதியாகத் தெரியாத வரை சந்தேகப்பட்டு மீண்டும் உளூ செய்யத் தேவையில்லை. 137. ‘தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டதற்கு, ‘நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும வரை...
பாடம் : 1 குளிப்பதற்கு முன் உளூ செய்தல். 248. ‘நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக்...
249. ‘நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள்....
பாடம் : 2 ஒருவர் தம் மனைவியுடன் குளிப்பது. 250. ஃபரக்’ என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி(ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (குறிப்பு: ‘ஃபரக்’ என்பது இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும்) Book : 5
பாடம் : 3 ஒரு ஸாஉ அளவுள்ள தண்ணீரில் அல்லது ஏறக்குறைய அந்த அளவுத் தண்ணீரில் குளிப்பது. 251. ‘நானும் ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரரும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களின் சகோதரர் ‘நபி(ஸல்) அவர்களின் குளிப்பு எப்படியிருந்தது?’ என்று கேட்டதற்கு, ‘ஸாவு’...
252. ‘ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் குளிப்பைப் பற்றி நாங்கள் கேட்டதற்கு, ‘ஒரு ஸாவு’ அளவு தண்ணீர் போதும்’ என்று கூறினார். அப்போது ஒருவர் ‘அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது’ என்றதற்கு,...
பாடம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் 294. ‘நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரிஃப்’ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘உனக்கு என்ன?...
பாடம் : 2 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் தன் கணவரின் தலையைக் கழுவுவதும் அவரது தலைமுடியை வாரிவிடுவதும். 295. ‘நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவேன்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். Book : 6
296. ‘ஒருவர் ‘தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?’ என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா ‘அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில்...
பாடம் : 3 மாதவிடாய் நிலையிலுள்ள தம் மனைவியின் மடியில் தலைவைத்த வண்ணம் ஒருவர் திருக்குர்ஆன் ஓதுவது. அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் மாதவிடாய் நிலையிலிருக்கும் தம் பணிப் பெண்ணை (தம் முன்னாள் அடிமையான) அபூரஸீன் (மஸ்ஊத்பின் மாலிக்...
பாடம் : 4 பிரசவத் தீட்டைக் குறிக்கும் நிஃபாஸ் எனும் சொல்லை மாதவிடாய் (-ஹைள்)க்கும் பயன்படுத்துவது. 298. ‘நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத்...
பாடம் : 1 334. நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். ‘பைதாவு’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில்...
335. ‘எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும்...
பாடம் : 2 (சுத்தம் செய்ய) தண்ணீரோ மண்ணோ கிடைக்கவில்லையானால் (என்ன செய்ய வேண்டும்?) 336. ‘ஆயிஷா (தங்களின் சகோதரி) அஸ்மாவிடமிருந்து ஒரு கழுத்தணியை இரவல் வாங்கியிருந்தார். அந்தக் கழுத்தணி காணாமல் போனது. இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அனுப்பி...
பாடம் : 3 சொந்த ஊரில் தங்கியிருக்கும் போது தண்ணீர் கிடைக்காமலிருந்து தொழுகையின் நேரம் சென்றுவிடுமோ என்று அஞ்சினால் தயம்மும் செய்து கொள்ளலாம். இவ்வாறே அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:...
பாடம் : 4 தயம்மும் செய்பவர் (மண்ணில் அடித்த பின்) இருகைகளிலும் (உள்ள புழுதியை) ஊதிவிட வேண்டுமா? 338. ‘ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து ‘நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு...
பாடம் : 1 ளவிண்ணுலகப்பயணம் -மிஅராஜ் நடந்தன இஸ்ரா இரவில் தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டது? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்: (ரோம பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தொடர்பான ஹதீஸில் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள்,தொழுகையை நிறைவேற்றும்படியும் தானதர்மம் செய்யும்...
350. ‘அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். Book :8
பாடம் : 2 ஆடை அணிந்து தொழுவதன் அவசியமும், ஆதமுடைய மக்களே! தொழும் இடந் தோறும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள் எனும் (7:31ஆவது) இறைவசனமும், ஒரே ஒரு துணியை அணிந்து தொழுவதும். (ஒரே ஒரு துணி மட்டும் அணிந்து...
பாடம் : 3 தொழும் போது வேஷ்டி (சிறியதாயிருந்தால் அதன் இரு முனை)யைப் பிடரியில் முடிச்சிட்டுக் கொள்வது. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (நபித்தோழர்கள்) சிலர் தங்களுடைய வேஷ்டிகளை தமது தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி...
353. ‘ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) ஒரே ஆடையை அணிந்தவர்களாகத் தொழுதுவிட்டு ‘நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து தொழுததைக் கண்டேன்’ என்று கூறினார்கள்’ என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் என்பவர் அறிவித்தார். Book :8
பாடம் : 1 தொழுகையின் சிறப்பும் அவற்றின் நேரங்களும். அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது நம்பிக்கையாளர்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (4:103) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள மவ்கூத்’ எனும் சொற்றொடரும்) மவக்கத்’ எனும் சொல்லும் தவ்கீத்’எனும் வேர்ச்...
522. ஆயிஷா(ரலி) அறிவித்தார். சூரிய(னி)ன் (ஒளி) என் அறையில் (மறையாமல்) விழுந்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுவார்கள். Book :9
பாடம் : 2 நீங்கள் அவன் பக்கமே (பாவமன்னிப்புக் கோரி) திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்துகொள் ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போ ரில் நீங்களும் ஆகிவிடாதீர்கள் எனும் (30:31ஆவது) இறைவசனம். 523. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அப்துல் கைஸ் குழுவினர்...
பாடம் : 3 தொழுகையை நிலைநிறுத்துவதாக ஒருவரிடம் மற்றவர் உறுதிமொழி அளிப்பது. 524. ஜரீர்பின் அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். தொழுகையை நிலைநாட்டுவது ஸகாத் கொடுப்பது, முஸ்லிம்கள் அனைவருக்கும் நல்லதையே நாடுவது ஆகிய காரியங்களுக்காக நான் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிப் பிரமாணம் எடுத்தேன். Book : 9
பாடம் : 4 தொழுகை பாவங்களுக்குப் பரிகாரமாகும். 525. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நாங்கள் உமர்(ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, ‘நபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்று பொருளும் குழப்பங்கள் என்ற...
பாடம் : 1 பாங்கின் துவக்கம். அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாகமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்; இதற்குக் காரணம் அவர்கள் அறிவில்லா மக்களாக இருப்பதேயாம். (5:58) இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள்...
604. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர்....
பாடம் : 2 பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை சொல்லவேண்டும். 605. அனஸ்(ரலி) அறிவித்தார். பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத்காமதிஸ்ஸலாத்’ என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள். Book : 10
606. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். மக்களின் எண்ணிக்கையில் அதிகமானபோது, அவர்கள் அறிந்திருக்கிற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது, நெருப்பை மூட்டுவதன் மூலமோ மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் எனக் கருத்துச சொல்லப்பட்டது. ஆனால்...
பாடம் : 3 இகாமத்தின் வாசகங்களில் கத்காமத்திஸ் ஸலாத்’ என்பதைத் தவிர மற்றவற்றை ஒரு முறை மட்டும் சொல்ல வேண்டும். 607. அனஸ்(ரலி) அறிவித்தார். பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத்காமதிஸ்ஸலாத்’ என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள். Book...
பாடம் : 1 ஜுமுஆத் தொழுகை கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு,அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்துசெல்லுங்கள்- நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு...
பாடம் : 2 ஜுமுஆ நாளில் குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள் பெண்கள் ஆகியோர் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்வது அவர்கள் மீது கடமையா என்பதும். 877. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book...
878. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர்(ரலி) அழைத்து ‘ஏனிந்தத் தாமதம்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘நான் அலுவலில் ஈடுபட்டு விட்டேன். பாங்கு...
879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’ என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். Book :11
பாடம் : 3 ஜுமுஆவுக்காக நறுமணம் பூசுவது. 880. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். ‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஸயீத்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அம்ர்...
பாடம் : 1 அச்சமான நேரத்தில் தொழுவது. அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் பூமியில் பயணம் செய்யும் போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப்...
பாடம் : 2 நின்று கொண்டும் வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டும் அச்சநேரத் தொழுகையை நிறைவேற்றலாம். (2:239, 22:27 ஆகிய வசனங்களின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ரிஜால் எனும் சொல் ராஜில் என்பதன் பன்மையாகும். அந்த) ராஜில் எனும் சொல்லுக்கு நிற்பவன்...
பாடம் : 3 அச்சநேரத் தொழுகையில் ஈடுபடுவோர் ஒருவருக் கொருவர் பாதுகாப்பாக இருந்து கொள்ளவேண்டும். 944. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். மக்களும் அவர்களுடன் நின்றனர். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூற அனைவரும் தக்பீர் கூறினர். நபி(ஸல்) அவர்கள் ருகூவு...
பாடம் : 4 (எதிரிகளின்) கோட்டைகளை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் போதும் எதிரிகளை (களத்தில்) சந்திக்கும் போதும் தொழவேண்டும். அவ்ஸாயீ (ரஹ்), மக்ஹூல் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றார்கள்: வெற்றி நெருங்கிய நிலையில் அவர்களுக்குத் தொழ இயலாவிட்டால் ஒவ்வொருவரும் தனித்...
பாடம் : 5 எதிரிகளைத் தேடிச் செல்பவரும் எதிரி களால் தேடப்படுபவரும் வாகனத்தில் பயணித்தவாறே சைகை மூலம் தொழுவது. வலீத் பின் முஸ்லிம் அல்குறஷீ அவர்கள் கூறுகிறார்கள்: நான், அவ்ஸாயீ (அப்துர் ரஹ்மான் பின் அம்ர்-ரஹ்) அவர்களிடம், ஷுரஹ்பீல் பின்...
பாடம் : 1 இரு பெரு நாட்களும் அதில் அலங்காரம் செய்து கொள்வதும். 948. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இதை விலைக்கு வாங்கிக்...
பாடம் : 2 பெரு நாள் தினத்தில் ஈட்டிகள், தோல்கேடயங்கள் (உள்ளிட்ட போர்க்கருவிகளால்) வீரவிளையாட்டுக்களில் ஈடுபடுவது). 949. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘புஆஸ்’ (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து...
950. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ ‘நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?’ எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என்...
பாடம் : 3 இரு பெரு நாட்களிலும் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை (சுன்னத்). 951. பராஃ(ரலி) அறிவித்தார். ‘நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையைப் பேணியவராவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில்...
952. ஆயிஷா(ரலி) அறிவித்தார். புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். ‘அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?’ என்று அபூ...
