22:1227 தொழுகையில் ஏற்படும் மறதி

பாடம் : 3 (நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டாவது அல்லது மூன்றாவது ரக்அத்தில் (மறதியாக) சலாம் கொடுத்துவிட்டால் வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீளமாகவோ இரண்டு சஜ்தாச் செய்வது. 
1227. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
அவர்கள் எங்களுக்கு லுஹரையோ அஸரையோ தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். அப்போது துல்யதைன்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா?’ எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம், ‘இவர் கூறுவது உண்மைதானா?’ எனக் கேட்டபோது அவர்களும் ‘ஆம்’ என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுகை நடத்திவிட்டு இரண்டு ஸஜ்தாக்களும் செய்தார்கள். 
இப்னு ஸுபைர் மக்ரிப் தொழுகை நடத்தியபோது இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டுப் பேசியும்விட்டார். பின்பு (நினைவு வந்ததும்) மீதம் உள்ளதைத் தொழுதார். பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்துவிட்டு இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் எனக் கூறினார்’ என ஸஅத் அறிவித்தார். 
Book : 22