بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
தூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
பணமாக பித்ரா கொடுக்கலாமா? கேள்வி : ரமலான் மாதம் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திரட்டி விநியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணமாகத் திரட்டி விநியோகம் செய்வது நபிவழிக்கு முரண் இல்லையா என்று...
வங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா?வங்கிகளில் ஆவணங்களைப் பாதுகாக்கும் பனிகளைச் செய்யலாமா? கேள்வி : மார்க்கம் தடை செய்த மதுபான விற்பனை நிலையம் போன்றவைகளிலும், வங்கிகளிலும் தூய்மைப் பணிகள், வாட்ச்மேன் பணி, வெளி வேலைகள் செய்து கொடுத்தல் ஆகிய...
கேள்வி : இஸ்லாமிய வங்கியில் கடன் வாங்குவது கூடுமா? பதில் நம் நாட்டில் உள்ள சில இஸ்லாமிய நிறுவனங்களும் அபுதாபி போன்ற சில முஸ்லிம் நாடுகளில் உள்ள வங்கிகளும் ஷரீஅத் பைனான்ஸ் என்ற பெயரில் தந்திரம் செய்து வட்டி வாங்கிக்...
கேள்வி : அதாவது ஒருவரிடம் டாலர் உள்ளது. இந்திய ரூபாயாக மாற்றி தருவதற்கு குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை நாம் செய்யலாமா? அஜ்மல் பதில் : ஒரே வகையான நாணயத்திற்குள் நடக்கும் நாணய மாற்றுதல். வெவ்வேறு வகையான நாணயங்களுக்குள்...
கேள்வி : தரகுத் தொழில் கூடுமா? நூர்தீன் பதில்: நமக்கு ஒரு வீடு வாடகைக்கோ, விலைக்கோ தேவை என்றால் அதற்கேற்ற வீடுகள் எங்கெங்கே உள்ளன என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்க முடியாது. நாம் நமது வீட்டை அல்லது ஏதாவது சொத்தை...
கேள்வி : உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா? முஹம்மத் யாஸீன் பதில் : வட்டி வாங்குவதையும், வட்டி கொடுப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். صحيح مسلم 4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ...
கேள்வி : வருமான வரியை குறைத்து செலுத்த எல்.ஐ.சி, முட்சுவல் பன்ட் போன்றவை போடலாமா? அல்லது வேற வழி இருக்கிறதா?. நான் ஹலாலான முறைப்படி வாழ விரும்புகின்றேன். பதில் தரவும்? ஹிதாயதுல்லாஹ் பதில் : நம்முடைய வருமானத்தில் குறிப்பிட்ட அளவு...
கேள்வி : ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா? பதில்: ஷேர் மார்க்கெட் என்பது என்ன என்பதை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். உதாரணத்துக்காக ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 100 ரூபாய் மதிப்புள்ள தொழிலில் 30 ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு...
கேள்வி : வங்கிகளில் வேலை செய்யலாமா? பதில் : பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் ஊழியராகப் பணியாற்றுவது கூடாது. அந்த ஊழியர் செய்யும் பணி, பாவமில்லாத காரியமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது தீமையைச்...
கேள்வி : பிராவிடண்ட் ஃபண்ட் கூடுமா? பதில் : அரசு அலுவலகங்களிலும், பெரிய நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் சிரமப்படக் கூடாது என்பதற்காக ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நமது...
கேள்வி : ஏலச்சீட்டு கூடுமா? பதில் : ஏலச்சீட்டு என்ற பெயரில் நடக்கும் அநியாயத்துக்கு நம் சமுதாயத்திலும் சிலர் பலியாகி உள்ளனர். அது தவறு என்ற ஞானம்கூட அவர்களுக்கு இல்லை. ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு என்று வைத்துக் கொள்வோம்....
கேள்வி : ஒத்திக்கு விடுதல் கூடுமா? பதில் : சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொண்டு வீட்டை ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். வீட்டை ஒப்புக் கொண்டவர் பெரிய தொகையைக் கொடுத்துள்ளதால் வாடகை ஏதும்...
கேள்வி : தவணை முறையில் வியாபாரம் செய்யலாமா? பதில் : தவணை வியாபாரம் பற்றி நாம் விரிவாக விளங்க வேண்டியுள்ளது. ரொக்கமாக மட்டும் அல்லது கடனாக மட்டும் ஒருவர் வியாபாரம் செய்தால் அதில் இரட்டைவிலை வைப்பது குற்றமாகாது. அதிக அளவில்...
