31:2008 தராவீஹ் தொழுகை

பாடம் : 1 ரமளான் நோன்பு ஒரு கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆகக் கூடும்! (2 : 183) 
2008.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள். 
‘ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!’ 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
‘(ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது!’ என்று இமாம் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார். 
Book : 31