21:1202 தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

பாடம் : 4 தொழும் போது அறியாத நிலையில் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு அல்லது அவரை நோக்கி சலாம் கூறுதல். 
1202. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
அத்தஹிய்யாத் ஓதும்போது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒருவரின் மீது மற்றவர் ஸலாம் கூறி வந்தோம். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் ‘சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்கைகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத்(ஸல்), அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறுங்கள்! இவ்வாறு நீங்கள் கூறினால் வானம், பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறியவர்களாவீர்கள்’ எனக் குறிப்பிட்டார்கள். 
Book : 21