பாடம் : 1 வித்ருத் தொழுகை பற்றி வந்துள்ளவை. 990. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை பற்றி...
991. நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளையிடுவார்கள். Book :14
992. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் தூங்கினார்கள். இரவின் பாதி வரை கொஞ்சம் முன் பின்னாக...
993. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (இரண்டாவது அறிவிப்பாளராகிய) காஸிம், ‘மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத்...
994. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின்...
பாடம் : 1 மழை வேண்டுதலும், மழைவேண்டிப் பிரார்த்திக்க நபி (ஸல்) அவர்கள் (ஊருக்கு வெளியிலுள்ள தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றதும். 1005. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி(த் தொழும் திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப்...
பாடம் : 2 யூசுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது. 1006. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் கடைசி ரக்அத்தின் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும் ‘இறைவா! அய்யாஷ் இப்னு...
1007. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிக்கக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘யூஸுஃப் நபி காலத்து ஏழாண்டுப் பஞ்சம் போல் இவர்களுக்கு ஏழாண்டுப் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தனர். அவர்களுக்குப் பஞ்சம் ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தனர். அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு...
பாடம் : 3 பஞ்சம் நிலவும் போது மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது. 1008. அப்துல்லாஹ் இப்னு தீனார் அறிவித்தார். ‘இவர் வெண்மை நிறத்தவர்; இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்’ என்று அபூ தாலிப் பாடிய...
1009. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கீழே இறங்குவதற்குள் ஒவ்வொரு கூரையிலிருந்தும் தண்ணீர் வழிந்தோடியது. ‘இவர் வெண்மை நிறத்தவர். இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும்...
பாடம் : 1 சூரிய கிரகணத்தின் போது தொழுவது (நபி வழி). 1040. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம்...
1041. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்.’ என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். Book :16
1042. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்வுக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book :16
1043. முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ...
பாடம் : 2 கிரகணத்தின் போது தானதர்மம் செய்தல். 1044. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல்...
பாடம் : 1 குர்ஆனில் உள்ள சஜ்தா வசனங்களை ஓதியதற்காக சஜ்தா செய்வதும், அதன் வழிமுறையும். 1067. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர்....
பாடம் : 2 தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும்) 32ஆவதுஅத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல். 1068. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் என்ற ஸஜ்தா அத்தியாயத்தையும் ஹல்அத்தா அலல் இன்ஸான் என்ற அத்தியாயத்தையும்...
பாடம் : 3 ஸாத் (எனும் 38ஆவது) அத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல். 1069. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸாத் அத்தியாயம் ஓதப்படும்போது ஸஜ்தாக் கட்டாயமில்லை. (ஆனால்) நபி(ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்ததை பார்த்திருக்கிறேன். Book : 17
பாடம் : 4 அந்நநஜ்ம் (எனும் 53ஆவது) அத்தியா யத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல். 1070. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். அக்கூட்டத்தில் ஒருவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர்....
பாடம் : 5 முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களுடன் சேர்ந்து (ஒதலுக்கான) சஜ்தாச் செய்தல். இணைவைப்பாளர் அசுத்தமானவர் என்பதால் அவர் உளூச் செய்ய முடியாது. இப்னு உமர் (ரலி) அவர்கள் உளூவுடன் (ஓதலுக்கான) சஜ்தாச் செய்வார்கள். 1071. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை...
பாடம் : 1 பயணத்தில் தொழுகைகளை சுருக்கித் தொழுவதும், எத்தனை நாட்கள் வெளியூரில் தங்கினால் சுருக்கித் தொழலாம் என்பது பற்றியும் வந்துள்ளவை. 1080. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப்...
1081. யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அறிவித்தார். ‘நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் மதீனா திரும்பும் வரை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்’ என்று அனஸ்(ரலி) கூறியபோது நீங்கள் மக்காவில் எவ்வளவு நாள்கள் தங்கினீர்கள் என்று கேட்டேன்....
பாடம் : 2 மினாவில் சுருக்கித் தொழுதல். 1082. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நான் நபி(ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருடனும் உஸ்மான்(ரலி) உடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பக்கட்டத்தில் உஸ்மான்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன். பின்னர் உஸ்மான்(ரலி) நான்கு ரக்அத்களாகத்...
1083. ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மினாவில் எதிரிகளைப் பற்றி எந்த அச்சமும் இல்லாத நிலையில் இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். Book :18
1084. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் அறிவித்தார். உஸ்மான்(ரலி) மினாவில் எங்களுக்கு நான்கு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். இது பற்றி இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது ‘இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்’ என்று கூறினார்கள். பின்னர் ‘நான் நபி(ஸல்) அவர்களுடன் இரண்டு ரக்அத்களாகத்...
பாடம் : 1 இரவில் தஹஜ்ஜுத் தொழுதல். அல்லாஹ் கூறுகிறான்: இரவில் (ஒரு சிறு பகுதியில்) உமக்கு உபரியான தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுதுவருவீராக! (17:79) 1120. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் ‘இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்....
பாடம் : 2 இரவுத் தொழுகையின் சிறப்பு. 1121. இப்னு உமர்(ரலி) கூறியதவாது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்....
பாடம் : 2 இரவுத் தொழுகையின் சிறப்பு. 1122. இப்னு உமர்(ரலி) கூறியதவாது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்....
1123. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதக் கூடிய நேரம் ஒரு ஸஜ்தாச் செய்வார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஃபஜ்ருத்...
பாடம் : 4 நோயாளி இரவுத் தொழுகையை விட்டு விடலாம். 1124. ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ, இரண்டு இரவுகளோ தொழவில்லை. Book : 19
பாடம் : 1 மக்கா, மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் களில் தொழுவதன் சிறப்பு. 1188. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளை கேட்டேன். (1197வது ஹதீஸில் இது விவரமாகக் கூறப்படுவதைக் காண்க) Book : 20
1189. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: ‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :20
1190. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்’. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :20
பாடம் : 2 குபா பள்ளிவாசல். 1191. நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) இரண்டு நாள்கள் தவிர வேறு நாள்களில் லுஹாத் தொழ மாட்டார்கள். மக்காவுக்கு அவர்கள் வரக்வடிய நாளில் லுஹா நேரத்தில் வந்து கஅபாவைத் வலம்வந்து மக்காமே இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு...
1192. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் என்னுடைய தோழர்கள் செய்தது போன்றே செய்கிறேன். இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும் தொழுபவரை தடுக்க மாட்டேன். ஆயினும் சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள். Book :20
பாடம் : 1 தொழுகையுடன் சம்பந்தப்பட்ட காரியங்களில் கைகளைப் பயன்படுத்தலாம். ஒருவர் தொழும் போது தமது உடலில் எந்தப் பகுதியையும் பயன்படுத்தலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் தொழும் போது தமது...
பாடம் : 2 தொழுகையில் பேசக்கூடாது 1199. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். காலத்தில்) நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீ ஸினியாவின் மன்னர்) நஜ்ஜாஷியிடமிருந்து திரும்பியபோது அவர்களுக்கு ஸலாம் கூறினோம்....
1200. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் ‘தொழுகைகளில் பேணுதலாக இருங்கள்’ என்ற (திருக்குர்ஆன் 02:238) வசனம் அருளப்பட்டது. அதன்பின்னர் பேசக் கூடாது...
பாடம் : 3 தொழுகையில் (இமாமுக்கு ஏற்படும் தவறுகளை உணர்த்த) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்) என்று ஆண்கள் கூறலாம். 1201. ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். அம்ர் இப்னு அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்து வைப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். தொழுகை நேரம் வந்ததும் பிலால்(ரலி) அபூ...
பாடம் : 4 தொழும் போது அறியாத நிலையில் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு அல்லது அவரை நோக்கி சலாம் கூறுதல். 1202. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். அத்தஹிய்யாத் ஓதும்போது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒருவரின் மீது மற்றவர் ஸலாம் கூறி வந்தோம். இதைச்...
பாடம் : 1 கடமையான தொழுகையின் முதல் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில் அமராமல் மறதியால் எழுந்துவிட்டால்…? 1224. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள்....
1225. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். தொழுகை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள். அதன்பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். Book :22
பாடம் : 2 (மறதியாக) ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டால்… 1226. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘என்ன விஷயம்?’ எனக் கேட்டார்கள். ‘நீங்கள் ஐந்து ரக்அத்கள்...
பாடம் : 3 (நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டாவது அல்லது மூன்றாவது ரக்அத்தில் (மறதியாக) சலாம் கொடுத்துவிட்டால் வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீளமாகவோ இரண்டு சஜ்தாச் செய்வது. 1227. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அவர்கள் எங்களுக்கு லுஹரையோ அஸரையோ தொழுதுவிட்டு...
பாடம் : 4 சஜ்தா சஹ்வின் போது தஷஹ்ஹுத் ஓதாமல் இருத்தல் அனஸ் (ரலி), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் (மறதிக்குரிய சஜ்தாச் செய்துவிட்டு) சலாம் கொடுத்தார்கள்; தஷஹ்ஹுத் ஓதவில்லை. (அதில்) தஷஹ்ஹுத் ஓதவேண்டியதில்லை என கத்தாதா (ரஹ்) அவர்கள்...
பாடம் : 1 கடைசிக் கட்டத்தில் லா இலாஹ இல்லல்லாஹ்’ கூறுபவரின் நிலை. சொர்க்கத்தின் திறவுகோல் லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனக் கூறுவது)தானே! என வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) என்பாரிடம் வினவப்பட்டது. அதற்கவர், ஆம், ஆயினும் திறவு கோலுக்குப்...
1238. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இணைவைத்தவராக மரித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்துவிட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘(அப்படியாயின்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்’ என நான் கூறுகிறேன். Book :23
பாடம் : 2 ஜனாஸாவைப் பின்தொடர்தல் பற்றிய கட்டளை 1239. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். அவர்கள் எங்களக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாஸாவை பின் தொடரும் படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும், விருந்துக்கு அழைப்பவரின்...
1240. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :23
பாடம் : 3 ஜனாஸா கஃபன் செய்யப்பட்டபின் அவ்விடத்திற்குச் செல்லல். 1241. ஆயிஷா(ரலி)கூறினார்கள்’ நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு...
1395. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத்தை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான்...
1396. அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. ‘என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்’ எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) ‘இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘இவருக்கு ஏதோ...
1397. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான...
1398. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அப்துல்கைஸ் கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ரபீஆக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் உங்களுக்குமிடையே இஸ்லாத்தை ஏற்காத முளர் கூட்டத்தினர் வசிக்கிறார்கள். எனவே, யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதங்களிலன்றி (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர...
