46:2442 அநீதிகளும் அபகரித்தலும்

பாடம் : 3 ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்-முக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனைக் கைவிடவும் மாட்டான். 
2442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். 
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
Book : 46