68:5258 மணவிலக்கு (தலாக்)

5258. யூனுஸ் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் 
நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ‘ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். (அது குறித்து மார்க்கம் என்ன தீர்ப்புச் செய்கிறது?)’ என்று கேட்டேன் அதற்கு அவர்கள், ‘இப்னு உமர் (அதாவது நான்) யார் என்று உங்களுக்குத் தெரியும். 
நான் மாதவிடாய்ப் பருவத்திலிருந்து என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். எனவே, (என் தந்தை) உமர்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துத் தெரிவித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு அவளை மணவிலக்குச் செய்ய விரும்பினால் அவளை அவர் மணவிலக்குச் செய்து கொள்ளட்டும்’ என உத்தரவிடுங்கள்’ என்று கூறினார்கள். 
அறிவிப்பாளர் கூறுகிறார்: 
நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (மனைவி மாதவிடாயிலிருந்தபோது தாங்கள் அளித்த மணவிலக்கை) நபி(ஸல்) அவர்கள் ‘தலாக்’ என்றே கருதினார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்து கொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?’ என்று கேட்டார்கள்.6 
Book :68