73:5545 குர்பானி (தியாக)ப் பிராணிகள்

பாடம் : 38 நிர்ப்பந்தத்திற்குள்ளானவன் (செத்தவற்றை) உண்பது.58 அல்லாஹ் கூறுகின்றான்: நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மை யானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அவனுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (தானாகச்) செத்த பிராணி, உதிரம், பன்றியிறைச்சி, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட பிராணி ஆகியவற்றையே உங்களுக்கு அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆயினும், எவரேனும் விருப்பமில்லாமலும் வரம்பு மீறாமலும் (உண்ண) நிர்ப்பந்திக்கப் பட்டால், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. (2:172, 173) அல்லாஹ் கூறுகின்றான்: ஆனால், உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமை யினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (விலக்கப் பட்டவற்றைப் புசித்து)விட்டால் (அது குற்றமாகாது) (5:3). அல்லாஹ் கூறுகின்றான்: (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றையே புசியுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் சாப்பிடாம லிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றிச் சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான். ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரண மாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழிகெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச் செல்பவர்களைத் திண்ணமாக உம்முடைய இறைவன் நன்கறிவான் (6:118,119). அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுக: (தாமாகச்) செத்தவை, வடியும் இரத்தம், பன்றி மாமிசம் ஆகிய வற்றைத் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காண வில்லை.-ஏனெனில், நிச்சயமாக இவை அசுத்தமாகும்.- அல்லது அல்லாஹ் அல்லாத வற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் (அதுவும் தடுக்கப்பட் டுள்ளது). ஆனால், எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு, வரம்பு மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் (அது குற்றமாகாது; ஏனெனில்) திண்ணமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கின்றான் (6:145). அல்லாஹ் கூறுகின்றான்: (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வழிபடுகின்றவர்களாக இருப்பின் அவனது அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். (நீங்கள் புசிக்கக் கூடாது என்று) உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்: தானே செத்ததும்,இரத்தமும், பன்றியிறைச்சியும், எதன் மீது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டதோ அதுவுமேயாகும். ஆனால், எவரேனும் வரம்பு மீற வேண்டு மென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் நிர்ப்பந்திக்கப் பட்(டு அவற்றைப் புசித்துவிட்)டால் (அது குற்றமாகாது. ஏனெனில்) திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கருணை உடையவனாகவும் இருக்கின்றான் (16:114, 115). பாடம் : 1 குர்பானி கொடுப்பது நபிவழியாகும். இப்னு உமர் (ரலி) அவர்கள், அது நபி வழியும் (மக்களால்) அறியப்பட்ட ஒரு நடை முறையுமாகும் என்று சொன்னார்கள்.2 
5545. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார் 
(ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப்பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது’ என்று கூறினார்கள். 
உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்து விட்டிருந்த) அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) என்னிடம் ஒரு வயதுடைய (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது’ என்று கூறினார்கள்.3 
‘(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழி முறையைப் பின்பற்றியவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என மற்றோர் அறிவிப்பில் உள்ளது. 
இதையும் பராஉ(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.4 
Book : 73