1399. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ கூறியவர் தம் உயிரையும் உடைமையையும்...
பாடம் : 1 ஸகாத் கடமையாக்கப்படுதல் அல்லாஹ் கூறுகிறான்: தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஸகாத்தையும் கொடுங்கள்! (2:43, 2:83, 2:110). நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை, ஸகாத், உறவினருடன் இணக்கமாக இருத்தல்,சுயமரியாதை ஆகியவற்றைக் கட்டளையிட்டார்கள் என்று அபூசுஃப்யான் (ஹிர்கல்-ஹெராக்ளியஸ்...
பாடம் : 2 தங்களுக்குரிய பலனை அடைவதற்காக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் ஒருவார்கள் எனும் (22:27, 28ஆகிய) இறைவசனங்கள். 1514. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் தம் வாகனத்தில் அமர்ந்தார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு...
1515. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். துல்ஹுலைஃபாவில் வாகனம் சரியாக நிலைக்கு வந்த பிறகுதான் நபி(ஸல்) இஹ்ராம் அணிந்தார்கள். இதைப் போன்று அனஸ்(ரலி)யும் இப்னு அப்பாஸ்(ரலி)யும் அறிவித்தார்கள். Book :25
பாடம் : 3 ஒட்டகப் பல்லக்கில் அமர்ந்து ஹஜ்ஜுக்குச் செல்லுதல். 1516. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை என்னுடன் அனுப்பி, தன்யீம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து உம்ராச் செய்ய ஏவினார்கள். ஒட்டகத் தொட்டியில் என்னை ஏற்றினார்கள். ஹஜ்ஜுக்கு வாகனத்தைத் தயார்படுத்துங்கள்....
1517. ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார். அனஸ்(ரலி) ஒட்டகச் சிவிகை அமைக்காமல் ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். (அவர் ஒட்டகச் சிவிகை அமைக்காதற்குக் கஞ்சத்தனம் காரணமில்லை) ஏனெனில், அவர் கஞ்சராக இருந்த தில்லை. நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகச் சிவிகை...
பாடம் : 31 மாதவிடாய் ஏற்பட்டவளும் பிரசவப் போக்குள்ள பெண்ணும் இஹ்ராம் எப்படிக் கட்டுவது? 1773. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.’ என அபூ ஹுரைரா(ரலி)...
பாடம் : 2 ஹஜ்ஜுக்கு முன்னால் உம்ராச் செய்தல். 1774. இப்னு ஜுரைஜ் அறிவித்தார். இக்ரிமா இப்னு காலித் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வது பற்றி இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டதற்குவர் ‘குற்றமில்லை’ என்றார். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன் உம்ராச் செய்தார்கள்’...
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள் எத்தனை? 1775. முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறினார்: நானும் உர்வா இப்னு ஸுபைரும் மஸ்ஜிது(ன் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் மஸ்ஜிதில் ளுஹா...
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள் எத்தனை? 1776. முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறினார்: நானும் உர்வா இப்னு ஸுபைரும் மஸ்ஜிது(ன் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் மஸ்ஜிதில் ளுஹா...
1777. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். ‘ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் (நபி(ஸல்) அவர்களின் உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை!’ என்றார்கள். Book :26
பாடம் : 1 உம்ராவிற்குச் செல்பவர் தடுக்கப்பட்டால்…? 1806. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக மக்கவிற்குப் புறப்பட்டார்கள். ‘நான் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட போது) செய்தது போல் செய்வேன்!’ என்று...
1807. நாஃபிவு அறிவித்தார். இப்னு ஸுபைர்(ரலி) அவர்களை (ஹஜ்ஜாஜின்) ராணுவம் முற்றுகையிட்டிருந்த நாள்களில் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (அவரின் மக்களான) உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் ஆகிய இருவரும், ‘நீங்கள் இவ்வாண்டு ஹஜ்ஜு செய்யாதிருப்பது உங்களுக்கு எந்தத்...
1808. நாஃபிவு அறிவித்தார். இப்னு ஸுபைர்(ரலி) அவர்களை (ஹஜ்ஜாஜின்) ராணுவம் முற்றுகையிட்டிருந்த நாள்களில் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (அவரின் மக்களான) உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் ஆகிய இருவரும், ‘நீங்கள் இவ்வாண்டு ஹஜ்ஜு செய்யாதிருப்பது உங்களுக்கு எந்தத்...
1809. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) தடுக்கப்பட்டபோது தம் தலையை மழித்துக் கொண்டு, தம் மனைவியருடன் கூடி, தம் பலிப்பிராணியையும் அறுத்து பலியிட்டார்கள்; மறுவருடம் உம்ரா செய்தார்கள். Book :27
பாடம் : 2 ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்படுதல். 1810. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறை உங்களுக்குப் போதாதா? உங்களில் ஒருவர் ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்பட்டால், அவர் (சாத்தியப்பட்டால்) கஅபாவை வலம்வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்து, இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்! மறுவருடம் ஹஜ் செய்து பலியிடட்டும்!...
பாடம் : 1 இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! மேலும், உங்களில் யாரேனும் வேண்டுமென்றே வேட்டை(யாடி)ப் பிராணியைக் கொன்று விட்டால், அதற்குப் பரிகாரமாக அவர், தான் கொன்ற பிராணிக்குச் சமமான ஒரு பிராணியை கால்நடைகளிலிருந்து பலி...
பாடம் : 3 இஹ்ராம் கட்டியவர்கள் வேட்டைப் பிராணியைக் கண்டு சிரிக்கும் போது இஹ்ராம் கட்டியவர் அதைப் புரிந்து கொண்டு வேட்டையாடுதல். 1822. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். ஹுதைபிய்யா (ஒப்பந்தம் நடந்த) ஆண்டில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். அவர்களின் தோழர்கள் இஹ்ராம் அணிந்திருந்தனர்;...
பாடம் : 4 இஹ்ராம் கட்டியவர் வேட்டையாடும் போது இஹ்ராம் கட்டாதவர் உதவக் கூடாது. 1823. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள காஹா எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் அணிந்தவர்களும் இஹ்ராம் அணியாதவர்களும் இருந்தனர்....
பாடம் : 5 இஹ்ராம் கட்டாதவர் வேட்டையாடுவதற்காக இஹ்ராம் கட்டியவர் வேட்டைப் பிராணியை(க் காட்டிக் கொடுக்க) சைகை செய்யலாகாது. 1824. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை...
பாடம் : 6 இஹ்ராம் கட்டியவருக்கு காட்டுக்கழுதை உயிருடன் அன்பளிப்புச் செய்யப்பட்டால் அதை அவர் ஏற்கலாகாது. 1825. ஸஅபு இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அப்வா அல்லது வத்தான் எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன்....
பாடம் : 1 மதீனாவின் புனிதம். 1867. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை...
1868. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்’ ‘பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) எனக்கு விலைக்குத் தாருங்கள்!’ என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் ‘இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!’ என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணை...
1869. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘மதீனாவின் இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவினால் (என் வாயிலாக) புனிதமானதாக ஆக்கப்பட்டுவிட்டது!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ ஹாரிஸா குலத்தினரிடம் நபி(ஸல்) அவர்கள் சென்று, ‘பனூ ஹாரிஸா குலத்தினரிடம்! நீங்கள் ஹரம் எல்லைக்கு...
1870. அலீ(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வின் வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை! (இந்த ஏட்டில் உள்ளதாவது); ‘ஆயிர் என்ற மலையிலிருந்து இன்ன இடம் வரை மதீனா புனிதமானதாகும்....
பாடம் : 2 மதீனாவின் சிறப்பும் தீயவர்களை அது வெளியேற்றிவிடும் என்பதும். 1871. யஸ்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப்...
பாடம் : 40 ரமளானில் விடுபட்ட நோன்பை எப்போது நிறைவேற்ற வேண்டும்? வேறு நாட்களில் நோற்கலாம் என்று அல்லாஹ் கூறுவதால் விடுபட்ட நோன்புகளைப் பிரித்துப் பிரித்து நோற்பதில் தவறில்லை! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். விடுபட்ட ரமளான்...
1892. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதை நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாகப்பட்டதும் ஆஷுரா நோன்பை (கடமையாகக் கருதி) நோற்பது விடப்பட்டது. ‘தம் வேறு நோன்பு (ஏதாவது) அந்நாளில் தற்செயலாக...
1893. ஆயிஷா(ரலி) அறிவித்தார். குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி(ஸல்) அவர்களும் ஆஷுரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் ‘(ஆஷுரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர்...
பாடம் : 2 நோன்பின் சிறப்பு. 1894. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று...
பாடம் : 3 நோன்பு குற்றங்களுக்குப் பரிகாரமாகும். 1895. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். ‘ஃபித்னா (சோதனை) பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் மனனம் செய்திருக்கிறீர்கள்?’ என்று உமர்(ரலி) கேட்டார். ‘நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்! ‘ஒருவர் தம் குடும்பத்தினர். தம் செல்வம், மற்றும் அண்டை...
பாடம் : 1 ரமளான் நோன்பு ஒரு கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆகக்...
2010. அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) ‘இவர்கள் அனைவரையும் ஓர்...
2011. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ரமளானில் (இரவுத்) தொழுகை தொழுதார்கள்!’ Book :31
2012. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள்...
பாடம் : 1 லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, நாம் அதை (-குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம்...
பாடம் : 2 லைலத்துல் கத்ர் இரவை (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் தேடுதல். 2015. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் கனவுகள் கடைசி...
2016. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே,...
பாடம் : 3 கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல். இது பற்றிய ஹதீஸை உபாதா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். 2017. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!’ என...
2018. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தம் இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி...
பாடம் : 1 (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பதும் எல்லாப் பள்ளிகளிலும் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதும். ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் மருவாதீர்கள்! இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;...
2026. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!’ Book :33
2027. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாஃபிலிருந்து வெளியேறுவார்கள். ‘யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ...
பாடம் : 2 இஃதிகாஃப் இருப்பவரின் தலையை மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் வாரலாம். 2028. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது தம் தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன். Book : 33
பாடம் : 3 இஃதிகாஃப் இருப்பவர் தேவை இருந்தால் தவிர மற்ற நேரங்களில் வீட்டிற்குச் செல்லக் கூடாது. 2029. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள். Book :...
பாடம் : 101 இறந்துபோன மிருகத்தின் பதப்படுத்தப்படா தோல்கள். 2047. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘அபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை? அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!’ என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த...
2048. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) ‘நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன்....
