24:1397 ஸகாத்தின் சட்டங்கள்

1397. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்’ என்றார்கள். அதற்கவர், ‘என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக எதையும் செய்ய மாட்டேன்’ என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், ‘சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்’ என்றார்கள். 
Book :24