88:6918 இஸ்லாத்திலிருந்து வெளியேறியார்


பாடம் : 1 அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் அடையும் பாவமும், இம்மையிலும் மறுமை யிலும் அவனுக்குரிய தண்டனையும். அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக (இறைவனுக்கு) இணை வைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும். (31:13)2 அல்லாஹ் கூறுகின்றான்: நீர் (இறைவனுக்கு) இணைவைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டவாளர்களில் ஒருவராகிவிடுவீர். (39:65) 

6918. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
‘யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் ‘எங்களில் யார்தாம் தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லை?’ என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்குப் பொருள் அதுவன்று. (அது இணைவைப்பையே குறிக்கிறது.) நிச்சயமாக இணைவைப்பதே மிகப் பெரும் அநியாயமாகும் என்று (அறிஞர்) லுக்மான் கூறியதை(க் குர்ஆனில் 31:13 வது வசனத்தில்) நீங்கள் செவியுறவில்லையா? 
Book : 88