2049. அனஸ்(ரலி) அறிவித்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மதீனாவுக்கு வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) வசதி படைத்தவராக இருந்தார். அவர் அப்துர் ரஹ்மானிடம், ‘என்னுடைய செல்வத்தைச் சரி பாதியாக உமக்குப் பிரித்துத்...
2050. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினார்கள். அப்போது ‘உங்களுடைய இறைவனின் அருளைத் தேடுவது உங்களின் மீது குற்றமில்லை’ என்ற (திருக்குர்ஆன்...
பாடம் : 2 ஹலால் தெளிவானது; ஹராமும் தெளிவானது; அவ்விரண்டிற்கிடையே சந்தேகத்திற்கிடமானதும் உள்ளது. 2051. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று...
பாடம் : 76 வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை விற்பது. 2239. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் ஒரு வருடம், இரண்டு ஆண்டுகளில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘ஒருவர், (குறிப்பிட்ட காலத்திற்குப்...
பாடம் : 2 ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் கூற வேண்டும். 2240. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது மக்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் பேரீச்சம் பழத்தைப் பெற்றுக் கொள்வதாக (ஒப்புக் கொண்டு, அதற்காக) முன்பணம் கொடுத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள்,...
2241. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தபோது, (ஸலம் பற்றி குறிப்பிடுகையில்) ‘அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளில்தான் அது அனுமதிக்கப்படும்!’ என்றார்கள். Book :35
2242. இப்னு அபில் முஜாலித்(ரலி) அறிவித்தார். ‘அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்களும் அபூ புர்தா(ரலி) அவர்களும் ஸலம் விஷயத்தில் கருத்து வேறுபட்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீ அஃவ்பா(ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம் சென்று நான் இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள்,...
2243. இப்னு அபில் முஜாலித்(ரலி) அறிவித்தார். ‘அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்களும் அபூ புர்தா(ரலி) அவர்களும் ஸலம் விஷயத்தில் கருத்து வேறுபட்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீ அஃவ்பா(ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம் சென்று நான் இது பற்றிக் கேட்டேன்....
பாடம் : 1 நல்ல மனிதரைக் கூலிக்கு அமர்த்துதல். அல்லாஹ் கூறுகிறான்: அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்: என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்! (இவரைப் போன்ற) வலிமையுள்ளவரும் நம்பிக்கைக்குரியவரும்தான் நீங்கள் கூலிக்கு அமர்த்துவதற்குச் சிறந்தவராவார்....
2258. அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட...
2259. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு’ என்றார்கள். Book :36
2260. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!’ என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். Book :37
2261. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி(ஸல்) அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி(ஸல) அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி(ஸல்) அவர்களிடம்), ‘இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான்...
பாடம்: 2 சில கீராத் கூலிக்காக ஆடு மேய்த்தல். 2262. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; அப்போது நபித்தோழர்கள், ‘நீங்களுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக...
பாடம் : 3 தேவை ஏற்படும் போதும் முஸ்லிம்கள் கிடைக்காத போதும் இணைவைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துதல். நபி (ஸல்) அவர்கள் கைபரிலுள்ள யூதர்களிடம் வேலை வாங்கியிருக்கிறார்கள். 2263. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்ற போது) நபி(ஸல்) அவர்களும் அபூ...
பாடம் : 4 மூன்று நாட்களுக்குப் பின்போ, ஒரு மாதத்திற்குப் பின்போ, ஒரு வருடத்திற்குப் பின்போ வேலை செய்வதற்காக, இப்போதே கூலியாளைப் பேசி வைத்துக் கொள்ளலாம்; முன்னர் அவர்கள் பேசிக் கொண்ட நிபந்தனைகள் உரிய நேரம் வந்ததும் செல்லுபடியாகும். 2264. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)...
பாடம் : 1 ஹவாலாவை ஏற்றுக் கொண்டவர் பிறகு மாறலாமா? கடன் யார் பெயருக்கு மாற்றப்பட்டதோ அவர் அவ்விதம் மாற்றப்பட்ட நாளில் செல்வந்தராக இருந்திருந்தால் (பின்னர் அவர் திவாலாகிவிட்டாலும்) அந்த (ஹவாலா) ஒப்பந்தம் செல்லும்! என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்),...
பாடம் : 2 ஒருவருக்கு வரவேண்டிய கடன் ஒரு பணக்காரர் மீது மாற்றப்பட்டால் அதை அவர் மறுக்கக் கூடாது. 2288. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தர்...
பாடம் : 3 இறந்தவர் கொடுக்க வேண்டிய கடனுக்கு மற்றொருவர் பொறுப்பேற்றால் அது செல்லும். 2289. சலமா பின் அக்வஃ (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள் ‘நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபி(ஸல்) அவர்களிடம்...
பாடம் : 1 (பயிரிடப்பட்ட) நிலத்திலிருந்தும் (நடப்பட்ட) மரத்திலிருந்தும் மக்களோ, பிராணிகளோ பறவைகளோ உண்ணும் பட்சத்தில் அந்த விவசாயமும் மரம் நடுவதும் சிறப்புப் பெறுகின்றன. அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் விதைக்கின்ற இந்த விதை யைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?...
2291. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு...
2292. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். முஹாஜிர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அன்ஸாரி ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உறவினர்கள் அன்றி முஹாஜிர் அவருக்கு வாரிசாவார். நபி(ஸல்) அவர்கள் இருவருக்கிடையே ஏற்படுத்திய சகோதரத்துவமே இதற்குக் காரணம். ‘மேலும், தாய் தந்தையரும் நெருங்கிய பந்துக்களும்விட்டுச் செல்கிற செல்வத்திலிருந்து (விகிதப்படி...
2293. அனஸ்(ரலி) அறிவித்தார். ‘அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), (ஹிஜ்ரத் செய்து) எங்களிடம் வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்!’ Book :39
2294. ஆஸிம்(ரஹ்) அறிவித்தார். ‘இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?’ என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், ‘என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் உறவுமுறைகளை...
2299. அலீ(ரலி) அறிவித்தார். அறுக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சேணங்களையும் தோல்களையும் தர்மம் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். Book :40
2300. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, ‘அதை நீர் (அறுத்து)...
2301. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். ‘மக்காவிலுள்ள என் உறவினர்களையும் சொத்துக்களையும் உமய்யா இப்னு கலஃப் (என்ற இறைமறுப்பாளன்) பாதுகாக்க வேண்டும்’ என்றும் ‘மதீனாவிலுள்ள அவனுடைய உறவினர்களையும் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன்’ என்றும் அவனுடன் எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டேன்....
2302. அபூ ஹுரைரா(ரலி) அபூ ஸயீத்(ரலி) இருவரும் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் கைபர் பகுதியில் ஒரு மனிதரை அதிகாரியாக நியமித்தார்கள். அவர் ‘ஜனீப்’ என்னும் தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்), அவர்கள் ‘கைபரில் உள்ள எல்லாப் பேரீச்சம் பழங்களும் இதே...
2303. அபூ ஹுரைரா(ரலி) அபூ ஸயீத்(ரலி) இருவரும் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் கைபர் பகுதியில் ஒரு மனிதரை அதிகாரியாக நியமித்தார்கள். அவர் ‘ஜனீப்’ என்னும் தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்), அவர்கள் ‘கைபரில் உள்ள எல்லாப் பேரீச்சம் பழங்களும் இதே...
2320. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான...
பாடம் : 2 வேளாண்மைக் கருவிகளைத் துஷ் பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்). 2321. முஹம்மத்...
பாடம் : 3 விவசாயப் பண்ணையைப் பாது காத்திட நாய் வைத்திருப்பது (அனுமதிக் கப்பட்டதாகும்.) 2322. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய்...
2323. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். ‘அஸ்த் ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி) என்னிடம், ‘விவசாயப் பண்ணைணையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் எவ்விதத்தேவையுமின்றி நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (ஊதியம்) குறைந்து விடும்’ என்று...
பாடம் : 4 மாடுகளை உழுவதற்காகப் பயன் படுத்துதல். 2324. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘ஒருவர் ஒரு மாட்டின் மீது சவாரி செய்து கொண்டிருந்தபோது அந்த மாடு அவரைத் திரும்பிப் பார்த்து, ‘நான் இதற்காக (சுமை சுமந்து செல்வதற்காக) படைக்கப்படவில்லை; நிலத்தை உழுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளேன்...
பாடம் : 1 தண்ணீர் விநியோகம். அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வோர் உயிரினத்தையும் தண்ணீரி லிருந்து நாம் படைத்தோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா? (21:30) மேலும், அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் பருகும் இந்த நீரை நீங்கள் எப்போதாவது கண் திறந்து...
2352. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகத் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு நான்...
பாடம் : 3 நீர்நிலையின் உரிமையாளர், தன் தண்ணீர்த் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து கொள்ளும் வரை அதன் நீரைப் பயன்படுத்த முன்னுரிமை பெற்றவர் ஆவார். ஏனெனில், தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை (பிறர் உபயோகிப்பதைத்) தடுப்பது கூடாது என்று...
2354. ‘(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்தாகி விடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :42
பாடம் : 4 தனக்குச் சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டியவர் (அதில் யாரேனும் மனிதனோ மற்ற பிராணிகளோ விழுந்து இறந்து போனால்) அதற்கு நஷ்ட ஈடு தர மாட்டார். 2355. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால்,...
2385. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘உன் ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறாய்? அதை நீ விற்பாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம் (விற்று விடுகிறேன்)’ என்று...
2386. அஃமஷ்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம் ‘ஸலம்’ முறையில் (பிறகு பணம் தருவதாகக் கூறி) பொருளை வாங்கும்போது அடைமானம் வைப்பது குறித்துப் பேசினோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அஸ்வத்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதனிடம் குறிப்பிட்ட தவணை(யில்...
பாடம் : 2 திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைக்) கடன் வாங்கியவன் நிலையும்… திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத் துடன் கடன் வாங்கியவன் நிலையும்…. 2387. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்)...
பாடம் : 3 கடனைத் திருப்பிச் செலுத்துதல்: அல்லாஹ் கூறுகிறான்: (முஸ்லிம்களே!) அடைக்கலப் பொருட்களை அவற்றுக்கு உரியவரிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள். (உங்க ளிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பு களையும் உரியமுறையில் நிறைவேற் றுங்கள்.) மேலும்,நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால், நீதியுடன்...
2389. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உஹுது மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாள்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும்...
பாடம் : 1 (வழக்கில் சம்பந்தப்பட்டவரை) விசாரணைக்காகக் கொண்டு போய் நிறுத்துவது மற்றும் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தகராறு. 2410. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள்,...
