44:2410 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

பாடம் : 1 (வழக்கில் சம்பந்தப்பட்டவரை) விசாரணைக்காகக் கொண்டு போய் நிறுத்துவது மற்றும் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தகராறு. 
2410. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
‘ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்’ என்று கூறினார்கள். 
‘நபி(ஸல்) அவர்கள், ‘வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்’ என்று கூறினார்கள் என எண்ணுகிறேன்’ என்று அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார். 
Book : 44