கேள்வி : இன்சூரன்ஸ் கூடுமா? பதில் : இன்ஷ்யூரன்ஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத நவீன பிரச்சனையாகும். சமீப காலத்தில்தான் இது வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆயினும் இது குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில்...
கேள்வி : ஷரியத் பைனான்ஸ் குறித்து விளக்கவும் பதில் : வட்டி இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதாலும், வட்டியை வெறுப்பவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் அதிகமாக உள்ளதாலும் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். வட்டி இல்லாத...
கேள்வி : வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா? பதில் : நம்முடைய சேமிப்புக்கு வங்கிகள் தரும் வட்டியை வாங்கக் கூடாது என்பதால் வங்கிகளில் கணக்கு வைக்கக் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. வங்கிகள் தங்களின் இருப்புகளை வட்டிக்குக் கொடுக்கின்றனர்....
கேள்வி : வங்கிகள் மூலம் கிடைக்கும் வட்டியை வாங்கலாமா? பதில் : வங்கிகளில் நாம் பணத்தைச் சேமித்து வைக்கிறோம். பணத்தைப் பாதுகாக்கவும், எளிதில் பணப்பரிமாற்றச் செய்யும் வசதிக்காகவும்தான் நாம் வங்கிகளில் பணத்தைச் சேமிக்கிறோம். ஆனாலும் நாம் விரும்பாவிட்டாலும் வங்கிகள் நம்...
கேள்வி : நாணயம் மாற்றும் முறை என்றால் என்ன? பதில் : ஒரு நாணயத்துக்குப் பகரமாக இன்னொரு நாட்டு நாணயத்தை மாற்றும் போது எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கும். பத்து சவூதி ரியாலுக்கு நூறு இந்திய ரூபாய் என்று மாற்றினால் பத்துக்கு...
கேள்வி : வட்டி என்றால் என்ன? பதில் : இஸ்லாத்தில் எவை வட்டியாகக் கருதப்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளனர். ரொக்கமாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி ஏற்படும். கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும்...
கேள்வி : வட்டிக்கு அறவே அனுமதி இல்லையா? பதில் : இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும். வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. வட்டி வாங்குவோர்...
கேள்வி : அடைமானம் வைக்கலாமா? பதில் : 2068 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ، الرَّهْنَ فِي السَّلَمِ، فَقَالَ: حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ...
கேள்வி : கடன் கொடுத்த பின் பணமதிப்பு குறைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? பதில் : கரன்ஸி நோட்டுகள் நடைமுறைக்கு வந்த பின் பணமதிப்பில் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. இன்று ஒரு லட்சம் ரூபாய் நாம் கடனாகக் கொடுக்கிறோம். இந்தக்...
கேள்வி : கடனை எழுதிக் கொள்ளலாமா? பதில் : கொடுக்கும் கடன்களை எழுதிக் கொள்ள வேண்டும்; இதில் தயவு தாட்சண்யம் பார்க்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. வெளித்தோற்றத்தை நம்பி கடன் கொடுத்து பலர் ஏமாந்து போகின்றனர். ஒரு மனிதன்...
கேள்வி : கடனை அடைக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாவிட்டால் என்ன செய்வது? பதில் : வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடியாமல் சிறிதளவுதான் கடன்பட்டவரிடம் வசதி இருக்கிறது என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்...
கேள்வி : கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்யலாமா? பதில் : கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரை நெருக்கும்போது கடன் வாங்கியவர் பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை வத்தால் பரிந்துரை செய்து அவரது சிரமத்தைக் குறைப்பதற்கு உதவ வேண்டும். நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக...
கேள்வி : கடனை தள்ளுபடி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? பதில் : ஒருவர் நம்மிடம் கடன் வாங்கி விட்டு மரணித்து விட்டால் கடனுக்குத் தக்கவாறு அவர் செய்த நன்மைகள் நமக்கு கிடைத்து விடும். ஆனால் நாமாக முன்வந்து கடனைத்...
கேள்வி : கடனை நிறைவேற்றிய பிறகுதான் சொத்தைப் பிரிக்க வேண்டுமா? பதில் : ஒருவர் மரணித்த பின்னர் அவர் செய்த மரணசாசனம் எனும் வஸிய்யத்தையும், கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் வாரிசுகள் சொத்துக்களைப் பிரிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது....