2411. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், ‘உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று கூறினார். அந்த யூதர், ‘உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை...
2412. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்தத் தோழர்) யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்,...
2413. அனஸ்(ரலி) அறிவித்தார். யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், ‘உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?’ என்று கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி (‘ஆம், அவன்தான்’ என்பதற்கு அடையாளமாகத்)...
பாடம் : 2 பேதை மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவனின் பொருளாதார நட வடிக்கைகளை2 ரத்து செய்வது செல்லும்; ஆட்சித் தலைவர் அவனது பொருளாதார நடவடிக்கைகளைத் தடை செய்து3 (இன்னும்) ஆணை பிறப்பிக்காமலிருந்தாலும் சரியே! ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக...
பாடம் : 1 கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமை யாளர் அடையாளம் (சரியாகக்) கூறினால் கண்டெடுத்தவர் அதை அவரிடம் தந்து விட வேண்டும். 2426. உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு)...
பாடம் : 2 தொலைந்த ஒட்டகம். 2427. ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, (பாதையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய். பிறகு,...
பாடம் : 3 வழி தவறிய ஆடு. 2428. ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் அறிந்து கொள். பிறகு, ஓராண்டுக் காலத்திற்கு (அதை) அறிவிப்புச்...
பாடம் : 4 கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமை யாளர் ஒரு வருட காலத்திற்குப் பின்பும் கிடைக்கா விட்டால்,அது அதைக் கண்டெடுத்தவருக்கே உரியதாகும். 2429. ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதன் பையையும்...
பாடம் : 5 ஒருவருக்கு கடலில் மரக்கட்டையோ ஒரு சாட்டையோ அல்லது அது போன்ற ஏதேனும் ஒரு பொருளோ கிடைத்தால்…. 2430. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல்களில் ஒரு மனிதரை நினைவு கூர்ந்தார்கள். ‘அந்த மனிதர் கடலில் தன்னுடைய செல்வத்துடன்...
பாடம் : 1 அநீதிகளுக்காகப் பழிவாங்கல். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) வேதனை வரக் கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அன்று இந்த அக்கிரமக் காரர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவனே! இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்கு அவகாசம்...
பாடம் : 2 அல்லாஹ் கூறுகின்றான்: எச்சரிக்கை! அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். (11:18) 2441. ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ் அல்மாஸினீ(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, ‘(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும்...
பாடம் : 3 ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்-முக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனைக் கைவிடவும் மாட்டான். 2442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான்....
பாடம் : 4 உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருந்தாலும் அக்கிரமத்துக்குள்ளான வனாக இருந்தாலும் அவனுக்கு உதவி செய். 2443. உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளான நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்...
2444. அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?’ என்று...
பாடம் : 1 உணவிலும் பயணச் செலவிலும் பிற பண்டங்களிலும் கூட்டுச் சேருதல். மற்றும் அளக்கப்படும் பொருள் களையும் நிறுக்கப்படும் பொருள் களையும் பங்கிடுவது எப்படி? (அளக்காமல் நிறுக்காமல்) குத்து மதிப்பாகப் பங்கிட வேண்டுமா? அல்லது சமமான ஒவ்வொரு பிடியாகப்...
2484. ஸலமா(ரலி) அறிவித்தார். (ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவு தீர்ந்து போய்ப் பஞ்சத்திற்குள்ளானார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (புசிப்பதற்காகத்) தங்கள் ஒட்டகங்களை அறுக்க அனுமதி கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். (வழியில்) அவர்களை உமர்(ரலி) சந்திக்க, மக்கள் அவர்களுக்கு...
2485. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அஸர் தொழுகை தொழுதுவிட்டு, ஒட்டகத்தை அறுப்போம். அது பத்துப் பங்குகளாகப் பங்கு போடப்படும். சூரியன் மறைவதற்கு முன் நாங்கள் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம். Book :47
2486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு...
பாடம் : 2 இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர், தன் பொருட் களின் ஸகாத்துடன் மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தானே செலுத்திவிடுவாராயின், அவர் தன் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடம் பெற்றுக்...
பாடம் : 1 ஊரிலிருக்கும் போது அடைமானம் வைத்தல். அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் பயணத்திலிருந்தால், மேலும் (ஒப்பந்தப் பத்திரம் எழுதுவதற்கு) எந்த ஓர் எழுத்தரும் உங்களுக்குக் கிடைக்க வில்லையென்றால் அடகுப் பொருளைப் பெற்றுக் கொண்டு நீங்கள் கொடுக்கல் வாங்கல் செய்து...
பாடம் : 2 கவசத்தை அடகு வைத்தல். 2509. அஃமஷ்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம் அடைமானம் பற்றியும் கடனில் பிணை பற்றியும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அப்போது இப்ராஹீம் நகயீ(ரஹ்), ‘நபி(ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு...
பாடம் : 3 ஆயுதத்தை அடகு வைத்தல். 2510. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒரு முறை அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்கள், ‘கஅபாவின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு யார் (தயாராக) இருக்கிறார்கள்? ஏனெனில், அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதருக்கும் அவன் பொல்லாங்கு விளைவித்து (தொல்லை தந்து)விட்டான்’ என்று...
பாடம் : 4 அடைமானம் வைக்கப்பட்ட கால் நடையை வாகனமாகப் பயன் படுத்தலாம்; அதன் பாலைக் கறக்கலாம். இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வழி தவறி வந்த பிராணியின் மீது (அதற்குப் போடுகின்ற தீனியின் அளவுக் கேற்ப) சவாரி...
2512. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி...
2517. அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார். ‘ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்’...
பாடம் : 2 எந்த அடிமையை விடுதலை செய்வது மிகவும் சிறந்தது. 2518. அபூ தர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘எந்த நற்செயல் சிறந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஈமான் எனும் நம்பிக்கை கொள்வதும் அவனுடைய பாதையில் ஜிஹாத்...
பாடம் : 3 சூரிய கிரகணம் உள்ளிட்ட இறைச் சான்றுகள் வெளிப்படும் போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத் தக்கது. 2519. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள். Book : 49
2520. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நாங்கள் சந்திர கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம். Book :49
பாடம் : 4 இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல். 2521. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருவருக்குப் பங்குள்ள ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால் அவர் வசதியுடையவராக இருப்பாராயின் அவ்வடிமையின் (சந்தை) விலை மதிப்பிடப்பட்டு...
பாடம்: 5 முகாத்தப், என்னை வாங்கி விடுதலை செய்து விடு என்று கூற, அவ்வாறே அவனை ஒருவர் வாங்கினால் (செல்லும்). 2565. அபூ அய்மன்(ரஹ்)அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் உத்பா பின் அபீலஹபுக்கு அடிமையாக இருந்தேன். அவர்...
பாடம் : 1 2566. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி)...
2567. உர்வா பின் ஸுபைர் (ரலி)அவர்கள் கூறினார்கள்; என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே!- நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம். பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம்-. அப்படியிருந்தும்,...
பாடம் : 2 சிறிய அன்பளிப்பு. 2568. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும்...
பாடம் : 3 நண்பர்களிடம் அன்பளிப்பு கேட்பது. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) கூறியதாவது: உங்களுடன் எனக்கு ஒரு பங்கை ஒதுக்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.4 2569. அபூ சயித் அல்குத்ரீ(ரலி) கூறியதாவது: தச்சு வேலை தெரிந்த அடிமை ஒருவனை வைத்திருந்த...
2614. அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன். Book...
பாடம் : 28 இணைவைப்போரின் அன்பளிப்பை ஏற்றுக் கொள்வது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் மனைவி) சாராவுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். அப்போது அரசன் ஒருவன்…. அல்லது அடக்கியாளும் கொடுங்கோலன் ஒருவன்…. இருந்த ஓர் ஊருக்குச்...
2616. அனஸ்(ரலி) அறிவித்தார். தூமத்துல் ஐந்தலின் அரசர் உகைதிர், நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார். Book :51
2617. அனஸ்(ரலி) அறிவித்தார். யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள்....
2618. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், ‘உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாவு அளவு உணவு தான் இருந்தது....
பாடம் : 1 வாதி தான் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக்கு நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுத்து வாங்கிக் கொள்வீர்களாயின் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடையே எழுத்தர்...
பாடம் : 3 மறைந்திருந்து கேட்டவரின் சாட்சியம். இதை அம்ரு பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மேலும், அவர்கள், தீயவனான பொய்யனிடம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஷஅபீ (ரஹ்), இப்னு ஸீரீன் (ரஹ்), அதாஉ...
2639. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ரிஃபாஆ அல் குரழீ(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்களை...
பாடம் : 4 ஒருவரோ பலரோ ஒரு விஷயத்திற்கு சாட்சியம் அளித்திருக்க, மற்ற சிலர் வந்து, இதை நாங்கள் அறிய மாட்டோம் என்று கூறினால் (முத-ல்) சொன்னவர்களின் சாட்சியத்தை வைத்தே தீர்ப்பளிக்கப்படும். இது (எப்படியென்றால்) பிலால் (ரலி) அவர்கள், நபி...
பாடம் : 5 நேர்மையான சாட்சிகள் அல்லாஹ் கூறுகிறான்: மேலும், உங்களில் நேர்மையுள்ள இருவரை சாட்சிகளாக்கிக் கொள் ளுங்கள். (65:2) இந்த சாட்சிகள் நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாய் இருக்க வேண்டும். (2:282) 2641. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள்...
பாடம் : 1 மக்களிடையே சமாதானம் செய்து வைத்தல். அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும் படியோ, மக்களிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர் களின் பேச்சுக்களைத்...
2691. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது....
பாடம் : 2 மக்களிடையே சமாதானம் செய்து வைப்பவன் (அதற்காகப் பொய்யே கூறினாலும்) அவன் பொய்யன் அல்லன். 2692. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன். என உம்மு குல்தூம் பின்த்து...
பாடம் : 3 தலைவர் தம் தோழர்களிடம், நம்மை அழைத்துச் செல்லுங்கள்; நாம் (அவர்களிடையே) சமாதானம் செய்து வைப்போம் என்று சொல்லுதல். 2693. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு ‘குபா’ வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டனர். அல்லாஹ்வின் தூதரிடம்...
பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந்தங்கள் முதலான சட்டங்களிலும் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள். 2711. மர்வான் இப்னி ஹகம் அவர்களும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது: சுஹைல் இப்னு அம்ர்(ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர்...
பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந்தங்கள் முதலான சட்டங்களிலும் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள். 2712. மர்வான் இப்னி ஹகம் அவர்களும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது: சுஹைல் இப்னு அம்ர்(ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர்...
2713. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த) பெண்களை (திருக்குர்ஆன் 60:10-12) இறை வசனத்தின் கட்டளைப்படி சோதித்து வந்தார்கள். இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை அப்பெண்களில் ஏற்றுக் கொள்கிறவரிடம், ‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்)...
2714. ஜரீர்(ரலி) அறிவித்தார். நான் அல்லாஹ்வின் தூதரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். அப்போது அவர்கள், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும் (முஸ்லிமான) ஒவ்வொருவருக்கும் நான் நலம் நாட வேண்டும் என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். Book :54
பாடம் : 1 மரண சாசனங்களும், மனிதனின் மரண சாசனம் எழுதப்பட்டு அவனிடம் (ஆவண வடிவில்) இருக்க வேண்டும் என்னும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஒருவருக்கு மரணம் வரும் போது அவர் செல்வம் எதையேனும்...
2739. அல்லாஹ்வின் தூதருடைய துணைவியார் ஜுவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோவிட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி...
2740. தல்ஹா இப்னு முஸர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் வஸிய்யத் – மரண சாசனம் செய்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நான், ‘அப்படியென்றால் மக்களின் மீது வஸிய்யத் – மரண...
2741. அஸ்வத்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்களிடம் மக்கள், ‘நபி(ஸல்) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ(ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். (என்று கேள்விப்படுகிறோமே)’ என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு வஸிய்யத் செய்தார்கள்?...
பாடம் : 176 இஸ்லாமிய அரசின் கீழுள்ள பிற மதத்தவருக்காகப் பரிந்துரை செய்யலாமா? என்பதும், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்கள் செய்வதும். 2782. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை...
2783. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத்(இறைவழியில் தாயகம் துறந்து செல்வது) என்பது கிடையாது. ஆனால், அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. போருக்குப் புறப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டால் உடனே போருக்குச்...
2784. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் (நபி(ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத...
2785. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அப்படி எதையும் நான் காணவில்லை’ என்று கூறிவிட்டு, ‘அறப்போர் வீரன் (போருக்காகப்)...
பாடம் : 151 இறைமறுப்பாளர்களிடம் சிக்கிக் கொண்ட (முஸ்லிம்) போர்க் கைதி தன்னைச் சிறைபிடித்தவர்களிட மிருந்து தப்பிக்க அவர்களை ஏமாற்றவோ, கொன்று விடவோ அனுமதியுண்டா? இது பற்றி நபி (ஸல்) அவர் களிடமிருந்து மிஸ்வர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.130 பாடம்...
3092. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அது இறைத்தூதர்(ஸல்), அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த, (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த)...
3093. ஃபாத்திமாவுக்கு அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்’ என்று பதிலளித்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் பேசுவதைவிட்டுவிட்டார்கள்....
3094. முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார். நான் மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அவர்களிடம் சென்று அந்த (ஃபதக் தொடர்பான) நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன் அவர்கள் கூறினார்கள். கடும் உச்சி வெயில் அடித்துக் கொண்டிருந்த நீண்ட ஒரு பகல் வேளையில் என் வீட்டாருடன்...
பாடம் : 1 இஸ்லாமிய அரசின் பொறுப்பிலுள் ளவர்களுடன் ஜிஸ்யா’ எனும் காப்பு வரி ஒப்பந்தம் செய்து கொள்வதும், பகை நாட்டினருடன் குறித்த காலத்திற்குப் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதும். அல்லாஹ் கூறுகிறான்: வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர் அல்லாஹ்வின்...
3157. அதன் காரணத்தால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஜர் (பஹ்ரைன்) பகுதியில் வசித்து வந்த மஜூஸிகளிடமிருந்து ஜிஸ்யா வரி வசூலித்துள்ளார்கள்’ என்று சாட்சி சொன்னார்கள். Book :58
3158. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். ‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப் அல் அன்சாரீ(ரலி) எனக்குக் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை...
3159. பக்ரு இப்னு அப்தில்லாஹ் அல் முஸனீ(ரஹ்) மற்றும் ஸியாத் இப்னு ஜுபைர் இப்னி ஹய்யா(ரஹ்) ஆகிய இருவரும் அறிவித்தார்கள். உமர்(ரலி) (தம் ஆட்சிக் காலத்தில்) இணைவைப்போருடன் போர் புரிய மக்களைப் பெரும்பெரும் நகரங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது (‘ருஸ்தும்’ என்கிற பாரசீகத்...
பாடம் : 1 அல்லாஹ் கூறுகிறான்: அவனே ஆரம்பத்தில் படைக்கின் றான். பிறகு அவனே அதை மீண்டும் படைக்கின்றான். இது அவனுக்கு மிகவும் எளிதானதாகும். (30:27) பார்க்க இறை வசனங்கள்: 1)50 : 15 2)35 : 35 3)71...
3191. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்,...
3192. உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே மிம்பரில் எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு ஈறாக) சொர்க்கவாசிகள் (சொர்க்கத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும்...
3193. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தவனான அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை ஏசுகிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். அவன் என்னை நம்ப மறுக்கிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். எனக்குக் குழந்தை இருப்பதாக அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ‘நான்...
3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்...
3327. ‘சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பெளர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்;...
3328. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் உம்மு சுலைம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் அவள் (மதன) நீரைப்...
3329. அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர்...
பாடம் : 21 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், மூசாவைப் பற்றி இவ்வேதத்தில் உள்ளதைக் கூறுவீராக: நிச்சயமாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவும் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதராகவும் (நம்) செய்தியை எடுத்துரைக்கும் நபியாகவும் இருந்தார். மேலும், நாம் தூர் மலையின் வலப் பக்கத்திலிருந்து அவரை...
3490. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், ‘அவர்களில் இறையச்சமுடையவரே’ என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை’ என்றனர். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின்...
3491. குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அவர்களிடம் நான், ‘நபி(ஸல்) அவர்கள் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களா என்று எனக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்டதற்கு, ‘முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்?...
3492. குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் – அவர்கள் ஸைனப்(ரலி) என்று எண்ணுகிறேன் – எனக்கு அறிவித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்களையும்,...
பாடம் : 1 அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக் கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். உண்மையில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்...
3650. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம்...
3651. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர், ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களின் சத்தியம்...
பாடம் : 2 முஹாஜிர்களின் சிறப்புகளும் அவர்களின் மேன்மையும்.8 அபூபக்ர் அப்துல்லாஹ் பின் அபீ குஹாஃபா அத்தைமீ (ரலி) அவர்களும் முஹாஜிர்களில் ஒருவர் தாம்.9 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், (ஃபய்உ10 எனும் அந்தச் செல்வம்) தங்களின் இல்லங்களை விட்டும் –...
பாடம் : 1 நபித்தோழர்களின் சிறப்புகளும், முஸ்லிம் களில் எவர் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டாரோ, அல்லது அவர் களைப் பார்த்தாரோ அவர் நபித்தோழர் ஆவார் என்பதும்.1 3776. ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்...
3777. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘புஆஸ்’ போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன்கூட்டியே நிகழச் செய்த நாளாக அமைந்தது. (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும் அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும்...
3778. அனஸ்(ரலி) அறிவித்தார். மக்கள் வெற்றியடைந்த ஆண்டில் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளுக்கு வழங்காமல், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்கா குறைஷிகளுக்கு கொடுத்தபோது அன்சாரிகள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மையில், இது வியப்பாகத் தான் இருக்கிறது. எங்கள் வாட்களில் குறைஷிகளின்...
பாடம் : 2 ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாதிருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது.4 இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.5 3779. அபுல் காசிம்… ‘ என்று இறைத்தூதர்(ஸல்)...
3949. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார் நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, ‘நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?’ என்று அவர்களிடம் வினவப்பட்டது. ‘பத்தொன்பது’ என்று அவர்கள் பதிலளித்தார்கள். ‘நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?’ என்று வினவப்பட்டபோது, ‘பதினேழு’...
3950. ஸஅத் இப்னு முஆத்(ரலி) வாயிலாக இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) (அறியாமைக் காலத்தில் இணைவைப்போரின் முக்கிய தலைவர்களில் ஒருவனான) உமய்யா இப்னு கலஃபுக்கு நண்பராயிருந்தார். உமய்யா, மதீனா வழியாக (ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காக)ச் செல்லும்போது (மதீனாவில்) ஸஅத்(ரலி) அவர்களிடம்...
3951. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். தபூக் போரைத் தவிர்த்து நபி(ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. அதில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வினால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்)...
3952. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களின் அவைக்குச் சென்றேன். நான் அவர்களின் அவையில் (பங்கெடுத்த, அவர்கள் கூறும் விஷயங்களை எடுத்துரைப்பவனாக) இருப்பது, அதற்கு நிகரான(மற்ற அனைத்)தை விடவும் எனக்கு விருப்பானதாயிருக்கும். (மிக்தாத் இப்னு அஸ்வத் -ரலி –...
பாடம் : 2 (அவர்கள் உனது) கோபத்திற்குள்ளானவர் களும் அல்லர்; வழிதவறிச் சென்றவர்களும் அல்லர் (எனும்1:7ஆவது இறைவசனம்).9 4475. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: (தொழுகையில்) இமாம், ‘ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வ லள்ளால்லீன்’ என்று ஓதியவுடன் நீங்கள், ‘ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)’ என்று சொல்லுங்கள்....
பாடம் : 1 அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடை யோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…. அவன் ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான் (எனும் 2:31 ஆவது வசனத் தொடர்).2 4476. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து...
பாடம் : 2 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:7 (2:14ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இலா ஷயாத்தீனிஹிம் (தங்களுடைய ஷைத்தான்களுடன்) எனும் சொல்லுக்கு, நயவஞ்சகர்களும் இணை வைப்பவர்களுமான தங்களுடைய தோழர்கள் என்று பொருள். (2:19ஆவது வசனத்தின்...
பாடம் : 4 மேலும், நாம் உங்கள் மீது மேகத்தை நிழ-டும்படி செய்தோம். உங்களுக்கு மன்னு, சல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள் (என்றும் உங்களிடம் கூறினோம். இக்கட்டளைகளை மீறியதால்)...
பாடம் : 1 வேத அறிவிப்பு (வஹீ) எவ்வாறு அருளப் பெற்றது? என்பது பற்றியும், முதன்முதலில் அருளப்பெற்றது எது? என்பது பற்றியும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முஹைமின்’ எனும் சொல்லுக்குப் பாதுகாக்கக்கூடியது’என்று பொருள்;...
4982. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து ‘வஹீ’ (வேத அறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப்பெற்றதை விட) அதிகமாக இருந்தது. அதற்குப்...