கேள்வி : கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை என்ன? பதில் : கடன் வாங்கிவிட்டு குறித்த நேரத்தில் அதைக் கொடுக்க முடியாவிட்டால் சிலர் பொய்களைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கின்றனர். அல்லது தலைமறைவாகி விடுகிறார்கள். அல்லது கடன் கொடுத்தவரையே மிரட்டுகிறார்கள். உன்னிடம்...
கேள்வி : அழிகிய முறையில் கடனை அடைப்பது எவ்வாறு? பதில் : கடன் வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அழகிய முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும். இயலுமானால் வாங்கியதை விடச் சிறந்ததை, அல்லது பெரியதைக் கொடுக்க வேண்டும். இது வட்டியில்...
கேள்வி : கடனை திரும்பக் கொடுக்காமல் இழுத்தடிக்கலாமா? பதில் : கடன் வாங்குவதில் இரண்டு நிலைகள் உள்ளன. எந்த வழியும் இல்லாமல் மிகவும் அவசியத் தேவைக்காக வாங்கும் கடன் ஒருவகை. இதைப் பெரும்பாலும் தவிர்க்க முடியாது. இப்படிப்பட்ட கடன் வாங்கியவர்கள்...
கேள்வி : கடன் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? பதில் : கடன் விஷயத்தில் கண்டிப்பு கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. 2295 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ...
கேள்வி : பேராசை கொள்ளாமல் இருக்க இஸ்லாம் கூறும் வழி என்ன? பதில் : மற்றவர்களை விட நமக்குச் செல்வம் குறைவாக இருந்தால் அல்லது அவ்வாறு கருதினால் அதன் காரணமாக நம்முடைய நிம்மதி பறிபோய் விடுகிறது. மன உளைச்சலுக்கு நாம்...
கேள்வி : பேராசை என்றால் என்ன? பதில் : ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும். அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக...
கேள்வி : பேராசையில் இருந்து எப்படி விடுபடுவது? பதில் : பேராசையில் இருந்து எப்படி விடுபடலாம்? இதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர். நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்தைத் திரட்டினாலும் அது உண்மையில் நம்முடையது அல்ல. பல...
கேள்வி : வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா? பள்ளிவாசலில் நோன்பு திறக்க தரும் உணவுகளை உண்ணலாமா? காரணம் வட்டி வாங்குபவர் கூட அதை வழங்கி இருக்கலாமே? முஹம்மது ரியா பதில் : இது விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயமாகும். இரண்டு...
கேள்வி : மொத்த வருமானத்தில் செலவு போக மார்க்கப் பணிக்காக மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? அல்லது மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? முஹம்மது சைபுல்லா. பதில் : முஸ்லிம்கள் தங்கள்...
கேள்வி: பணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருக்கின்றதே ஏன்? பதில்: பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையே இடைவெளி என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டு எங்குமே உள்ளது தான். ஆனால் மற்ற சமுதாயத்துப் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை...
வங்கியில் வரும் வட்டியை தர்மம் செய்யலாமா? கேள்வி : நான் வங்கியில் பிக்ஸட் டெப்பாஸிட் செய்தேன். அதில் கிடைக்கும் வட்டி ஹராம் என்று தெரிய வந்ததும் தனியாக ஒரு அக்கவுண்ட் திறந்து அந்த வட்டியைப் போட்டு வருகின்றோம். உதவி...
கேள்வி : நல்வழியில் செலவிடும் போது பெருமைக்காகச் செய்கிறோனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது ஷைத்தானின் வேலையா? முஹம்மத் சைபுல்லா. பதில்: பொருளாதாரத்தைச் செலவிடும் போது இரகசியமாகவும் செலவிடலாம். பகிரங்கமாகவும் செலவிடலாம். தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே....
வங்கியில் ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா? அப்துந் நாஸிர், கடையநல்லூர் கேள்வி: வங்கியில் ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா? இப்பிரிவில் ஆவணங்களைப் பாதுகாக்கின்ற வேலை மட்டும்தான் நடைபெறும். வட்டி வாங்குதல், கொடுத்தல், கணக்கெழுதுதல், சாட்சியாக இருத்தல் போன்ற எந்த ஒன்றிலும்...
கேள்வி : என்னுடைய ஜகாத் பணத்திலிருந்து என் தாயின் கடனை நான் அடைக்கலாமா? செய்யது அன்வர் பதில் : பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய...
தவ்ஹீத் ஜமாஅத்