பாடம் : 1 மணமுடித்துக்கொள்ள ஆர்வமூட்டுதல் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். (4:3) 5063. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்)...
5064. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணமுடித்துக...
பாடம் : 2 தாம்பத்தியம் நடத்த சக்தியுள்ளவர் திருமணம் செய்துகொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும் எனும் நபிமொழியும், திருமண ஆசை இல்லாதவர் திருமணம் செய்துகொள்ளலாமா என்பதும். 5065. அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார் நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)...
பாடம் : 3 தாம்பத்தியம் நடத்த சத்திபெறாதோர் நோன்பு நோற்கட்டும்! 5066. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார் நானும் அல்கமா மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத...
5255. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது...
5256. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள் நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை...
5257. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள் நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை...
5258. யூனுஸ் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ‘ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். (அது குறித்து மார்க்கம் என்ன தீர்ப்புச் செய்கிறது?)’ என்று கேட்டேன் அதற்கு அவர்கள், ‘இப்னு உமர் (அதாவது நான்) யார் என்று...
பாடம் : 1 உயர்வான அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (மக்களிடம் கூறுக:) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர் களானால், அவர்களுடைய இத்தா’ விற்கேற்ற நேரத்தில் மணவிலக்கு அளித்து, இத்தா’வைக் கணக்கிட்டு வாருங்கள் (65:1). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள அஹ்ஸூ’ எனும்...
5352. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ், ‘ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்’ என்று கூறினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4 Book :69
5353. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்’. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :69
5354. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது„நான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரித்து வந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரண சாசனம்...
பாடம் : 1 நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையான உண்பொருட்களை உண்ணுங்கள் எனும் (20:81ஆவது) இறைவசனமும், நீங்கள் சம்பாதித்த நல்ல பொருள்களிலிருந்து செலவு செய்யுங்கள் எனும் (2:267 ஆவது) இறைவசனமும், (தூதர்களே) தூய்மையான வற்றிலிருந்து உண்ணுங்கள்; நற்செயல் புரியுங்கள். நீங்கள்...
5374. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் முஹம்மத்(ஸல்) அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை. Book :70
5375. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து...
பாடம் : 2 உணவு உண்ணும் போது அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுவதும், வலக் கரத்தால் உண்பதும். 5376. (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை)...
பாடம் : 1 அகீகா கொடுக்கப்படாத குழந்தைக்கு, அது பிறந்த நாளன்றே பெயர் சூட்டுவதும் இனிப்பான பொருளை மென்று அதன் வாயி-டுவதும்.2 5467. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) கூறினார் எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன்....
5468. ஆயிஷா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்களிடம், அவர்கள் இனிப்புப் பொருளை மென்று வாயிலிடுவதற்காக ஆண் குழந்தை ஒன்று கொண்டு வரப்பட்டது. அது அவர்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. (சிறுநீர் கழித்த) இடத்தில் நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்றும்படி செய்தார்கள். Book :71
5469. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார் மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) ‘குபா’வில் தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாம்விட்டது. பிறகு குழந்தையை இறைத்தூதர்(ஸல்)...
5470. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் (என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி)...
பாடம் : 1 வேட்டைப் பிராணியின் மீது (அம்பு எய்யும் போது) அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்’) கூறுவது. உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் (சுலபமாக) அடையக்கூடிய வேட்டைப்...
பாடம் : 2 இறகு இல்லாத அம்பினால் (மிஅராள்’) வேட்டையாடப்பட்ட பிராணி. களிமண் குண்டு, அல்லது ஈயக்குண்டு (அல்புந்துகா’) மூலம் (வேட்டையாடிக்) கொல்லப்பட்ட பிராணி குறித்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது...
பாடம் : 3 இறகு இல்லாத அம்பின் பக்கவாட்டினால் வேட்டையாடப்பட்ட பிராணி. 5477. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார் நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடியக் கொண்டு வருகிறவற்றை நாங்கள் உண்ணலாமா?)’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள்,...
பாடம் : 4 வில்லால் வேட்டையாடுவது ஹஸன் அல்பஸரீ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (அம்பு போன்ற ஆயுதத்தால்) ஒரு வேட்டைப் பிராணியைத் தாக்கியதால் அதன் கை, அல்லது கால் துண்டாகி விழுந்துவிட்டால் துண்டான உறுப்பைச்...
பாடம் : 38 நிர்ப்பந்தத்திற்குள்ளானவன் (செத்தவற்றை) உண்பது.58 அல்லாஹ் கூறுகின்றான்: நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மை யானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அவனுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (தானாகச்) செத்த பிராணி, உதிரம், பன்றியிறைச்சி,...
5546. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் ‘(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கிறவர் தம(து சொந்த செலவு)ககாகவே அறுத்தவராவார். தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவராவார்’ என்று கூறினார்கள். Book :73
பாடம் : 2 குர்பானிப் பிராணிகளை மக்களிடையே தலைவர் பங்கிடுவது. 5547. உக்பா இப்னு ஆமிர் அல்ஜுஹைனீ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே குர்பானிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (என்னுடைய பங்காக) ஒரு வயது பூர்த்தியான வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது...
பாடம் : 3 பயணி மற்றும் பெண்களுக்குக் குர்பானி உண்டா?6 5548. ஆயிஷா(ரலி) கூறினார் (நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) நான் மக்காவினுள் நுழையும் முன் ‘சரிஃப்’ எனுமிடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதுகொண்டிருந்தேன்....
பாடம் : 1 நம்பிக்கை கொண்டோரே! மதுபானம், சூதாட்டம், ப-பீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியன ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் அடங்கும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள் எனும் (5:90ஆவது) இறைவசனம். 5575. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உலகில் மது...
5576. அபூ ஹுரைரா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் (ஒன்றில்) மதுவும் (மற்றொன்றில்) பாலும் இருந்த இரண்டு கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. அவர்கள் அவ்விரண்டையும் பார்த்துவிட்டுப் பால் கிண்ணத்தை எடுத்தார்கள். அப்போது...
5577. அனஸ்(ரலி) கூறினார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை (ஹதீஸை)க் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்து போவதும், விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும், ஐம்பது...
5578. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (அது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்யாளனாக இருந்தபடி திருட மாட்டான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு...
பாடம் : 1 நோய் (பாவங்களுக்கு) ஒரு பரிகாரம் என்பது குறித்து வந்துள்ளவை. அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு தீமையைப் புரிகின்றவர் அதற்குரிய தண்டனை வழங்கப்பெறுவார். (4:123)2 5640. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும்...
5641. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும்...
5642. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும்...
5643. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்)...
5644. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைநம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப்...
பாடம் : 1 அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. 5678. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.2 என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book : 76
பாடம் : 2 ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் சிகிச்சையளிக்கலாமா? 5679. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) கூறினார் நாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொண்டோம். (போரின்போது) மக்களுக்கு தண்ணீர் புகட்டிக்கொண்டும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிந்துகொண்டும், கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்க(ளுக்கு...
பாடம் : 3 மூன்றில் நிவாரணம் உண்டு 5680. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் ‘மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள...
5681. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது, நெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன். என...
பாடம் : 1 ‘(நபியே!) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?’ எனும் (7:32ஆவது) இறைவசனம்.2 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தானம் செய்யுங்கள்....
பாடம் : 2 தற்பெருமையின்றி ஒருவர் தமது கீழங்கியை இழுத்துச் செல்வது.3 5784. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்’ என்று கூறினார்கள்....
5785. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தபோது சூரியம்ரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் அவரசத்துடன் எழுந்து தம் ஆடையை இழுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். (பள்ளிவாசலில் இருந்து சென்றுவிட்ட) மக்கள் அனைவரும் திரும்பி வந்தனர். நபி(ஸல்) அவர்கள் சூரியம்ரகணம் விலகும்வரை...
பாடம் : 3 ஆடையை வரிந்து கட்டுவது 5786. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார் பிலால்(ரலி) (இரும்புப் பிடி போட்ட) ஒரு கைத்தடியைக் கொண்டு வந்து அதை (பூமியில் தடுப்பாக) நட்டு வைத்துப் பிறகு, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்வதை கண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆடையை...
பாடம் : 1 (பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு) நன்மை செய்வதும் உறவைப் பேணி வாழ்வதும். அல்லாஹ் கூறுகிறான்: தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும் படி மனிதனுக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். (29:8) 5970. வலீத் இப்னு அய்ஸார்(ரஹ்) அறிவித்தார் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின்...
பாடம் : 2 அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர் யார்? 5971. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன்...
பாடம் : 3 பெற்றோரின் அனுமதியுடனேயே அறப்போர் புரியவேண்டும். 5972. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்...
பாடம் : 4 எவரும் தம் பெற்றோரை ஏசக் கூடாது. 5973. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் ‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை...
பாடம் : 1 சலாமைத் தொடங்குதல்2 6227. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, ‘நீங்கள் சென்று, அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம்...
பாடம் : 2 அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு சலாம் (முகமன்) சொல்லாத வரை (அவற்றினுள்) பிரவேசிக் காதீர்கள். (அவ்வாறு நடப்பதே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவ...
6229. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் அங்கு...
பாடம் : 3 அஸ்ஸலாம்’ என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாகும்.7 அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுக்கு சலாம் (முகமன்) கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) சலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். (4:86)8 6230. அப்துல்லாஹ் இப்னு...
பாடம் : 34 (இறைவா) என்னால் எவரேனும் மன வேதனை அடைந்திருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிடுவாயாக என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது. 6304. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட...
6305. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்துவிட்டனர்’ அல்லது ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப் பிரார்த்தனை உண்டு; அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர்.’ அது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமை நாளில்...
பாடம் : 2 பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது அல்லாஹ் கூறுகின்றான்: (நூஹ் கூறினார்:) நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன். (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அவன் செல்வங்களையும்,...
பாடம் : 1 ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அங்கீகரிக்கப் பட்ட ஒரு பிரார்த்தனை உண்டு. 6412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2 என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இதே...
6413. அனஸ்(ரலி) அறிவித்தார். (அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி(ஸல்) அவர்கள் ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை இல்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!’ என்று (பாடியபடி) சொன்னார்கள். 3 Book...
6414. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாயிதீ(ரலி) அறிவித்தார். அகழ்ப் போரின்போது நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்துவிட்டு, ‘இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர...
பாடம் : 1 6594. உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் கவரைப் பற்றிப்...
6595. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ், (தாயின்) கருவறையில் ஒரு வானவரை நியமிக்கிறான். அவர், ‘இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! (இது பற்றித் தொங்கும்) கருக்கட்டி இறைவா! (இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு’ என்று கூறிக் கொண்டிருப்பார்....
பாடம் : 2 இறைவனின் தீர்மானத்தை எழுதிய பேனா(வின் மை) உலர்ந்துவிட்டது.4 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) எவன் தன்னுடைய (சரீர மற்றும் மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை...
பாடம் : 1 அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவ தில்லை. ஆயினும், நீங்கள் உறுதிப்பாட்டுடன் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் தண்டிப்பான். (முறித்துவிட்ட) சத்தியத்திற் கான...
6622. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவின் உதவி கிட்டாது.)...
6623. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான்...
பாடம் : 1 அதன் பரிகாரமாவாது: உங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் அளிக்கும் உணவில் நடுத்தரமான உணவைப் பத்து ஏழைகளுக்கு அளித்திட வேண்டும்; அல்லது அவர்களுக்கு ஆடை அளித்திட வேண்டும்; அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்திட வேண்டும். (இதில் எதற்குமே...
பாடம் : 2 செல்வரின் மீதும் ஏழையின் மீதும் எப்போது பரிகாரம் கடமையாகும்? அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (தக்க பரிகாரங்களுடன்) முறித்துக்கொள்வதை உங்களுக்கு அனுமதித்திருக்கின்றான். அல்லாஹ்வோ உங்கள் எஜமானன். அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (66:2) 6709. அபூ ஹுரைரா(ரலி)...
பாடம் : 3 பரிகாரத்தை நிறைவேற்றுவதற்காக ஏழைக்கு உதவுதல் 6710. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் அழிந்து விட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘என்ன அது?’ என்று கேட்டார்கள். ‘நான் ரமளானில் (நோன்பு வைத்துக் கொண்டே)...
பாடம் : 1 அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்; பெண்மக்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு, இறந்து...
பாடம் : 2 பாகப் பிரிவினை (கல்வி)யைக் கற்பித்தல் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: யூகத்தின் அடிப்படையில் பேசக்கூடிய வர்கள் தோன்றுவதற்கு முன் (அடிப்படை யுள்ள பாகப் பிரிவினை போன்ற) கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள். 6724. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அடிப்படையில்லாமல் பிறர்...
பாடம் : 3 (இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.6 6725. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்) ஃபாத்திமா(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம்...
பாடம் தண்டனைக்குரிய குற்றங்கள் பற்றிய எச்சரிக்கை2 பாடம் : 1 விபசாரமும் குடியும் ளநபி (ஸல்) அவர்கள் கூறியதாகன இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் விபசாரம் புரியும் போது, இறை நம்பிக்கையின் (ஈமான்) ஒளி அவரிடமிருந்து அகற்றப்படுகிறது.3 6772. இறைத்தூதர்(ஸல்)...
பாடம் : 2 மது அருந்துபவனை அடிப்பது குறித்து வந்துள்ளவை.5 6773. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடுத்திடும்படி நபி(ஸல) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள்...
பாடம் : 3 வீட்டுக்குள்ளேயே தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுவது. 6774. உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். குடி போதையிலிருந்து ‘நுஐமான்’ என்பவர், அல்லது ‘அவரின் புதல்வர்’ நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்களும் (காலணியாலும் பேரீச்ச மட்டையாலும்) அவரை...
6861. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒருவர் (நபியவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்’ என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘பிறகு எது...
6862. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலைசெய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book :87
6863. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புனிதமிக்கதாகக் கருதப்படும் (மனித) உயிரை (மார்க்க ரீதியான) அனுமதியின்றி கொலை செய்வதானது, விழுந்தால் வெளிவர முடியாத நாசப் படுகுழிகளில் ஒன்றாகும். என ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) அறிவித்தார். Book :87
பாடம் : 1 அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் அடையும் பாவமும், இம்மையிலும் மறுமை யிலும் அவனுக்குரிய தண்டனையும். அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக (இறைவனுக்கு) இணை வைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும். (31:13)2 அல்லாஹ் கூறுகின்றான்: நீர் (இறைவனுக்கு) இணைவைத்தால், உம் நன்மைகள் (யாவும்)...
6919. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, அல்லது ‘பொய் பேசுவது’ ஆகியன பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பொய் சாட்சி’ என்பதை...
6920. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) தூதரே! பெரும் பாவங்கள் எவை?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவனுக்கு இணை கற்பிப்பது’ என்றார்கள். அவர், ‘பிறகு எது?’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு தாய்...
6940. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) தொழுகையில், ‘இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ, ஸலமா இப்னு ஹிஷாம், வலீத் இப்னு வலீத் ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா! (கடும் பகை...
பாடம் : 1 இறைமறுப்பைவிட அடி, உயிரிழப்பு, அவமானம் ஆகியவற்றை ஒருவர் ஏற்பது.3 6941. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும்...
6942. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (கூஃபா பள்ளிவாசலொன்றில் கூடியிருந்த மக்களிடம்) ஸயீத் இப்னு ஸைத்(ரலி) கூறினார்: நான் இஸ்லாத்தை ஏற்றதற்காக உமர் அவர்கள் என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டுள்ளேன். உஸ்மான்(ரலி) அவர்களுக்கு நீங்கள் செய்த...
பாடம் : 1 தந்திரங்களைக் கைவிடல்2 ஒரு மனிதர் சத்தியம் முத-யவற்றில் எதை எண்ணுகிறாரோ அது தான் அவருக்குக் கிட்டும். 6953. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மக்களே! எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத்...
பாடம் : 2 தொழுகை விஷயத்தில் தந்திரம் செய்தல் 6954. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாத வரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4 Book : 90
பாடம் : 3 ஸகாத்(தைக் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கத்)தில் தந்திரம் செய்வதோ, ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி,ஒன்றுசேர்ந்திருப்ப வற்றைப் பிரிப்பதோ பிரிந்தவற்றை ஒன்று சேர்ப்பதோ கூடாது.5 6955. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அல்லாஹ்வின் ஆணைப்படி) கடமையாக்கிய ஸகாத்தைப் பற்றி எனக்கு அபூ...
பாடம் : 1 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் அருளப்பெற்ற இறைஅறிவிப்பு (வஹீ) உண்மைக் கனவாவே இருந்தது. 6982. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு...
பாடம் : 2 நல்லோரின் கனவு அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை நனவாக்கிவிட்டான்; அல்லாஹ் நாடினால்,நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சமற்றவர்களாகவும் தலையை மழித்துக் கொண்டவர்களாகவும் (அல்லது) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். (அப்போது...
பாடம் : 3 கனவு அல்லாஹ்வாலேயே தோன்றுகிறது. 6984. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். என அபூ கத்தாதா அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.4 Book : 91
பாடம் : 1 நீங்கள் ஒரு வேதனை குறித்து எச்சரிக்கை யாக இருங்கள். அது (வரும் போது) உங்களில் அநீதியிழைத்தவர்களை மட்டும் தாக்குவ தில்லை எனும் (8:25ஆவது) இறைவசனம்2 தொடர்பாக வந்துள்ள செய்திகளும் நபி (ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை செய்து...
7049. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான்,...
பாடம் : 1 அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களில் பொறுப்பு(ம் அதிகாரமும்) உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள் எனும் (4:59ஆவது) இறைவசனம்.2 7137. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக்...
7138. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான்....
பாடம் : 2 ஆட்சித் தலைவர்கள் குறைஷியராய் இருப்பார்கள்.4 7139. முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் குறைஷியரின் தூதுக் குழுவில் ஒருவனாக முஆவியா(ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களுக்கு, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள், ‘விரைவில் கஹ்தான் குலத்திலிருந்து அரசர்...
பாடம் : 1 எதிர்பார்ப்பு குறித்து வந்துள்ளவையும், (இறைவழியில்) உயிர்த் தியாகம் செய்வதை எதிர்பார்ப்பதும். 7226. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என்னுடன் (அறப்போரில்) கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிடுவதைப் பலரும் விரும்பமாட்டார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள்...
7227. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டுப், பிறகு கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன். அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃரஜ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூ...
பாடம் : 2 நன்மையை எதிர்பார்த்தல் உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும்… என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.3 7228. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்னிடம் உஹுத் மலை அளவிற்குத் தங்கம் இருந்தாலும், அதிலிருந்து ஒரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்து...
பாடம் : 1 தொழுகை அறிவிப்பு (பாங்கு), தொழுகை, நோன்பு, பாகப் பிரிவினை மற்றும் இதரச் சட்டங்கள் ஆகியவற்றில் வாய்மையான ஒருவரின் செய்தியை அனுமதிப்பது தொடர்பாக வந்துள்ளவை.2 அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களில் ஒவ்வொரு குழுவினரிலிருந்தும் சிலர் புறப்பட்டுச் சென்று, மார்க்கத்தைக்...
7247. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது’ அல்லது ‘அவர் அழைப்பது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும்...
7248. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பிலால் (ரமளான் மாதத்தின்) இரவில் முன்னறிவிப்புக்காகப் பாங்கு) அழைப்புக் கொடுப்பார். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்கு) அழைக்கிற வரை உண்ணுங்கள்; பருகுங்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6 Book :95
பாடம் : 1 எதிர்பார்ப்பு குறித்து வந்துள்ளவையும், (இறைவழியில்) உயிர்த் தியாகம் செய்வதை எதிர்பார்ப்பதும். 7268. தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின்...
7269. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்கள் இறந்த) மறுநாள் முஸ்லிம்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தபோது உமர்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். அபூ...
7270. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம்முடன் அணைத்துக் கொண்டு, ‘இறைவா! இவருக்கு வேதத்தைக் கற்றுக்கொடுப்பாயாக’ என்றுசொன்னார்கள்.4 Book :96
பாடம் : 31 இறைவனின் நாட்டமும் விருப்பமும்.104 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் நாடினாலன்றி (எந்தவொன்றையும்) நீங்கள் நாடமாட்டீர்கள். (76:30) (நபியே!) கூறுக: அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்துக்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்… (3:26). (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும்...
7372. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக்...
7373. முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் அவனையே...
குர்பானிக்குரிய நாட்கள் எவை? கடமையாக்கப்பட்ட ஹஜ் மற்றும் கொண்டாட்டத்திற்குரிய தினமான ஹஜ் பெருநாள் ஆகியவற்றில் செய்யப்படும் வணக்க வழிபாடுகளில் குர்பானி கொடுப்பது முக்கியமான ஒன்றாகும். முஸ்லிம்கள் காலம் காலமாக துல்ஹஜ் மாதம் பிறை 10 அன்றும், அதைத் தொடர்ந்து பிறை...
தவ்ஹீத் ஜமாஅத்